Saturday, July 28, 2007

சூர்ப்பனகை vs அனுமன்

ராமாயண ரகசியம் என்று நான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்.

அதன் தொடர்பாக ராமாயண விஷயமாக பல பதிவுகள் இறைவன் அருளால் யதேச்சையாக கிடைக்கப்பெட்டது.


எனது அருமை நண்பர் - கோவை திரு. ராஜகோபாலன் சேஷாத்ரி CA அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில ராமாயண ரகசியங்களை இங்கு பதிகிறேன்.


முதலாவது:


எப்போதுமே பெருமாளையும், தாயாரையும் சேர்ந்தே சேவிக்கவேண்டும். தனியாக்கவே கூடாது.



உதாரணம்:



சூர்ப்பனகை: சீதையைய்த்தவிர்த்து ஸ்ரீ ராமன் தான், அவளுக்கு வேண்டியதாயிற்று. சீதாதேவியை விட்டுவிடு என கெஞ்சி, ஸ்ரீ ராமனையே மணக்க விரும்பினாள், வேண்டினாள். பிரித்துவிட நினைத்தாள். முடிவு, மூக்கு, காது போயிற்று.

ராவணன்: ஸ்ரீ ராமனையே எதிர்த்தான்.
முடிவு, ராஜ்யம், பிள்ளைகள், நாடு, சகோதரர்கள், (எதைத்தான் அவன் இழக்கவில்லை.) எல்லாவற்றையுமே இழந்தான். அவனுடைய பத்து தலைகளுமே போயிற்று.


பக்த ஹனுமான்: ஸ்ரீ ராமனையும், சீதாபிராட்டியையுமே மனதில் கொண்டு ஹனுமான் சேர்ந்தே பூஜித்தார்.


பலன்:
1. வால்மீகி அவருக்கென்றே ஒரு முழு காண்டத்தையே ஒதுக்கி அதில் அவர் புகழையே பாடிவைத்தார்.


2. ஸ்ரீ ராமனையே சதா ஸ்மரணை செய்யும் பாக்கியத்தால், சிரஞ்சீவியாக இன்றும் நம்மிடம் வாழ்கிறார், எங்கெங்கு ராமா என நினைத்த மாத்திரத்தில், அங்கு கைகட்டி, வாய்பொத்தி, கண்ணீர் மல்க நமது இருப்பிடம் தேடி வந்து, ஸ்ரீராம பஸ்ரீனையில் ஆழ்ந்து விடுகிறார்.


3. மேலும், ஸ்ரீ ராமனே அவரை கட்டித்தழுவி அவர் தோளில் கண்ணீர் மல்கும் பாக்கியம் அவருக்கே கிடைத்தது.


“ நீ எனக்கு சீதாதேவியின் சூடாமணியை என் கையில் கொடுத்து ‘கண்டேன் சீதையை’ என்று என்னிடம் அவள் செய்தியைத் தந்ததற்கு, என்னால் அதற்கு ஈடாக உனக்கு எதை கொடுப்பேன்?


எனக்காக நூறு யோஜனை சமுத்ரத்தைத் தாண்டி, லங்கைக்கு சென்று, சீதையிடம் என் கணையாழிக்கு பதிலாக அவள் தான் சூட்டிக்கொள்ளும் சூடாமணியை எனக்காக கொண்டு வந்திருக்கிறாய். இது யாராலும் செய்யமுடியாத மிகப்பெரிய கார்யம். உனக்கு இணையாக எவ்வுலகிலும் யாருமே இருக்கமுடியாது. இச்செய்கைக்கு ஈடாகக்கொடுப்பற்கு என்னிடம் ஒன்றுமே இல்லையே. என் செய்கேன், புரியவில்லையே.

ஆம், ஆம், ஓன்றே ஒன்று இருக்கிறது, அதையே உனக்கு த்தந்து விடுகிறேன். அது நானே தான், உனக்கு என்னையே அர்ப்பணித்தேன். என்னையே எடுத்துக்கொள். இனி நான் உனது உடமை. என்னை எடுத்துக் கொள்வாயா?” என ---- ஸ்ரீராமன் தன் பக்தன் ஹனுமானின் தோளில் கண்ணீர் மல்கி, இப்படி நினைத்து ஹனுமானை கெஞ்சி, இருகக்கட்டிக்கொண்டி ருப்பாரோ?


தன்னையே ஹனுமனுக்கு உடமையாக்கிய ஸ்ரீராமன் இப்படியும் நினைத்திருப்பாரோ? இருக்கலாம் அல்லவா!!!

4. சீதம்மா, அவரை வத்ஸ, (குழந்தாய்) என லவகுசருக்கு முன், அவரை அழைத்து, சீதாராமனுக்கே முதல் பிள்ளையாக்கினார். இப்பேர்பட்ட பதவி வேறு யாருக்காவது கிட்டியதா? தெரிந்தால் சொல்லுங்களேன்.


*****ஸ்ரீசீதாராமஜயம்****

1 comment:

கானகம் said...

வைதிகஸ்ரீ...

//எப்போதுமே பெருமாளையும், தாயாரையும் சேர்ந்தே சேவிக்கவேண்டும். தனியாக்கவே கூடாது.//

நல்ல தகவல்..அதற்கு காரணங்கள் மற்றும் அதனை செய்தவர்கள் அணுபவித்த பலன்களும் தெளிவாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்..


// சீதம்மா, அவரை வத்ஸ, (குழந்தாய்) என லவகுசருக்கு முன், அவரை அழைத்து, சீதாராமனுக்கே முதல் பிள்ளையாக்கினார். இப்பேர்பட்ட பதவி வேறு யாருக்காவது கிட்டியதா? தெரிந்தால் சொல்லுங்களேன்//

நானும் ராம பக்தன்தான்..அதேசமயம் எனது எல்லா பிரச்சினைகளையும் களைந்து நல் வாழ்க்கை அளித்தது கல்லுப்பட்டி அக்ரஹார ஆஞ்சனேயரே..

ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம...

உங்களுக்கு எல்லா நலனும் ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தி அருள்வானாக...

ஜெயக்குமார்