Monday, May 29, 2006

ராமாயண உட்பொருள்

ராமாயண சாரம்

தபஸிலும் ஸ்வாத்யாயத்திலும் (வேத படிப்பு) மிகச்சிறந்த வால்மீகி ராமாயண காவியம் எழுதினார் என்றால், அதில் மிகச் சிறந்த வேத வேதாந்தங்களை அடக்கி இருக்கிறார்.

ஹிந்து புராணங்களில் symbolism அதிகம் இருக்கின்றன. அவை சொல்ல வரும் விழயங்கள் நுட்பமானவை. உள்கருத்துக்களை நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

Ideal woman ஆன பிராட்டி சீதா பெண்களுக்கு இலக்கணமாக பேசப்படுகிறாள். பிராட்டியை ஜீவனாக உருவகப்படுத்தி, அந்த ஜீவன் எப்படி ஆன்மீக படியேறி பரமாத்மாவை அடைவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் வழி.

ராம என்கிற பதத்துக்கு எல்லா விஷயங்களிலும் ரமிக்கின்றவன் என்று அர்த்தம். (who revels in all beings and things…) எல்லாவற்றிலும் நீக்கமற கலந்திருக்கும் ஆத்மா தான் ராமன். அந்த ஆத்மா இணைந்திருப்பது சீதை என்கிற மனதுடன். சுயகட்டுப்பாடு (self control) இருக்கும் இடத்தில் ஆத்மா என்கிற ராமன் வெளிப்படுவான். எங்கு ஒன்றுக்கொன்று விரோதம் இல்லாமல் புலன் கட்டுப்பாடு (no conflict = a+yodhya) இருக்கிறதோ, அங்கு ராமன் என்கிற ஆத்மா வெளிப்படும்.

ராமன் என்கிற ஆத்மா, சீதை என்கிற மனதுடன் இணையும்போது சம்சாரம் (life) மற்றும் விஷயங்கள் ஏற்படுகின்றன.

சீதை என்கிற மனது எங்கிருந்து வந்தது என்று யாராலும் சொல்ல முடியாது. (அத்வைத்த்தில் இது தீராத தர்க்கம். சங்கரர் இதை அனாதி என்று சொல்லி விட்டுவிட்டார்...)

சீதையும் இந்த பூமியிலிருந்து தோன்றி பூமியிலேயே மறைகிறாள். மனசு எங்கிருந்து தோன்றுகிறது; சமாதி நிலையில் எங்கு மறைகிறது என்று அறிவார் இல்லை.

சீதை என்கிற மனம், ராமன் என்கிற ஆத்மாவுடன் இரண்டற கலந்து வெளி விவகாரங்களில் லயிக்காத வரை பூர்ணமான ஆனந்த நிலையில் இருக்கிறது. (perfect harmony) அது அயோத்தியாக இருந்தாலும், காடாக இருந்தாலும் சரி.

சீதை தங்கமானுக்கு ஆசைப்படும்போது, மனம் கீழான லௌகீக விஷயங்களில் ஆசைப்படும்போது, புறத்தே விரிந்து புலன் கருவிகளை நாட ஆரம்பிக்கிறது. இதுவே ஜீவனுக்கு இறங்கு முகம்.

ராமனின் (ஆத்மாவின்) பூர்ணத்துவத்தை மறந்த / அறியாத சீதை (மனம்), லட்சுமணனை (தபஸ் – முயற்சி) ராமனுக்காக ஏவுகிறாள். இதனால், சீதை (மனம்) பத்துதலை ராவணனுக்கு (பத்து புலன் கருவிகள்) எளிதாக வசப்படுகிறாள். தருமமும், தபஸூம் நிறைந்த உலகிலிருந்து, சீதை லங்கைக்கு (விஷயங்களால் நிறைந்த சம்சாரத்திற்கு material world) கடத்திச் செல்லப்படுகிறாள்.

பின் மனம் பல கஷ்டங்களை அனுபவித்து வருந்தி, ஒரு முகப்பட்டு ராமனுக்கு ஏங்கி சரணாகதி அடைகிறது.

ராமன் (self ஆத்மா) வாலி என்கிற காமத்தை வீழ்த்தி, வானரங்களை (நினைவுகள்) சேர்த்துக்கொண்டு சமுத்திரத்தை (விஷய சுகங்களாக தோன்றும் மாயை) தாண்டி லங்கையை அடைகிறான்.

அதாவது சீதை என்கிற மனம் உள்ளே திரும்பி ஆத்மாவிடம் இடையறாது லயித்தால் மனம் தன் அஸ்தித்வத்தை (இருப்பை) இழக்கிறது. பூர்ணமான புருஷனான ஆத்மா தன்னில் மனதை லயப்படுத்திக்கொண்டாலும், மனதால் பாதிக்கப்படுவது இல்லை.

ஜீவன் தன்னுடைய சுய சொரூபம் சுத்தப்பட்டு பரம்பதப்பட்ட (rehabilated) நிலையில் மனது ஆத்மாவில் ஒடுங்கி மறைகிறது. மோக்ஷ நிலையை எட்டிய ஆத்மாவுக்கு மனதால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. தன் ஆத்ம இன்பத்தில் (kingdom of life) லயித்த அதற்கு மனதின் தேவை இல்லாமல் போகிறது. அதனால், மனது காட்டுக்கு விரட்டப்படுகிறது.

ஆனால், மனஸ் ஆத்மாவின் தொடர்பின் காரணமாக ஞானம் பிறக்கிறது (லவ குசர்கள்). அவர்களின் சாரமாக ராமாயணம் உலகெங்கிலும் பரப்பப் படுகிறது.

இதுவே ராமாயணத்தின் சாரம். இதை உணர்ந்தவனுக்கு பிறப்பில்லை.

25 comments:

ஸ்ரீகாந்த் said...

Wonderful. I am thrilled by the vyakyanam. Srimad Ramayanam is such an ocean that reflects its wealth with respect to the level of the reader.

Regarding Sri Rama, I heard in one Upanyasam that, in ashtAkshara manthram (Om namo Narayanaya) the beejam is ra in narayanaya - because if we remove ra - it becomes na ayanaya - which alters the meaning completely - similarly in panchakshara manthram (Om nama sivaya ) the beejam is ma - if we remove this - it becomes na sivaya - meaning there is no sivan - contrary to the intended meaning - So these two beejaksharams are combined to become "Rama" !

SK said...

அனுமன் இல்லாத ராமாயண விளக்கமா?
ஏற்றுக்கொள்ள முடியவில்லையே, ஜயராமன்!

ஜயராமன் said...

மன்னிக்க வேண்டுகிறேன்.

அனுமன் இல்லாத இராமாயண காதை நடக்காது.

அனுமனின் தத்வார்த்தம் ரொம்பவும் பேமஸ். அனுமன் குருவின் வடிவம். இது பலதடவை எழுதப்பட்டதால் நான் விரிக்கவில்லை.

ஜீவன் பரமாத்மாவுடன் சேர குருவே வடிகால். பரமாத்மாவும் தானாக முயலாமல் பதப்பட்ட தன் ஆத்ம ஸ்வரூபத்தில் லயித்த ஜீவனிடம் குரு ரூபமாக வந்து ஞான அறிவை புகட்டி வீடு பெற வழி போதிக்கிறார்.

குருவே எல்லாம். குருவே அனுமன். அவனே இந்த பாவப்பட்ட ஜீவன்களுக்கு ஒரே நம்பிக்கை

நன்றி

SK said...

மிக்க நன்றி.
விளக்கம் பூர்த்தியானது!

இதையும் மேலே மூலப் பதிவில் சேர்த்து விட்டால், நலமென எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

ஜயராமன் அவர்களே. பாகவத ரகஸ்யம் என்ற ஒரு பழைய புத்தகத்தைச் சின்ன வயதில் படித்திருக்கிறேன். அதில் சுருக்கமாக இராமாயண ரகஸ்யத்தையும் சொல்லியிருப்பார்கள். அங்கு படித்தது இன்று உங்கள் பதிவைப் படித்த போது நினைவிற்கு வந்தது. மிக்க நன்றி.

johan-paris said...

ஜயராமன் அண்ணா!
நான் கேலிக்காக சொல்கிறேன் எனத் தவறாகப் புரியவேண்டாம். வெளிப்பொருளறியவெ விக்கலெடுக்குது. எங்களுக்கு இதில் ஏன்? உட்பொருள்-எனும் உபத்திரம்;
"கல்லைக் கண்டால்;நாயைக் காணவில்லை!;நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை. இதுக்கு உட்பொருள் வேறாம்; !
கடவுளே!! தமிழைக் கூடச் சரியாகத் தெரியாத எங்களுக்கு இவை பெரிய சோதனையாகவும்;எங்கள் நிலையை எண்ணி வேதனையாகவும் இருக்கிறது.
எடே! முண்டம் உனக்கு;உட்பொருள் புரியலையடா,,,,??? என்று சொல்லிச்சொல்லியே! எங்களிடமிருந்து; சமயத்தையும்;இலக்கியங்களையும்;இசையையும் தூரக் கொண்டு போறீங்களே!
இது உங்களுக்கே ஞாயமாகத் தெரிகிறதா!!!!
இனியாவது சாதாரண தமிழறிவு உடையவனுக்கும் ;புரியும்படி சமயத்தையோ;இலக்கியத்தையோ!இசையையோ! தருவீர்களா!?
யோகன் பாரிஸ்

ஜயராமன் said...

ஜோகான்,

தாங்கள் என் பதிவை கேலி செய்கிறீர்களா அல்லது நிஜமாகவே ஏதாவது கேட்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை.

உட்பொருள்களையும், இந்து மத அடிப்படை ஆன்மீக உண்மையையும் தெரிந்து கொள்ள எந்த தகுதியும் தேவையில்லை. இதற்கு தமிழ் மட்டுமே தெரிந்திருப்பது எப்படி ஒரு தடையாகும். இதெல்லாம், சில விஷமிகளின் பிரச்சாரம் அல்லவா? அதை நீங்கள் நம்பலாமா?

கடினமான உட்பொருட்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவோர் மிகவும் குறைவு. அவர்களுக்கு இதெயெல்லாம் சொல்லவேண்டும் என்று முன்வருவோர் அதனிலும் குறைவு. அவ்வாறு தெரிந்த உட்பொருட்களை அனுபவித்து மனதில் ஏற்போர் அதனிலும் குறைவு.

தமிழில் இந்த இந்து மத உட்பொருட்கள் ஆயிரமாயிரம் கொட்டிக்கிடக்கின்றன. சித்தர்கள் பாடலும், திருமந்திரம் முதலிய தெய்வீக பாடல்களும், தேவாரம், பிரபந்தம் முதலிய பக்தி இலக்கியங்களும் நேரிடையாக சொல்லாத்தையா உட்பொருட்கள் சொல்லிவிடப்போகின்றன? கல்லிலே சிவன் உண்டென்று சொல்லும் மூடர்காள் என்று திருமந்திர்ர் சொல்வதை ஆழ்ந்து படித்தால் இது விளங்கும். இதற்கு தமிழில் மறைத்துவிட்டார்கள் என்ற விஷ பிரச்சாரம் தேவையா?

நம் இந்தியாவில் கல்வி பொதுவாக வைக்கப்படவில்லை. ஒரு வைத்தியன் தான் அறிந்த தொழில் நுட்பங்களை கூட பொதுவாக சொல்வதில்லை. அதேபோலத்தான் இந்த விஷயங்களும். ஒரு தொழில் சேப்டிக்காக மறைக்கப்பட்டன.

மேலும், இந்த விஷயங்களில் ஆர்வம் இல்லாதவனுக்கு இதை சொல்லாதே என்று இந்துமதம் சொல்கிறது. இது மற்ற மதபிரசார்ர்களின் நேர் எதிர்கொள்கை.

மேலும், இந்து மதம் எல்லா நிலை மனிதர்களுக்கும் பொருந்துவது. ஆனால், அவர்களுக்கு அது சொல்லும் பக்குவங்களும் வெவ்வேறு. சாதாரண, தினசரி வாழ்க்கையில் உழலுபவனுக்கு கர்மங்களை செய், பலனை நான் அளிக்கிறேன் (பலனை எதிர்பாராதே அல்ல. அது படிக்காத மூடர்களின் கீதை அறிவு...) என்று சொல்கிறது. இந்த சடங்குகளால் இந்த பலன் கிடைக்கும் என்கிறது. கொஞ்சம் உயர்ந்து போய் விட்டால், இறைவனிடம் காதல் (பக்தி) செய், மற்றவற்றில் ஆசையை விடு என்கிறது. மேலும் உயர்ந்தவனுக்கு, இந்து மதம் அல்டிமேட் உண்மையை சொல்கிறது. 'அட மடையா, இறைவன் என்பவன் தனியாக இல்லைடா. அது நீதான்டா. எல்லாம் பிரம்ம மயம்டா. நீ உனக்குள்ளே இறைவனை பார். எப்போதும் அழியாத இன்பம் அடைவாய்' என்கிறது. நம் தகுதிக்கு ஏற்ப ட்ரீட்மெண்ட். இதுதான் இந்து மத்த்தின் சிறப்பு. எல்லோருக்கும் ஒரே மருந்து என்று இல்லை.

இதனாலும், இந்த வேதாந்த கொள்கைகள் சாமானியருக்கு புரியாமல் போனது.

இதை மறைக்க வேண்டிய கட்டாயம் உண்டு. ஏனென்றால், பக்குவம் அடையாதவன் இதை கேட்டால், இறைவனே இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதையும் விட்டுவிட்டு இன்னும் தாழ போய் விடுவான் என்ற பயம். சடங்குகளை பலனின்றி செய்து பக்குவப்படாத மனதிடம் சடங்குகள் தேவையில்லை என்று சொன்னால், அவன் இருப்பதையும் விட்டுவிட்டு மிருகமாகிவிடுவான் என்ற உண்மை புரிந்த மதம் இந்து மதம்.

இதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்.

கோவி.கண்ணன் said...

ஜயராமன் சார் ....
அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால் என்ற பதம், பரமாத்மாவை முதன் முதல் ஜீவாஆத்மா சந்திப்பாதாக எடுத்துக் கொள்ளலாமா ?

மணியன் said...

நல்ல விளக்கம். புராண இதிகாசங்களை எளிமைப்படுத்தி அனைவரையும் அடையச் செய்ததுபோல் இந்த உயர்நிலை தத்துவங்களும் அனைவரும் அறியும் வகை செய்ய வேண்டும். இவை ஒரு சாரார் மட்டுமே அறியவும் அனுபவிக்கவும் முடியும் என்பதாலேயே பிரிவினை வாதங்கள் எழுகின்றன. ஆனாலும் அதற்கான மனநிலையும் வயதும் முன்தேவையாகும்.

ஜயராமன் said...

கோவி கண்ணன் சார்,

எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை அனாயாசமாக கேட்கிறீர்கள்.

வைத்துக்கொள்ளலாமே! ஏன் இல்லை. இந்துமத்த்தின் சிறப்பே அது உங்கள் உள்மனதுக்கு சுதந்திரம் அளித்து தங்களுக்கு ஏற்றாற்போல் ஆன்மீக அனுபவத்தை ஏற்க சொல்கிறது. It is not a religion of rigid dogma. அதனால்தான், இங்கு ஆயிரமாயிரம் வழிகள், ஆயிரமாயிரம் குரு தோன்றுகிறார்கள்.

இங்கு நம் எல்லோருக்கும் இறைவன் ஒன்றுதான். ஆன்மீக அனுபவம் வெவ்வேறு. உங்கள் இறைவன் என் இறைவனிடமிருந்து சராசரி அனுபவத்தில் வேறுபடுகிறான்.

அதுவும், ராமாயணத்தில் தோன்ட தோன்ட அற்புதங்கள் பிணைந்து இருக்கின்றன. அதிலும், கம்பன் தமிழில் இந்த காவியம் இன்னும் இனிக்கிறது.

அதனால்தான், மத்த்தை தாண்டி வேறு மதக்கார்ர்களும் மனம் மறந்து லயித்தது இந்த கம்பனின் கற்பனையில்.

இந்த 'அண்ணலும் நோக்கினாள்' கதையெல்லாம் கம்பனின் திரிவுதான். இது ஒரிஜினல் வால்மீகியிடம் இல்லை. ஆனால், கம்பன் திரைக்கதை எழுதும்போது அழகாக போட்டுவிட்டான்.

பி.கு; அந்த கம்பன் பிறந்த இடம் என்று போய் பார்த்தேன். கண்ணில் தண்ணீர் வந்தது. எம்.ஜி.ஆர் எப்போதோ ஒரு போர்ட் வைத்திருக்கிறார். ஆனால், ஒன்றும் கட்டவில்லை. பொட்டை திடலில் மணல் மேடாக இருக்கிறது. அதில் பையன்கள் நம்.1, நம்.2 போகிறார்கள். நாலைந்து பன்றிகள் படுத்துக்கொண்டிருக்கின்றன.

கம்பன் 'பார்ப்பன' இலக்கியத்தை எழுதியதுதான் இந்த அலட்சியத்துக்கு காரணம் என்று அங்கிருந்த ஒருவர் சொன்னார். இந்து மதம் சாராத ஒரு இலக்கியத்தை படைத்திருந்தால் இன்னேரம் கம்பனுக்காக ஆயிரம் மண்டபங்கள் எழும்பியிருக்கும்.

நன்றி

தியாஷா பிரகாஷ் said...

மன்னிக்கவும். ராமாயணம் என்பது ஒரு சிறந்த காவியமல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

கீழே உள்ள ஆக்கம் சபேசன் என்பவரால் எழுதப்பட்டு http://www.webeelam.com எனும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையுடன் எனக்கு உள்ள உடன்பாட்டின் காரணமாக இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீ மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்தாய். இமயம் வரை உன் எல்லை விரிந்திருந்தது. அப்பொழுது மத்திய கிழக்கிலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் ஆரியர்கள் ஆட்டுமந்தை மேய்த்துக் கொண்டு வந்தார்கள். வந்தவன் மெதுமெதுவாய் உன் இடத்தை கைப்பற்றிக்கொண்டான். ஒரு நேரத்தில் இமயம் வரை இருந்த உன் கொடி தென்பகுதியில் மட்டுமே பறக்கத் தொடங்கியது. என்றாலும் நீ எங்குமே அரசாள்வதை விரும்பாத ஆரியன் தென்பகுதிக்கும் படையெடுத்தான். ஆரியப் படைக்கு தலைமை தாங்கியவன் பெயர் இராமன். தமிழனின் படைக்கு தலைமை தாங்கியவனிற்கு ஆரியர்கள் வைத்த பெயர் இராவணன். இராவண மன்னன் பல கலைகளை கற்றும் மிகவும் புத்திக்கூர்மையுள்ளவனாக இருந்தபடியால் அவனை பத்துத்தலை இராவணன் என்று அழைத்தனர். இன்றைய தென்னிந்தியாவின் பல பகுதிகளை இராமனின் படை கைப்பற்றிக் கொண்டது. தடாகை என்கின்ற தமிழ் அரசி ஆண்ட பகுதிகளும் கைப்பற்றப்பட்டது. வீரத் தமிழ்பெண் தடாகையும் இராமனுடன் போரிட்டு வீரச்சாவடைந்தாள் என்றாலும் வீரப்போர் புரிந்த இராவணனும் பல வெற்றிகளைப் பெற்றான். இராவணன் ஒரு போரில் இராமனை வெற்றி கொண்டு அன்றைய வழக்கப்படி வெற்றியின் அடையாளமாக இராமனுடைய மனைவியை கவர்ந்து சென்றான். எனினும் இராமனின் மனைவியை ஏதும் செய்யாது கண்ணியம் காத்தான். அதன் பிறகு தெற்கே வாழ்ந்த சில தமிழ் மன்னர்களை தம் பக்கம் சேர்த்துக் கொண்ட இராமன் தமிழர்களின் தலைநகரமாக இருந்த இலங்கைக்கு படையெடுத்துச் சென்றான். தமிழினத்தின் சாபக்கேடுக்கேற்ப தமிழ் மன்னன் இராவணனுக்கு அங்கும் ஒரு துரோகம். அவனுடைய தம்பி பதவி ஆசையில் இராமனின் பக்கம் சேர்ந்து கொண்டான். கடைசி வரை தமிழினத்தை காக்க வீரப்போர் புரிந்த இராவணனை இராமன் பல சதிகளை செய்து வெற்றிகொண்டான்.

வெற்றி பெற்ற இராமன் கடவுள் ஆகிவிட்டான். தோற்றப் போன இராவணன் அரக்கன் ஆகிவிட்டான். இராமனுக்கு துணைபுரிந்த தமிழர்கள் குரங்குகள் ஆகிவிட்டார்கள். துரோகிகளை என்றுமே எதிரிகள் கூட மதிப்பதில்லை என்பதற்கு இது ஒரு சான்று.

நீ இப்படித்தான் தோற்றுப்போனாய். உன்னை வென்றவர்கள் உனக்கு அரக்கன் என்று பெயர் வைத்தார்கள். ஆயினும் இராவணனின் முடிவோடு நீ அடங்கிப் போய்விடவில்லை. சில காலம் கழித்து மீண்டும் தமிழன் ஆர்ப்பரித்து எழுந்தான். பல தமிழ் மன்னர்கள் வீரப் போர் புரிந்து ஆரியர்களை விரட்டியடித்தார்கள். ஓடிப்போன ஆரியப்படை மீண்டும் தமிழன் மீது படையெடுத்தது. இப்பொழுது ஆரியர்களுக்கு தலைமை தாங்கி வந்தவன் பெயர் கிருஸ்ணன்.


ஆரியர்கள் கிருஸ்ணனின் தலைமையில் தமிழர்களை நோக்கிப் படையெடுத்தார்கள். தமிழர்கள் முன்பு இருந்தது போல் ஒரு மன்னனின் கீழ் இருக்கவில்லை. தமிழர்கள் பல நாடுகளாக பிரிந்திருந்தார்கள். ஒவு;வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு மன்னன். ஒரு குடையின் கீழ் இல்லையென்றாலும் ஆரியர்களுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். பல வருடங்களாக நடந்த போரில் பல தமிழ் மன்னர்கள் கிருஸ்ணனால் கொல்லப்பட்டார்கள். கிருஸ்ணன் போரில் பல சதிகளை கையாண்டான். நேர்மையாக போர் புரிந்த தமிழர்களால் கிருஸ்ணனின் கண்கட்டி வித்தைகளையும் சதிகளையும் சமாளிக்க முடியவில்லை. ஒற்றுமையாக நின்று போராடாததால் கடைசில் தமிழன் தோற்றுப்போனான்.


வென்ற கிருஸ்ணன் கடவுள் ஆனான். அவனுடன் வந்த ஆரியர்கள் தேவர்கள் ஆனார்கள். எதிர்த்து நின்று போரிட்ட வீரத் தமிழ் மன்னர்கள் அரக்கர்கள் ஆனார்கள். அப்படி எம்மினத்துக்காக வீரச்சாவடைந்த ஒரு தமிழ் மன்னனுக்கு ஆரியர்கள் சூட்டிய பெயர்தான் நராகாசுரன்.


நான் சொல்வதையெல்லாம் எப்படி நம்புவதென்று கேட்கிறாயா? நல்ல கேள்வி. கேட்டால்தான் அறிவு வளரும். இதற்கு பதில் சொல்வதற்கு முன் இன்னுமொரு கதை சொல்கிறேன், கேள்!

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியைத் தூக்கிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். தேவர்கள் விஸ்ணுவிடம் முறையிட்டார்களம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீது காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறுயாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.


சரி, இப்பொழுது சொல். உன் பகுத்தறிவைக் கொண்டு சொல். உன் ஆறாவது அறிவை உபயோகித்து நன்றாக சிந்தித்துச் சொல். இதில் நான் முதல் சொன்ன வரலாறா அல்லது பார்ப்பனர்கள் உனக்கு சொல்லிவைத்த இந்த பன்றிக் கதையா நம்புவதற்கு ஏற்றதாக இருக்கின்றது?


இந்தப் பன்றிக்கதையை நம்பி காலம் காலமாக தீபாவளி கொண்டாடி வரும் உனக்கு நம்புகின்ற மாதிரி ஒரு வரலாற்றுக்கதை சொன்னால் மட்டும் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.


ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் (தமிழர்கள்) நடந்த போரையே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்ததாக புராணக் கதைகளில் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை பல ஆரிய வரலாற்றாசிரியர்களே ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை. எப்படி ஈழத்தில் பௌத்த பிக்குகள் தமிழர்களை இழிவுபடுத்தி வரலாற்றை எழுதினார்களோ அதே போன்று பாரத நாட்டில் ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களை இழிவுபடுத்தி புராணக்கதைகளை எழுதினார்கள். தமிழர்கள் என்று குறிப்பிடாமல் தெற்கே வாழ்வதாகவும் கருப்பாக இருப்பார்கள் என்றும் எழுதி வைத்தார்கள். புராணக்கதைகளை ஊன்றிப் படித்தவர்கள் அரக்கர்கள் என்பவர்கள் தமிழர்கள்தான் என்பதை நன்றாக புரிந்தகொள்வார்கள்.


ஆரியன் உன்னை வென்ற நாளை தீபாவளியாக கொண்டாடுகிறான். அவன் வெற்றியை அவன் கொண்டாடுவது அவன் உரிமை. ஆனால் நீ ஏன் கொண்டாடுகிறாய்? நீ தோற்ற நாளை, உன் மன்னன் ஒருவன் உனக்காக மரணித்த நாளை நீ கொண்டாடுகிறாய் என்றால் உன்னை என்னவென்று சொல்வது.


சரி! ஆரியர்கள் சொல்வதுபோல் நரகாசுரன் பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனென்றும் அவன் ஒரு அரக்கன் என்றும் வைத்துக்கொள்வொம். ஆனால் இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பையும் கொண்டாடுவதில்லையே! எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை.


நீ மட்டும் ஏன் தமிழா உனக்காக இறந்தவன் நாளை கொண்டாடுகிறாய்?


தமிழா! உண்மையில் தீபாவளி எமக்கு ஒரு கருப்பு தினம். துக்க தினம். ஆனால் நீ கேட்கப் போவதில்லை. இன்னும் பல வருடங்கள் நான் இந்தக் கட்டுரையை எழுதவேண்டி வரும். திருந்தமாட்டாய் என்று தெரிந்தும் நான் எழுதுவேன்.

ஜயராமன் said...

திரு. பிரகாஷ் அவர்களே,

தாங்கள் என் பதிவுக்கு மதிப்பளித்து நீண்ட பின்னூட்டம் இட்டதற்கு நன்றி

இராமாயணம் சிறந்த காவியம் அல்ல என்று நம்புவதும் நம்பாததும் தங்கள் உரிமை. ராமாயணம் சிறந்த தமிழ் இலக்கியம் என்று இந்துக்கள் அல்லாதோரும் தன் வாழ்நாளில் கம்பகாதையை அனுபவித்து இருக்கிறார்கள். அவர்களும் ராம்பக்தி கொண்டவர்கள் இல்லையே.

தாங்கள் சொல்லும், அல்லது தங்களால் குறிப்பிடப்படும், இந்த ஆரிய கொள்கை பொய் என்று எத்தனையோ முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பி.பீ.சி.யில் கூட இது பொய் என்று பதிவு வந்தது நினைவிருக்கலாம்.

இப்படி இல்லாத ஒன்றை விவரித்து தங்கள் மனக்கோபங்களையும், விகாரங்களையும் தாங்களாகவே கற்பித்து.... ரொம்பவும் நாம் தமிழர்கள் குழம்பிப்போய் இருக்கிறோம்.

தமிழன் யார் என்பதே இம்மாதிரி கொள்கைகளால் சொல்ல முடியவில்லை. தமிழன் ஆயிரமாயிரம் நிலப்பரப்பை ஆண்டான் என்று என்ன ஆதாரம். ராவணன் பாப்பான் தான். அவன் அப்ப தமிழனா இல்லை ஆரியனா.

எப்படி இருந்தாலும், ராமாயணம் நடந்த கதைதான், இட்டுக்கட்டப்பட்டது இல்லை என்றாவது தங்களுக்கு தோன்றுகிறதே. அதுவே, அந்த ராமரின் அருள்தான் போங்கள்...

நன்றி

ஜயராமன் said...

பிரகாஷ்,

நரகாசுர வதம் பிராக்ஜ்யோதிஷபுரம் என்ற நகரத்தில் நடந்தது. இது தற்காலத்திய அஸ்ஸாமில் உள்ளது. அது என்ன தமிழன் ஊராய் இருந்ததா? அப்படி என்றால், இந்தியா முழுக்க தமிழன் ஊரா. அப்படி பார்த்தால், ராமர் பிறந்ததும தமிழன் ஊர்தான்.

ஏன் என்றால், ராமன் பிறந்து பல ஆயிரம் வருடங்கள் கழித்து தான் கிருஷ்ண அவதாரம்.

ராம-ராவண யுத்தம் தமிழர் ஆரியர் யுத்தம் என்கிறீர்கள். அதேபோல, நரகாசுர வதம் திராவிட வதம் என்கிறீர்கள். இவை இரண்டும் ஒன்று சேரவில்லையே!

மேலும், தெற்கே இருந்தவன் கருப்பன் தமிழன் என்கிறீர்கள். ஆனால், நரகாசுரன் தெற்கில் இல்லையே.

தங்கள் பின்னூட்ட கருத்துக்கள் முண்ணுக்கு பின் முறனாக இருக்கின்றது.

இம்மாதிரி ஆதாரம் இல்லாத்தை எல்லாம் படித்து குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

நாமக்கல் சிபி said...

தங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி...
எனக்கு சில சந்தேகங்கள்:
1) அசுரர்கள் ஏன் சிவனை மட்டும் நம்புவதாக நமது புராணங்களில் இருக்கிறது?
2) பிரம்மம் ஒன்றல்லவா? அப்படி என்றால் ஏன் அசுரர்களுக்கு சிவ ரூபத்தில் வரம் அளித்து விஷ்னு ரூபத்தில் அழிக்க வேண்டும்?

PS:
கிருஷ்ணன் என்றாலே "கருமை நிறத்தவன்" என்று பொருள். இது பிரகாஷ் அவர்களுக்காக...

சந்தோஷ் aka Santhosh said...

நல்ல பதிவு, இராமாயண்த்திற்கு இப்படி ஒரு விளக்கம் நான் இதுவரை கேட்டது இல்லை.

காஞ்சி பிலிம்ஸ் said...

இந்த பதிவுக்கு சற்றும் சம்மந்தமில்லை என்றாலும் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுவிடுகிறேன்.

ஆகமம் ஆகமம் என்று தலைதெறிக்க கத்தும் சிலதுகளால் எப்படி தலித்துகளால் எழுதப்பெற்ற இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் மட்டும் இப்படி பூஜிக்க முடிகிறது ?

நரியா said...

வணக்கம் ஜெயராமன்.
//இந்துமத்த்தின் சிறப்பே அது உங்கள் உள்மனதுக்கு சுதந்திரம் அளித்து தங்களுக்கு ஏற்றாற்போல் ஆன்மீக அனுபவத்தை ஏற்க சொல்கிறது. It is not a religion of rigid dogma. அதனால்தான், இங்கு ஆயிரமாயிரம் வழிகள், ஆயிரமாயிரம் குரு தோன்றுகிறார்கள்.//
இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். மனிதன் உள்ளே தான் கடவுளும் இருக்கிறார் எனவும் நானும் நம்புகிறேன். தெற்கில் உள்ள ஆலயங்களில் கடவுள் சிலையின் நிறம் கருப்பாகத்தான் இருக்கும். வடக்கிலே வென்மையாகத்தான் இருக்கும். இதுவே அங்கு உள்ள மக்களை குறிக்கிறது என எடுத்துக்கொள்ளலாமே. மேலும் இந்து மத வழிப்பாட்டு முறைகளும் இயற்கையை நேசிக்க கற்று கொடுக்கிறது எனவும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி. அவரவர் தங்கள் குருவை எவ்வாறு தெரிந்துக்கொள்வது?
நன்றி!

ஜயராமன் said...

வெட்டி சார்,

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

எனக்குத்தெரிந்த பதில்கள்:

////1) அசுரர்கள் ஏன் சிவனை மட்டும் நம்புவதாக நமது புராணங்களில் இருக்கிறது?////

இது தவறு. ராவணனைத்தவிர புராணங்களில் சிவபக்தர்கள் அசுர்ர்கள் என்று சொல்வதற்கு ரொம்ப ஆதாரம் இல்லை. இரண்யாஷன், இரண்யகசிபு போன்றோர் பிரம்மாவிடம் வரம் பெற்றார்கள். நரகாசுரன் கிருஷ்ணரிடம் வரம் பெற்றான். அவன் விஷ்ணுவின் சொந்த பையன்.

இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

தாங்கள் எதோ ஒரு திரிக்கப்பட்ட இந்து கொள்கைகளை கேட்டு இவ்வாறு தவறான முடிவுக்கு வர வேண்டாம்.

அரியும், சிவனும் ஒன்னு: அறியாதவன் வாயில் மண்ணு. என்கிறது ஆன்மீக தமிழ்.

சிவன் ஆசுதோஷி என்று அழைக்கப்படுகிறான். சிவனை மகிழ்விப்பது மிகவும் எளிது. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு கொத்து வில்வம் தலையில் போட்டால் அவன் தாங்கள் கேட்ட வரங்களை கொடுப்பான். விஷ்ணு பரபிரும்மத்தின் உலகை காக்கும் மூர்த்தி ரூபம். அதனால், அவர் 'சம்பவாமி யுகே யுகே' (நான் தோன்றி தீமையை அழிக்கிறேன்) என்று அவருடைய டூட்டியாக சொல்கிறார். இதை திரிக்க வேண்டாம்.

புராணங்களில் விஷ்ணுவும் சிவனும் சண்டை போட்டுக்கொண்டதாக எங்குமே இல்லை. பகாசுரன் சிவனை துரத்தியபோது விஷ்ணு அந்த அரக்கனை அழித்தார். விஷ்ணுவும், பிரம்மாவும் சண்டை போட்ட போது சிவன் தோன்றி விஷ்ணுவின் ம்மதையை போக்கினார். என்று பலப்பல புராண கதைகள் பேசும். விஷ்ணுவின் பெருமை பேசும் இராமாயணம், பாகவதம் முதலியவற்றில் சிவனின் பெருமை அழகாக சொல்லப்படுகிறது. பாரதத்தில் கிருஷ்ணரே போருக்கு தேவையான அஸ்திரங்களை சிவனை பிரார்த்தித்து அர்ஜூனனுக்கு கொடுக்கிறார். போர் தொடங்கும் முன் துர்கையை பிரார்த்தித்து ஆரம்பி என்று அர்ஜூன்னுக்கு அறிவுரை சொல்கிறார். ராமன் சிவனை பூசை செய்து ராவணனை அழித்தது ராமேஸ்வரத்தில் பேமஸ்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் இருந்து தெரிவதெல்லாம் ஒன்றுதான், சிவனும் விஷ்ணுவும் ஒன்று. தங்கள் விருப்ப்ப்படி ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளுங்கள்.

///2) பிரம்மம் ஒன்றல்லவா? அப்படி என்றால் ஏன் அசுரர்களுக்கு சிவ ரூபத்தில் வரம் அளித்து விஷ்னு ரூபத்தில் அழிக்க வேண்டும்?////

பிரம்மம் என்பது பரம உண்மையான நிலை. அதை தேவையற்றதுக்கு எல்லாம் போட்டு குழப்பிக்கப்ப்டாது.

நெய்வேலி நிலக்கரியும், வைரமும் ஒன்றுதான் என்று வேதியியல் சொல்கிறது. கரிக்கட்டை ஒரு 22 காரட் வாங்கி நாம் பீரோவில் பூட்டி வைக்கிறோமா? ஏன் இல்லை.

இதன் விடைதான் தங்கள் கேள்விக்கு விடை.

மேலும், ஏன் என்றால், அழிப்பவனும் அவனே, அழிபவனும் அவனே. ராவணனும் அவனே, ராமனும் அவனே. சிவனும் அவனே, விஷ்ணுவும் அவனே.

மேலே எழுதிய என் விளக்கத்தை தயை செய்து மீண்டும் படிக்கவும்.

எனக்கு தோன்றிய விளக்கங்களில் பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி
2) பிரம்மம் ஒன்றல்லவா? அப்படி என்றால் ஏன் அசுரர்களுக்கு சிவ ரூபத்தில் வரம் அளித்து விஷ்னு ரூபத்தில் அழிக்க வேண்டும்?

ஜயராமன் said...

/// கிருஷ்ணன் என்றாலே "கருமை நிறத்தவன்" என்று பொருள். இது பிரகாஷ் அவர்களுக்காக... ///

கிருஷ்ணன் என்பதற்கு பல பொருள்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் குறிப்பிட்ட பொருளும் இருக்கிறது. 'க்ருஷ்' என்ற வினைச்சொல்லுக்கு இழுப்பது என்று பொருள். எவன் எல்லார் மனதையும் தன்பால் ஈர்க்கிறானோ அவனுக்கு க்ருஷ்ணன் என்று பெயர். 'க்ருஷ்ண' என்ற பெயர்ச்சொல்லுக்கு கருப்பு என்று அர்த்தம். எவன் கருப்பனோ அவன் க்ருஷ்ணன்.

கருப்பில் எல்லா நிறங்களும் அடங்கிவிடுகின்றன. அதில் எந்த ஒளிக்கற்றையும் நிறங்களை பிரதிபலிப்பதில்லை என்று விஞ்ஞானம் நமக்கு சொல்கிறது.

இதுதான் இந்த பெயருக்கு உள்ள இரண்டு அர்த்தங்களையும் ஒன்று சேர்க்கும் விளக்கம். எவன் எல்லா ஆன்மாக்களையும் தன்னிடம் ஈர்த்து தன்னில் நிலைபெற செய்கிறானோ அந்த கருப்பனையே க்ருஷ்ணன் என்கிறோம்

நன்றி

ஜயராமன் said...

நரியா அவர்களே,

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

///மேலும் இந்து மத வழிப்பாட்டு முறைகளும் இயற்கையை நேசிக்க கற்று கொடுக்கிறது எனவும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.///

நிச்சயமாக. இந்து மதம் இயற்கையை நேசிக்க மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. இயற்கையே கடவுள் அம்சம் என்று சொல்கிறது. மரத்திற்கும், ஆற்றிற்கும் வழிபாடு செய்யச்சொல்லும் அற்புதமான மதம். சூரியனை தொழுது எழுந்து நெருப்பில் சாட்சியாக மணம் செய்து பசு, யானை, குதிரை என்று எல்லா உயிரினத்தையும் தெய்வ அம்சமாய் வழிபட சொல்லும் ஒரு உன்னதமான மதம்.

//// உங்களிடம் ஒரு கேள்வி. அவரவர் தங்கள் குருவை எவ்வாறு தெரிந்துக்கொள்வது?///

மிகப்பெரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதற்கு எனக்கு தோன்றும் எண்ணங்கள் பலப்பல. இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் விளக்க நேரமில்லை. மாலையில் எழுதுகிறேன்.

நன்றி!

ஜயராமன் said...

காஞ்சி பிலிம்ஸ் சார்,

///ஆகமம் ஆகமம் என்று தலைதெறிக்க கத்தும் சிலதுகளால் எப்படி தலித்துகளால் எழுதப்பெற்ற இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் மட்டும் இப்படி பூஜிக்க முடிகிறது ? ///

ஏன் என்றால், ஆகமம் இந்துக்கள் யாவருக்கும் எதிர்த்தும் அல்ல, ஆதரித்தும் அல்ல.

ராமாயணம், மகாபாரதம் உன்னதமாக ஆன்மீக கருவூலம். அது யாரால் படைக்கப்பட்டது என்று இந்துக்கள் யாரும் பார்த்து அதன் தரத்தை நிர்ணயித்ததில்லை. ராமாயணத்தில் பார்ப்பனர்கள் அவமானப்படுவது நிறைய காட்சிகள் (ராவணன், ஜாபாலி, தானம் வாங்கும் பிராமணர்கள், பரசுராமன் முதலானோர்). அதனால், எந்த ஜாதிக்காரர்களும் அதை போற்றி வணங்காமல் இருந்ததில்லை. இதில் இருந்தே இந்து மத்த்தின் அடிப்படை ஒற்றுமையை தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலேயர்களால், இப்போது சில சுயநலவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயாதோற்றமே இந்த வேறுபாடு.

அதனால், இந்துக்களில் விரும்பத்தகாத பல செயல்கள் நடந்தன, கொஞ்சம் கொஞ்சம் நடக்கின்றன, என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இது வானில் காணப்படும் மேகமூட்டம் மாதிரி. இவை இந்துமதம் என்ற ஆதவனை என்றுமே விழுங்காது. மேகங்களை விரட்டுவது நம் இந்துக்களின் கடமை.

ஆகம சாத்திரம் என்பது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஒரு உருவத்தில் நிலைநிறுத்தி அந்த இறையாண்மை காப்பாற்றி அதனால் யாவருக்கும் பலனளிக்கும் ஒரு விஞ்ஞானம். பசுவின் உடல் முழுக்க பால் இருந்தாலும், அதன் மடியே அதன் வாயில் அல்லவா, அதுபோல. எங்கும் சூரிய வெப்பம் இருந்தாலும், பூதக்கண்ணாடியில் குவித்து அதை நெருப்பாக்குவது இல்லையா அதைப்போல.

எல்லா விஞ்ஞானம் போல அதற்கும் விதிமுறைகள் உண்டு. கோவிலுக்கான அமைப்புகள், வழிபடும் தெய்வங்கள் அமைய வேண்டிய முறை, வழிபாட்டு முறை என்று ஏகப்பட்ட விதிகள். இவை அந்த இடத்தில், அந்த உருவத்தில் இறையாண்மையை ஊக்குவித்து பவர்புல் ஆக ஆக்க ஏற்பட்ட விதிகள்.

இதில் அது ஏன் இல்லை, இது ஏன் இல்லை என்று கேட்பது வினோதம்.

அதே ஆகமத்தில், சிவனுக்கு தாழம்பூ கூடாது, விஷ்ணுவுக்கு அட்சதை கூடாது, பிள்ளாயாருக்கு துளசி கூடாது என்றெல்லாம் இருப்பதால், இவை எல்லாம் மட்டம் என்று அர்த்தமா.

இவ்வாறு நினைப்பது அபத்தம் இல்லையா? தாங்கள் மனம் தெளிவாக யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

கோவி.கண்ணன் said...

//எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை அனாயாசமாக கேட்கிறீர்கள்.//
ஜயராமன் சார் ...மண்ணிக்கவும்... இராமயணத்தில் பாமரரும் அறிந்து வைத்திருப்பது இந்த இராமன் சீதை சந்திப்பு ... அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது ... பரமாத்மா ... ஜீவாத்மா என்று இராமயண உட்பொருள் கூறப்படும் போது எனக்கு இந்த காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது போல் தெரிந்ததால் தான் அவ்வாறு கூறினேன். உங்கள் விளக்கம் திருப்தி அளிக்கிறது.

நாமக்கல் சிபி said...

ஜயராமன் மிக்க நன்றி.

நீர், நீராவி, பனிக்கட்டி மூன்றும் ஒரே பொருளின் வெவ்வேறுத் தோற்றங்கள். ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகள் கொண்டது.
பனிக்கட்டியால் (ICE) காக்கப்படுகின்ற ஒரு பொருள் நீராவியால் அழிக்கப்படுகின்றது. அதை அழித்தல் என்பதை விட தன்மை மாற்றம் என்று சொல்லலாம்.
உதாரணத்திற்கு அரிசி மாவை கெடமால் பனிக்கட்டி (Fridge) பாதுகாக்கிறது. ஆனால் அதை இட்லி ஆக மாற்றுவதற்கு நீராவி உதவுகிறது.
இங்கே காக்கவும், அழிக்கவும் (தன்மை மாற்றம்) உதவுவது ஒரே பொருள் தான்.
அதேப்போல் அந்தப் பொருள் காக்கப்படுவதே அது தன்மை மாற்றப்படுவதற்காகத்தான். நம்மைப் பொருத்தவரை இராவணன் அழிக்கப்பட்டான் ஆனால் அதுவே அவன் நாராயணனிடம் ஐக்கியமானன் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதை இப்படியும் விளக்களாமா என்று சொல்லவும்?

நரியா said...

வணக்கம் ஜெயராமன்!
அவரவர் குருவை எவ்வாறு தெரிந்துக்கொள்வது என்று முன்பே தங்களிடம் கேட்டிருந்தேன்.

மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.

நேரம் கிடைக்கும் போது பதில் எழுதவும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

நாமக்கல் சிபி said...

ஜயராமன் ஐயா,
பதில் சொல்லவே இல்லை!!!