Monday, October 30, 2006

மருந்தா-சுகமா? - வைராக்ய சதகம்

இதுவரை பார்த்தது

16 காமத்தின் வீழ்ச்சி
17 சிவனின் தனித்துவம்
18 மீன்களிலும் தாழ்ந்தவன்

கவி மேலும் தொடர்கிறார்.


த்ருஷா சுஷ்யத்யாஸ்யே பிபதி ஸலிலம் சீதமதுரம்
க்ஷூதார்த: சால்யான்னம் கவலயதி மாம்ஸாதிகலிதம்
ப்ரதீப்தே காமாக்னௌ ஸூத்ருடதரமாலிங்கதி வதூம்
ப்ரதீகாரம் வ்யாதே: ஸூகமிதி விபர்யஸ்யதி ஜன: 19


तृषा शुष्यत्यास्ये पिबति सलिलं शीतमधुरं
क्षुधार्तः शाल्यानं कवलयति मांसादिकलितम्‌।
प्रदीप्ते कामाग्नौ सुदृढतरमालिङ्गति वधूं
प्रतीकारं व्याधेः सुखमिति विपर्यस्यति जनः॥ १९॥


tR^ishhaa shushhyatyaasye pibati salila.n shiitamadhura.n
xudhaartaH shaalyaana.n kavalayati maa.nsaadikalitam.h .
pradiipte kaamaagnau sudR^iDhataramaaliN^gati vadhuuM
pratiikaara.n vyaadheH sukhamiti viparyasyati janaH .. 19..


Meaning:
One drinks cool sweet water for mouth parched with thirst; the hunger-smitten eats rice, flavored with meat et cetera.; with passion afire, embraces the wife firmly; people (treat) these remedies for these diseases contrarily as happiness.


பொருளுரை:

(மனிதன்) தாகத்தில் வறண்ட வாய்க்கு குளிர்ந்த சுவையான தண்ணீர் குடிக்கிறான்; பசி தாக்கியவன் மாமிசங்கள் முதலியவை சேர்த்து சுவைப்பட்ட சாதத்தை சாப்பிடுகிறான்; காமாக்னி கிளறும்போது மனைவியை திடமாக அணைக்கிறான்; (இவ்வித) வியாதிகளுக்கு மாற்றான மருந்துகளை சுகங்களென்று எதிரிடையாக நினைக்கும் ஜனங்கள்.


விரிவுரை:

யாக்கையின் பிணக்குகள் தீர உணவும், உறக்கமும் இடையறாது ஏற்கப்படுகின்றன. தாகம், பசி, காமம் வாட்டும்போது உடல் தேடும் உணவும், உறவும் இந்த பிணக்குகளிலிருந்து தற்காலிக விடுப்புக்கே. இந்த தீர்வுகள் மருந்துகளே அன்றி சுகங்களாகா. இதற்கு இரண்டு சான்றுகள். இத்தீர்வுகள் பெறா உடல் வாடுகிறது. மேலும், இந்த தீர்வுகள் உடலுக்கு எப்போதும் தேவைப்படுவதும் இல்லை. இன்று சுகமாயிருப்பது பின்னொருவேளை சுகமாயிருப்பதில்லை. இவ்விரண்டு காரணங்களால் இவை மருந்துகள் என்பது தெரிகிறது. மருந்துகள் சுகங்களாகா. உடலுக்கு பிறப்பும், இறப்பும் நிரந்தர பிணிகளாயின. பசியும் வேட்கையும் தற்காலிக பிணிகளாகின்றன. இந்த தற்காலிக நிவாரணங்களுக்காக அல்லல்படுவோர் அற்பர்கள். மூலமான பிறப்பெனும் வியாதி ஒழிய மருந்து வேண்டுபவனே அறிந்தவன். பவமென்னும் இவ்வுடல் ஒழிவதே உண்மையான சுகம்.

Wednesday, October 25, 2006

மீன்களிலும் தாழ்ந்தவன் - வைராக்ய சதகம்

இதுவரை பார்த்தது

16ஆவது ஸ்லோகம் காமத்தின் வீழ்ச்சி

17வது ஸ்லோகம் சிவனின் தனித்துவம்

கவி மேலும் தொடர்கிறார்.

அஜானந்தாஹாத்ம்யம் பதது சலபஸ்தீவ்ரதஹனே
ஸ மீனோऽப்யஞானாத்வடிசயுதமச்னாது பிசிதம்
விஜானந்தோऽப்யேதே வயமிஹ விபஜ்ஜாலஜடிலான்
ந முஞ்சாம: காமானஹஹ கஹனோ மோஹமஹிமா 18


अजानन्दाहात्म्यं पततु शलभस्तीव्रदहने
स मीनोऽप्यज्ञानाद्वडिशयुतमश्नातु पिशितम्‌।
विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान्
न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा॥ १८॥


ajaanandaahaatmyaM patatu shalabhastiivradahane
sa miino.apyaGYaanaadvaDishayutamashnaatu pishitam.h .
vijaananto.apyete vayamiha vipajjaalajaTilaan
na muJNchaamaH kaamaanahaha gahano mohamahimaa 18

A moth falls in fire not knowing its burning power; the fish
gets caught for food in baited hook in ignorance; and here we, despite aware of complex dangers of sensual pleasures, do not renounce them. Oh! how profound is the power of delusion! 18

தீவிரமாக தகிக்குமென்றறியாமல் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள்; (ஆபத்தென்று) அறியாமல் தூண்டிலின் இறையை கவ்வி மாட்டும் மீன்கள்; காமசுகங்களின் ஆழமான ஆபத்துகளை அறிந்தும் இங்கே விட இயலாமலுள்ள நாம்; மோகங்களின் மகிமை எத்தனை கடுமையானது. 18


================
விளக்கவுரை:
அனைத்து உயிரனங்களும் புலனின்பத்தில் அழிகின்றன. உணவாசை, உடலாசை என்று வாழ்க்கையை தொலைக்கும் மீன்களும், விட்டில்களும் ஒரு விதத்தில் மனிதனைவிட மேலானவை. ஏனெனில், அவை, அறியாமல் உள்ளுணர்வில் வாழ்கின்றன.

ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிரினங்களைவிட தாழ்கிறான். காரணம் - அவன் அறிந்தே தவறிழைத்து மாள்கிறான்.

பகுத்தறிவு பெற்றதாலேயே, மானிட ஜன்மம் கர்ம வினைகளுக்கு காரணமாகிறது. மற்ற பிறப்புகள் கர்மவினைகளை அனுபவிக்கவே படைக்கப்பட்டன.

ஆனால், மனிதர்களில், அறியாமல் கெட்டவர்களைவிட அறிந்து கெட்ட மனிதர்களே மிகுதி. இராவணன், துரியோதனன் முதலானோர் இதற்கு எடுத்துக்காட்டு. இகவாழ்க்கையிலும் உடலுக்கும், வாழ்க்கைக்கும் ஊறு என்று அறிந்தே மக்கள் அல்ப சுகங்களுக்காக பெரும் பலன்களை இழக்கிறார்கள். குடிக்கு கேடு என்று அறிவித்துக்கொண்டே கோடிகளாய் குடிகள் விற்கின்றன.

அறிதான மானிடப்பிறப்பில், இந்த உடலை பலனாக்கி உய்வோர் மிகச்சிலரே. அறிவினாலும் வெல்ல இயலாத இப்புலனின்பங்கள் எத்துனை சக்தி வாய்ந்தவை என்று வியக்கிறார் கவி.

Tuesday, October 24, 2006

சிவனின் தனித்துவம் -வைராக்ய சதகம்

முன்பு பார்த்தது 16ஆவது ஸ்லோகம் காமத்தின் வீழ்ச்சி


இதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலாக மேலும் தொடர்கிறார் கவி.

சிவனின் தனித்துவம்


ஏகோ ராகிஷூ ராஜதே ப்ரியதமாதேஹார்தஹாரீ ஹரோ

நீராகேஷூ ஜனோ விமுக்தல்லநாஸங்கோ ந யஸ்மாத்பர:

துர்வாரஸ்மரபாணபன்னக விஷவ்யாவித்தமுக்தோ ஜன:

சேஷ: காமவிடம்பிதான்ன விஷயான்போக்தும் ந மோக்தும் க்ஷம: 17


एको रागिषु राजते प्रियतमादेहार्धहारी हरो

नीरागेषु जनो विमुक्तललनासङ्गो यस्मात्परः।

दुर्वारस्मरबाणपन्नगविषव्याविद्धमुग्धो जनः

शेषः कामविडम्बितान्न विषयान्भोक्तुं मोक्तुं क्षमः॥ १७॥

eko raagishhu raajate priyatamaadehaardhahaarii haro

niiraageshhu jano vimuktalalanaasaN^go na yasmaatparaH .

durvaarasmarabaaNapannagavishhavyaaviddhamugdho janaH

sheshhaH kaamaviDambitaanna vishhayaanbhoktu.n na moktu.n xamaH 17

Shiva is unique among the sensuous, for he shares half the body with

His beloved; among the dispassionate no one excels Him in detachment from women. Rest of the people, stunned in infatuation by Cupid's irresistible arrows tipped with serpent poison, can neither enjoy their desires nor give them up at will. 17

தம் பிரியமானவளை பாதியுடலாக கொண்ட சிவன், பிரேமிகளில் சிறந்த ஒருவன். (அதே சமயம்), மோகமற்று பெண்ணுறவின்று விடுபட்ட ஜனங்களில் அவனை விஞ்சியவரில்லை. மற்றவர்களோ, தடையற்ற மன்மதனின் பாணமாகிய பாம்பின் விஷத்தால் மதிகலங்கி மோக மயக்கத்தில் விஷயங்களை முழுதும் அனுபவிக்கவோ, (அல்லது) விடவோ சக்தியற்றவர்கள். 17


விளக்கவுரை:


சிவன் மனித இலக்கணத்துக்கு வரையறாதவன். எல்லாம் விட்டொழிந்த யோகியாகவும், இல்லறம் போற்றும் குடும்பியாகவும் அவன் மிளிர்கிறான். அவன் ஆணுமல்லன், பெண்ணுமல்லன். உலகார் வேண்டாததை அவன் ஏற்கிறான். துன்பம், மயானம், தும்பை, எருக்கு, பனிமலை இவையெல்லாம் சிவார்ப்பணம். அவன் மிக்கோரமுதுண்ண தான் நஞ்சுண்ட மேலவன்.

அவன் ஒரே சமயத்தில் தக்ஷிணாமூர்த்தியாக ஞானத்தின் எல்லையை காட்டி, ஆனந்தத்தின் எல்லையாக நடராஜனாகிறான்.

அவனை நீக்கி, மற்றவர்கள் எல்லாம், இந்திரனோ, ப்ரும்மனோ, திருமாலோ, மனிதர்களோ, அரக்கர்களோ, பசுக்களோ அனைவரும், காமத்தால் மயங்கி சுழலுபவர்களே.

அதிலும் மனிதர்கள் நிலை பரிதாபகரமானது. மோகத்தில் தீர்க்கமாக வீழ மனமோ சக்தியோ இன்றி போனாலும், அதை முழுதும் ஒழித்துப்போடவும் இயலாமல் உழலுகிறார்கள் என்கிறார் கவி.

Monday, October 23, 2006

காமத்தின் அழிவு - வைராக்ய சதகம்

स्तनौ मांसग्रन्थी कनककलशावित्युपमितौ
मुखं श्लेष्मागारं तदपि च शशाङ्केन तुलितम्।
स्रवन्मूत्रक्लीन्नं करिवरशिरस्पर्धि जघनं
मुहुर्निन्द्यं रूपं कविजनविशेषैर्गुरु कृतम्॥ १६॥

ஸ்தனௌ மாம்ஸக்ரந்தீ கனககலசாவித்யுபமிதௌ
முகம் ஸ்லேஷ்மகாரம் ததபி ச சசாங்கேன துளிதம்
ஸ்ரவன்மூத்ரக்ளீன்னம் கரிவரசிரஸ்பர்தி ஜகனம்
முஹூர்நிந்த்யம் ரூபம் கவிஜனவிசேஷைர்குரு க்ருதம் 16

stanau maa.nsagranthii kanakakalashaavityupamitau
mukha.n shleshhmaagaara.n tadapi cha shashaaN^kena tulitam.h .
sravanmuutrakliinna.n karivarashiraspardhi jaghana.n
muhurnindya.n ruupa.n kavijanavisheshhairguru kR^itam.h .. 16..

breasts which are but two lumps of flesh are compared as golden vessels; the mouth, seat of phlegm and mucus, are compared to the moon; the loins, outlet for wet urine, are the forehead of an elephant; thus poets have glorified the contemptible human form.

மாமிசக்கோளங்களான மார்பகங்கள் தங்க கலசங்களென ஒப்பப்படுகின்றன; எச்சிலின் இருக்கையாக இருந்தாலும் வாயோ வெண்ணிலவுக்கு சமமாகிறது; பெருகும் மூத்திரக்கேடுடைய அரை இடுப்போ, யானையின் மத்தகமாகிறது. வெறுக்கக்கூடிய இவ்வுடலமைப்பை கவிகள் (எத்தனை) உயர்த்திவிட்டார்கள். 16

சௌந்தர்யம் மனதின் கற்பனை. காமம் மனதில் விளைவது. அழகான ரதிகளிடமட்டுமில்லாமல், ஜனங்கள் குரூபிகளிடமும் அதே வேகத்துடன் கூடுகிறார்கள்.

ஏனென்றால், காமம் மனதில் பிரியமான பிரமையை ஏற்படுத்தி அதிலேயே மக்களை மோகிக்க பண்ணுகிறது. அந்த பிரமை அடிக்கடி உருவகப்படுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தின் நினைவால் எழுவது. யோகிகளும், குழந்தைகளும் இந்த நினைவுப்படுத்தல் இல்லாததாலேயே காமத்தில் வீழ்வதில்லை. சொல்லப்போனால், இந்த மல, அஸ்தி, உதிர கூட்டான இந்த உடல், நாடியால் கட்டப்பட்டு, மயிர் அடர்ந்த தோலினால் மூடிய ஒரு மாமிச கூடு. இது உண்மையில் வெறுக்கத்தக்கது. இதில் ரமிக்கும் மக்கள், கழிவில் பெருகும் கிருமிகளை ஒத்தவர்கள்.

அங்கங்களிலும், தோல் பரிமாணத்திலும் மயங்கும் கவிகள் வார்த்தைகளில் பிம்பம் வரைந்து இந்த காம மாயையை மேலும் மனதில் பூட்டுகிறார்கள்.

இந்த பிரமை மறைவதே வாழ்வின் முதல் வெற்றி.

இவ்வுடலாசைக்கு இளமையில் வாழ்க்கையும், முதுமையில் மானமும் பலியாகின்றன.

காமத்தால் கவிகளின் பொய்களை நம்பி, காலத்தின் சுழலில் சிக்கி, வாழ்க்கையின் இலக்கை இழந்து வீழ்ந்தோரை எச்சரிக்கிறார் பர்த்ருஹரி.

Saturday, October 21, 2006

உருவ வழிபாடு

பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.

உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.

உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?

உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.

“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். “அதற்கு உருவமில்லை” என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது.

அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.

ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.

வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.

இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.

Tuesday, September 19, 2006

எந்த நிலையிலும் ஆசை - வைராக்ய சதகம் - VIII

முன் பகுதியில் 14 ச்லோகம் வரை பார்த்தோம்.

மேலும், தொடருகிறேன்....

================

பாடல் - 15


bhikShA-shanaM tadapi nIrasam eka-vAraM
shayyA ca bhUH parijano nija-deha-mAtram |
vastraM vishIrNa-shata-khaNDa-mayI ca kanthA
hA hA tathApi viShayA na parityajanti ||15||

भिक्षा-शनं तदपि नीरसम् एक-वारं
शय्या च भूः परिजनो निज-देह-मात्रम्।
वस्त्रं विशीर्ण-शत-खण्ड-मयी च कन्था
हा हा तथापि विषया न परित्यजन्ति॥१५॥

பிக்ஷா-சனம்-ததபி-நீரஸமேகவாரம்
சய்யா ச பூ: பரிஜனோ நிஜ தேஹ மாத்ரம் |
வஸ்த்ரம் விசீர்ண சத கண்ட மயீ ச கந்தா
ஹா ஹா ததாபி விஷயா ந பரித்யஜந்தி || 15 ||

===================

பொருள் - 15


தினசரி ஒருவேளை கிடைக்கும் பிச்சையிட்ட, அதுவும் சுவையற்ற, உணவு; பூமியே படுக்கை; உண்மையில் (இவ்) உடல் மட்டுமே சேவகன்; தேய்ந்துபோய் நூறு துண்டுகளாகி தைத்த துணியே உடுப்பு; ஹா!! ஹா!! இருந்தாலும், விஷய சுகங்களை (ஒருவன்) விடுவதில்லை || 15 ||

====================

மேலுரை - 15


வாழ்க்கை நிராசையானவருக்கும் விஷயங்களில் ஆசை நிற்பதில்லை என்கிறார் கவி. எல்லா சாதனங்களை துறந்தோருக்கும் அவர்கள் அனுபவிக்காத சுகங்களில் ஆசை குறைவதில்லை. இதுவே ஆச்சரியம் என்பதை ஹா!! ஹா!! என்று வியக்கிறார். புவி (பூ:) என்பது கட்டாந்தரை என்பது சூட்சுமம். துறவிக்கு அவன் உடலே சேவகன் என்பது அவனுக்கு வேறு ஆதரவுகள் இல்லை என்பதை சுட்டும். இங்கு கவி தீராத ஆசையின் பிடியில் உழலும் தன்னைக் குறித்தே முக்கியமாக சொன்னாலும், பரித்யஜந்தி என்று பொதுவாகவே சுட்டி இதுவே உலக நியதி என்று காட்டுகிறார். || 15 ||

======================

Monday, September 18, 2006

கண்ணீர் குடிக்கும் பறவைகள் - வைராக்ய சதகம் VII

"வைராக்ய சதகம்" என்னும் இந்த அற்புத காவியத்தை மேலும் அனுபவிப்போம்.



=========================

பாடல் 12


avashyaM yAtArashcirataramuShitvApi viShayA
viyoge ko bhedastyajati na jano yat svayam amUn |
vrajantaH svAtantryAd atula-paritApAya manasaH
svayaM tyaktA hyete shama-sukham anantaM vidadhati ||12||

अवश्यं यातारश्चिरतरमुषित्वापि विषया
वियोगे को भेदस्त्यजति न जनो यत् स्वयम् अमून्।
व्रजन्तः स्वातन्त्र्याद् अतुल-परितापाय मनसः
स्वयं त्यक्ता ह्येते शम-सुखम् अनन्तं विदधति॥१२॥

அவச்யம் - யாதாரச்சிரதமுஷித்வாபி – விஷயா
வியோகே- கோ - பேதஸ்த்யஜதி - ந - ஜனோ - யத் - ஸ்வயம் - அமூன் |
வ்ரஜந்த;-ஸ்வாதந்த்ர்யாத் - அதுள - பரிதாபாய - மனஸ;
ஸ்வயம் - த்யக்தா - ஹ்யேதே - சம - ஸூகம் - அனந்தம் - விதததி || 12 ||

===================

பொருள் - 12

As, Sensual pleasures surely leave us even if stayed with us long time, what difference is made, if we voluntarily discard them? (Because,) Sensual plesures cause incomparable misery if (they) leave us, but cause infinite bliss if we discard them with our self-control || 12 ||

புலனின்பங்கள் பல காலம் நம்மிடம் இருந்தாலும், ஒருநாள் நம்மை பிறிகின்றன. அதனால், நாமே அவற்றை துறந்தால் என்ன வேறுபாடு (விளையும்?)? புலனின்பங்கள் நம்மை பிறிந்தால், எண்ணற்ற துயரமும், நாம் அவற்றை துறந்தால், சுயக்கட்டுப்பாட்டில் (விளைந்த) முடிவற்ற இன்பமும் (அல்லவா) கிடைக்கின்றன!! || 12 ||

================

மேலுரை - 12


கவி இங்கு விஷய சுகங்களின் இரண்டு குறைகளை சொல்கிறார். ஒன்று, அவை வரைமுறையுடையவை. எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வரும். (அதாவது, சுகங்கள் தரும் விஷயங்கள் முடியும். அல்லது, நம் இச்சை ருசி மாறிவிடும்). இரண்டாவது, அவை முடியும்போது அவற்றை இழந்ததால் மிக்க மனக்கஷ்டத்தையும் கொடுக்கும். இதை ஈடு செய்ய ஒரே வழி, நாமாகவே இந்த விஷய சுகங்களை ஒழித்துக்கட்டுவதுதான். அப்படி செய்தால், நம்மீது நமக்கு மதிப்பும், புலன்களை வென்ற அபரிதமான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இந்த உண்மை ஆன்மீக விஷயங்களில் மட்டுமல்லாது, உலக நடப்புகளிலும் உணரப்படுகின்றது. பல தீய பழக்கங்களை மக்கள் குற்ற உணர்ச்சியோடே அனுபவிக்கிறார்கள். மாறாக இன்பங்கள் நல்லதாக இருந்தாலும், அவற்றை நுகரும்போது இது எத்தனை நாளைக்கு என்று பயந்துகொண்டே அனுபவிக்கிறார்கள். இவை இரண்டும் இந்த ஆசைகளை துறந்தால் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும், என்கிறார் கவி.


==========================

பாடல் - 13


brahma-j~nAna-viveka-nirmala-dhiyaH kurvantyaho duShkaraM
yanmu~ncantyupabhoga-bhA~njyapi dhanAnyekAntato niHspR^ihAH |
samprAtAn na purA na saMprati na ca prAptau dR^iDha-pratyayAn
vA~nChA-mAtra-parigrahAn api paraM tyaktuM na shaktA vayam ||13||

ब्रह्म-ज्ञान-विवेक-निर्मल-धियः कुर्वन्त्यहो दुष्करं
यन्मुञ्चन्त्युपभोग-भाञ्ज्यपि धनान्येकान्ततो निःस्पृहाः।
सम्प्रातान् न पुरा न संप्रति न च प्राप्तौ दृढ-प्रत्ययान्
वाञ्छा-मात्र-परिग्रहान् अपि परं त्यक्तुं न शक्ता वयम्॥१३॥

ப்ரும்ம-ஞான-விவேக-நிர்மல-திய: குர்வந்த்யஹோ-துஷ்கரம்
யன்முங்ஜன்த்யுபபோக-பாங்ஜ்யபி-தனான்யேகாந்ததோ-நி:ஸ்ப்ருஹா: |
ஸம்ப்ராதான்-ந-புரா-ந ஸம்ப்ரதி-ந-ச ப்ராப்தௌ த்ருட-ப்ரத்ய்யான்
வாங்சா-மாத்ர-பரிக்ரஹான்-அபி-பரம்-த்யக்தும்-ந சக்தா வயம் || 13 ||

=======================

பொருள் - 13



Ah! What a difficult feat is performed by blemishless, discriminating minds with knowledge of (ultimate) reality, for they renounce without craving entire wealths bringing enjoyment (to them). (Whereas), We are unable to discard even wealths missed in the past, not available now or uncertain in future, (though), though these wealths remain only in mind || 13 ||

ஓ!! பகுத்தறிந்து ப்ரும்மஞானம் பெற்ற தூய்மையான மனங்களின் செயல் எவ்வளவு கடினமானது! அவை, சுகங்களுக்கு ஆதாரமான எல்லா செல்வங்களையும் பொருட்படுத்தாமல் துறக்கின்றனவே!! நாமோ, கிடைக்காமல் நழுவிய செல்வங்கள், இல்லாத செல்வங்கள், கிடைக்கும் என்று நம்பிக்கையற்ற செல்வங்களைக்கூட (மனதினால் கூட) துறக்க சக்தியற்றவர்களாக இருக்கிறோம். || 13 ||

==================

மேலுரை - 13



இந்த பாடலில் கவி நம் இயலாமையை சுட்டுகிறார். அல்பமான நம் மனங்கள் நம்மிடமில்லாத செல்வங்களை கூட ஆசைப்படாமல் இருக்க மறுக்கின்றன. கிட்டாதாயின் வெட்டென மறக்க கூட முடியாமல் ஆசை சூழ்ந்த நம் மனங்களுக்கு, எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பரப்பிரும்மத்தின் உண்மைநிலை உணர்ந்த மனம் தூய்மையானவர்கள், அவர்களின் கையிலுள்ள செல்வங்களை கூட முழுதும் துறப்பது விந்தையான செயலாக படுகிறது. இதனால், ஆசையை விடும் பக்குவம் உண்மை நிலையை பகுத்துணர்வர்களுக்கு எளிது என்கிறார் கவி.

========================


பாடல் - 14


dhanyAnAM giri-kandareShu vasatAM jyotiH paraM dhyAyatAM-
AnandAshrukaNAn pibanti shakunA niHsha~Nkam a~NkeshayAH |
asmAkaM tu manorathoparacita-prAsAda-vApI-taTa-
krIDA-kAnana-keli-kautuka-juShAm AyuH paraM kShIyate ||14||

धन्यानां गिरि-कन्दरेषु वसतां ज्योतिः परं ध्यायतां-
आनन्दाश्रुकणान् पिबन्ति शकुना निःशङ्कम् अङ्केशयाः।
अस्माकं तु मनोरथोपरचित-प्रासाद-वापी-तट-
क्रीडा-कानन-केलि-कौतुक-जुषाम् आयुः परं क्षीयते॥१४॥

மலைக்குகைகளில் வசித்து, பரஞ்சோதியை தியானித்து பெருகும் ஆனந்த கண்ணீர்த்துளிகளை பயமில்லாமல் குடிக்கும் பறவைகள் அமர்ந்துள்ள மடியை உடையவர்கள் பேறு பெற்றவர்கள். என் வாழ்வோ, கற்பனையில் (தோன்றிய) அரண்மனைகளிலும், நீர்நிலை கரைகளிலும், உல்லாச தோட்டங்களிலும் விளையாடி வேகமாக கழிகின்றன || 14 ||

==================

மேலுரை - 14

எதுவுமில்லாமல் குகைகளில் வசிப்போர்கள் தியானத்தில் உண்மையான பேரின்பத்தை பெருகிறார்கள் என்கிறார் கவி. பரஞ்சோதி என்று சொல்வது உண்மையான ப்ரும்மத்தின் த்யான ஸ்வரூபம். அதை த்யானித்தால் எல்லையில்லாத இன்பத்தில் கண்ணீர் பெருகும். மற்றும் இவர்கள் சமாதி நிலையில் பறவைகள் அமரும் கல் போல உலகுக்கு தோன்றுவார்கள் என்பதை மடியில் பயமில்லாமல் அமரும் பறவையை சுட்டி உணர்த்துகிறார். இதற்கு நேர்மாறாக, ஒன்றுமில்லாமல் கற்பனையில் இன்பம் காணும் நம் இழிநிலையை சுட்டுகிறார். நிஜத்தை விட கற்பனையே அல்ப ஜீவன்களுக்கு ஆனந்தமாய் இருக்கிறது என்பது தாத்பர்யம். மேலும், அந்த கற்பனை நிஜமாகும்போது அந்த ஆனந்தம் இருப்பதில்லை என்பதும் இங்கு நுணுக்கம்.

=============


மேலும் வரும்.....

Thursday, August 24, 2006

ஆசை என்னும் நதி - வைராக்ய சதகம் - VI

வைராக்ய சதகம் (வைராக்கியம் நூறு) என்ற இந்த அற்புதமான பாடல் மேலும் தொடர்கிறது.

முந்தைய பாகத்தை இங்கே பார்த்தோம்.

===================


AshA nAma nadI manoratha-jalA tR^iShNA-tara~NgAkulA
rAga-grAhavatI vitarka-vihagA dhairya-druma-dhvaMsinI
mohAvarta-sudustarAtigahanA prottu~Nga-cintA-taTI
tasyAH para-gatA vishuddhamanaso nandanti yogIshvarAH 10



ஆஷா நாம நதீ மனோரத-ஜலா த்ருஷ்ணா-தரங்காகுலா
ராக-க்ராஹவதீ விதர்க-விஹகா-தைர்ய த்ரும த்வம்ஸினி
மோஹாவர்த-ஸூதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்க-சிந்தா-தடீ
தஸ்யா: பர-கதா விசுத்தமனஸோ நந்தந்தீ யோகீச்வரா: 10



आशा नाम नदी मनोरथ-जला तृष्णा-तरङ्गाकुला
राग-ग्राहवती वितर्क-विहगा धैर्य-द्रुम-ध्वंसिनी।
मोहावर्त-सुदुस्तरातिगहना प्रोत्तुङ्ग-चिन्ता-तटी
तस्याः पर-गता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः॥१०॥

நம்பிக்கை என்னும் இந்த நதி விருப்பங்கள் என்னும் வெள்ளம் நிறைந்து, பொருட்களில் ஆசை என்னும் அலைகள் பெருத்து அடித்தபடி விரோதமான பேராசையெனும் காகங்கள் வசிக்க, புலனிச்சைகள் ஆர்ப்பரித்து இழுக்க, கரைகளிலுள்ள தைரியம் என்னும் மரங்களை வீழ்த்தியபடி ஓடுகிறது. மேலும், மோகங்களாலான ஆழமான சுழல்களையும், கவலை என்னும் உயரமான கரையையும் கொண்ட இந்த நதியை பெரும் யோகிகளே சுத்தமான மனதுடன் தாண்டி சுகமடைகிறார்கள் 10



The river of hope flows, with fantasies as water, with agitating waves of desires, with birds of scheming greedy thoughts, attachments (to objects) grasping in, felling the trees of courage on its banks. With whirlpools of ignorance and steep banks of anxiety, Yogis pass this river with pure minds and enjoy supreme happiness.

==================================================


na saMsArotpannaM caritam anupashyAmi kushalaM
vipAkaH puNyAnAM janayati bhayaM me vimR^ishataH
mahadbhiH puNyaughaishcira-parigR^ihItAshca viShayA
mahAnto jAyante vyasanamiva dAtuM viShayiNAm 11


न संसारोत्पन्नं चरितम् अनुपश्यामि कुशलं
विपाकः पुण्यानां जनयति भयं मे विमृशतः।
महद्भिः पुण्यौघैश्चिर-परिगृहीताश्च विषया
महान्तो जायन्ते व्यसनमिव दातुं विषयिणाम् ॥११॥


ந ஸம்ஸாரோத்பன்னம் சரிதம் அனுபச்யாமி குசலம்
விபாக: புண்யானாம் ஜனயதி பயம் மே விம்ருஶத:
மஹத்பி: புண்யௌகைச்சிர பரிக்ருஹீதாச்ச விஷயா
மஹாந்தோ ஜாயந்தே தாதும் விஷயிணாம் 11



I don’t see (true) wellness arising from good-deeds performed in life after life. On deep thought, I am scared about huge accumulation of merits, resulting in constant fulfillment of sensual pleasures, ending up in further attachment to (sensual) objects, which produce misery. 11

சம்சாரங்களில் இடையறாது செய்த புண்ணியங்களால் (முடிவான) நலம் (நான்) காணவில்லை. ஆழ்ந்து சிந்திக்கும்போது, (இந்த) புண்ணியங்களின் சேர்க்கை எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த புண்ணியங்களின் பெரும் சேர்க்கை, புலனின்பங்களை நுகர்ப்பித்து, விஷயங்களில் இன்னும் ஆட்பித்து பெரும் துயரத்தையே கொடுக்கின்றன. 11

Friday, August 18, 2006

ஆசைக்கு நிந்தனை! - வைராக்ய சதகம்

வைராக்ய சதகம் - நான்கு செய்யுள்களை முந்தைய பகுதியில் பார்த்து அனுபவித்தோம்.

தொடர்ந்து, இங்கே எழுதுகிறேன்.

இங்கும் கவி ஆசையை மேலும் நிந்திக்கிறார்.

=====================================================

amIShAM prANAnAM tulita-bisinI-patra-payasAM
kR^ite kiM nAsmAbhir vigalita-vivekair vyavasitam |
yad-ADhyAnAm agre draviNa-mada-niHsaMj~na-manasAM
kR^itaM vIta vrIDair nija-guNa-kathA-pAtakamapi ||5||

अमीषां प्राणानां तुलित-बिसिनी-पत्र-पयसां
कृते किं नास्माभिर् विगलित-विवेकैर् व्यवसितम्।
यद्-आढ्यानाम् अग्रे द्रविण-मद-निःसंज्ञ-मनसां
कृतं वीत व्रीडैर् निज-गुण-कथा-पातकमपि॥५॥

அமீஷாம் ப்ராணானாம் துளித-பிஸினி பத்ர பயஸாம் |
க்ருதே கிம் நாஸ்மாபிர் விகலித- விவேகைர்- வ்யவஸிதம் ||
யதாட்யாநாம் அக்ரே த்ரவிண மதநி:ஸம்ய்ஞ-மனஸாம்
க்ருதம் வீத வ்ரீடைர்நிஜ குண கதா பாதகமபி || 5 ||

What attempts for the sake of our life, as fickle as drops floating on lotus leaf! With stupefied minds, We committed the sin of shamelessly singing our self-praise stories in front of rich proud with their wealth || 5 ||

தாமரையிலை தண்ணீர் போன்ற நிலையற்ற நம் உயிரை காப்பாற்ற விவேகம் இழந்து நாம் என்னவெல்லாம் செய்யவில்லை?

பணத்தால் செருக்குற்ற செல்வர்களின் முன்னால் வெட்கமிழந்து குழப்பமான மனதுடன் தற்புகழ்ச்சி கதைகளை சொல்லும் பாவத்தை செய்தோம் || 5 ||



விளக்கம் : ப்ராணா: - ப்ராணம் – உயிர்நாடி, வாழ்க்கை என்று இரண்டு விதமாக பார்க்கலாம். தற்புகழ்ச்சி பாவம். அதை பணத்துக்காக கர்வமானவர்களிடம் மனதை அடகுவைத்து செய்தோமே என்று வருந்துகிறார் கவி. நிலையற்ற வாழ்க்கைக்கான நிலையான தன்மானத்தை இழக்க கூடாது என்பது தாத்பர்யம். || 5 ||

===================================================


क्षान्तं न क्षमया गृहोचित-सुखं त्यक्तं न सन्तोषतः
सोढा दुःसह-शीत-वात-तपन-क्लेशा न तप्तं तपः।
ध्यातं वित्तमहर्निशं नियमित-प्राणैर्न-शंभोः पदं
तत्-तत्-कर्म कृतं यद् एव मुनिभिस्तैस्तैः फलैर्वञ्चिताः॥६॥

kShAntaM na kShamayA gR^ihocita-sukhaM tyaktaM na santoShataH
soDhA duHsaha-shIta-vAta-tapana-kleshA na taptaM tapaH |
dhyAtaM vittamaharnishaM niyamita-prANairna-shaMbhoH padaM
tat-tat-karma kR^itaM yad eva munibhistaistaiH phalairva~ncitAH ||6||

க்ஷாந்தம் ந க்ஷமயா க்ருஹோசித-சுகம் த்யக்தம் ந ஸந்தோஷத:
ஸோடா து:ஸஹ ஶஈத-வாத-தபன-க்ளேஶஆ ந தப்தம் தப: |
த்யாதம் வித்தமஹர்னிஶம் நியமித-ப்ராணைர்ன-ஶம்போ: பதம்
தத்-தத்-கர்ம க்ருதம் யதேவ முனிபிஸ்தைஸ்தை: பளைர்வஞ்சிதா: || 6 ||

We forgave not out of pardon (because of weakness); gave-up home comforts not out of happiness (but out of lack of fulfillment); tolerated unberable cold, wind and heat not for penance (but without austerities); controlling senses, intensely thought of riches day and night but not of Shiva’s feet. Thus, We have performed all like ascetic saints, but without any benefits. || 6 ||

தவறான காரியங்களை பொறுத்தோம், மன்னிப்பினால் அல்ல (ஆனால், பலமின்மையால்). வீட்டு சுகங்களை துறந்தோம், ஆனால் சந்தோஷப்பட்டு அல்ல (ஆனால், திருப்தியின்மையால்). பொறுக்க இயலாத குளிர், வெயில், காற்றை சகித்தோம், ஆனால், தவத்திற்காக அல்ல. தன்னை அடக்கி இரவு பகல் செல்வங்களை தியானித்தோம், பரமேச்வரன் திருவடிகளை அல்ல. இந்த செயல்கள் எல்லாம் முனிவர்களை ஒத்து செய்தோம், ஆனால் பலன் ஏதுமில்லை! || 6 ||

விளக்கம்: பொறுமையாக இருப்பது, அவசியமான சுகங்களை விடுவது, குளிர்-வெயில் என்று பாராமல் முயற்சி செய்வது எல்லாம் முனிவர்களின் இயல்புகள். அவைகளை நாமும் செய்கிறோம், ஆனால் பலனில்லை. காரணம், இறைவனின் திருவடிகளுக்காக முயற்சிக்காமல் சம்சாரத்திற்காக உழலுகிறோம்.

7. भोगा न भुक्ता वयमेव भुक्ताः
तपो न तप्तं वयमेव तप्ताः।
कालो न यातो वयमेव याताः
तृष्णा न जीर्णा वयमेव जीर्णाः॥७॥

bhogA na bhuktA vayameva bhuktAH
tapo na taptaM vayameva taptAH |
kAlo na yAto vayameva yAtAH
tR^iShNA na jIrNA vayameva jIrNAH ||7||

போகா ந புக்தா வயமேவ புக்தா:
தபோ ந தப்தம் வயமேவ தப்தா: |
காலோ ந யாதோ வயமேவ யாதா:
த்ருஷ்ணா ந ஜீர்ணா வயமேவ ஜீர்ணா: || 7 ||

While attempting enjoyment of mundane wordly pleasures, We ourselves got consumed (in desires); Attempting austerities, We got ourselves burned; attempting to spend time, Our life has come to an end; Alas, our desires did not get satisfied, but we ourselves are consumed in desires. || 7 ||


உலக சுகங்களை அனுபவிக்க முயன்று, நாமே அந்த சுகங்களுக்கு இறையானோம். தவம் செய்ய முயன்று, நாமே தவித்தோம். காலத்தை கழிக்க முயன்று நாமே (வாழ்க்கையின்) முடிவை எட்டினோம். (அந்தோ!), ஆசையை ஜீரணம் செய்ய முயன்று நாமே அதற்கு இரையானோம் || 7 ||



விளக்கம்: ஆசைக்கு தீனி போட்டு மனிதனே தன் ஆயுளை அதற்கு பலியாக்குகிறான் என்கிறார் கவி. இந்த செய்யுளில், போகா - போக்தா भोगा - भोक्ता (நுகரும் இன்பம் - நுகர்பவன்) தபம் - தப்யம் तपं - तप्यं (தவம் - தவிப்பு) என்கிற ஜோடி வார்த்தைகள் அனுபவிக்க ரசமானவை. भोगं போகம் என்பதை உலக சுகம் என்று தமிழ்படுத்தியுள்ளேன் || 7 ||


बलीभिर्मुखमाक्रान्तं पलिनेताङ्कितं शिरः।
गात्राणि शिथिलायन्ते तृष्णैका तरुणायते॥८॥

balIbhirmukhamAkrAntaM palinetA~NkitaM shiraH |
gAtrANi shithilAyante tR^iShNaikA taruNAyate ||8||

பலீபிர் முகமாக்ராந்தம் பலிநேதாங்கிதம் சிர: |
காத்ராணி சிதிலாயந்தே த்ருஷ்ணௌகா தருணாயதே || 8 ||


வரிகள் நிறைந்த சுருங்கிய முகம், நரைமுடிகளால் தாக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்ட தலை, தளர்ந்து போன அங்கங்கள், ஆசை மட்டுமே இளைமையாக இருக்கிறது!! || 8 ||


விளக்கம்: வாழ்க்கையின் இறுதியிலும் ஆசையின் தாக்கம் குறைவதில்லை என்கிறார் கவி. நரைமுடிகள் தலையை தாக்குவதாக (आक्रान्तं) சொல்வது கவிதை நயம்.



nivR^ittA bhogecChA puruSha bahumAno.api galitaH
samAnAH svaryAtAH sapadi suhR^ido jIvitasamAH |
shanairyaShTyutthAnaM ghana-timira-ruddhe ca nayane
aho mUDhaH kAyastadapi maraNApAya-cakitaH ||9||

निवृत्ता भोगेच्छा पुरुष बहुमानोऽपि गलितः
समानाः स्वर्याताः सपदि सुहृदो जीवितसमाः।
शनैर्यष्ट्युत्थानं घन-तिमिर-रुद्धे च नयने
अहो मूढः कायस्तदपि मरणापाय-चकितः॥९॥


நிவ்ருத்தா போகேச்சா புருஷ பகுமானோபி கலித: |

ஸமானா: ஸ்வர்யாதா: ஸபதி ஸூஹ்ருதோ ஜீவிதஸமா; |

ஶனைர் யஷ்ட்யுத்தானம் கன திமிர ருத்தே ச நயனே

அஹோ மூட: காயஸ்ததபி மரணாபாய சகித: || 9 ||



(சுகங்களில்) இச்சை இறங்கிவிட்டது. மனிதன் என்கிற கௌரவமும் போய்விட்டது. (என்) சமமான நண்பர்களோ சொர்க்கத்துக்கு விரைவாக ஓடி விட்டார்கள். (என்) வாழ்க்கையோ கோல் ஊன்றி மெதுவாக எழும்பும் நிலை. இரண்டு கண்களும் கூட கனமான திரைகளால் மூடப்பட்டன. அந்தோ!! இருந்த போதிலும், இந்த முட்டாள் உடம்பு மரணத்தை எண்ணி நடுங்குகிறது. || 10 ||

விளக்கம் - புருஷன் என்கிற கௌரவமும் போனது என்பதில் கவி – அந்த पुरुषः என்கிற பதத்தில் கணவன், ஆண்பிள்ளை, மனிதன் என்று மூன்று விதமான அர்த்தங்களில் யோசிக்கலாம். சமமான நண்பர்கள் सुहृदो समानाः ஸூஹ்ருதோ ஸமானா: என்பது ஒரு அற்புதமான பதம். சொர்க்கத்துக்கு ஓடிவிட்டதாக (ஆயாதா:) சொல்வது சுவை.

======================

மேலும் தொடரும்....

தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பும், விளக்கங்களும் என்னுடையவை.

பிழைகளையும், font குழப்பங்களையும் தயை செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.

நன்றி

Friday, June 23, 2006

அகலிகை

அகலிகை. இது தழிழாக்கப்பட்ட பெயர். சரியான பெயர் = ‘அஹல்யா’ . அதாவது, ‘அழகின்மையே இல்லாதவள்’ என்று பொருள். அதாவது, அழகே வடிவானவள்.

இவள் கதை வினோதமானது. ஆச்சரியகரமானது. பலப்பல பரிமாணங்களை தாங்கியது. ஆனால், பெண்ணியவாதிகளின் பலத்த சர்ச்சைக்கு இலக்கானது.

கற்பு என்னும் கனலுக்கு சனாதன தர்மத்தில் சரியான இலக்கணம் என்ன என்பதை இவள் கதை நமக்கு உணர்த்துகிறது.

அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.

அகலிகை உடம்பாலும், மனதாலும் கெட்டவள். ஆனால், அதற்காக அவள் புகழ் அழிக்கப்படவில்லை. மாறாக, கற்பரசிகளில் முதன்மை தகுதி பெற்றவள். புராணங்களில் பேசப்படும் ஐந்து பதிவிரதைகளில் முதலில் வணங்கப்படுபவள். பிராட்டி சீதையைக்கூட இவ்விழயத்தில் முந்தியவள். இதுதான் ஆச்சரியகரம்.


இதுவே பெண்மைக்கும் கற்புக்கும் சனாதன புராணம் காட்டும் நியதி. கற்பு சாஸ்திரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இவள் கதை ராமாயணத்தில் மிகச்சிறிதாக பேசப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு நாற்பது ஸ்லோகங்களில் இவளின் நிகழ்ச்சி அடங்குகிறது. ஆனாலும், அகலிகை மிகப் பெரிய சக்தியாக பேசப்படுகிறாள். அகலிகை கதை பாடாமல் ராமாயண காதை பேசப்படுவதில்லை.

அகலிகையின் கதையில் நுட்பங்கள் பலருக்கு தெரிவதில்லை. அகலிகை தவறு இழைக்காதவள் என்கிறார்கள். அகலிகை ராமர் கால்பட்டு சாபம் நீங்கினாள் என்கிறார்கள்.

இவள் கதையை முழுமையாக எழுதவும், கற்பு நெறிக்கு சரியான இலக்கணத்தை சுட்டிக்காட்டவும் இந்த பதிவு இட ஆசைப்பட்டேன்.

விச்வாமித்திரர் ஐயனை காட்டுக்கு அழைத்துப்போனது, பிராட்டியை மணமுடிக்க என்று புராணக்காரர்கள் பேசுகிறார்கள். ஆனால், அருணகிரியார் அவ்வாறு சொல்லவில்லை. ஐயன் காடேந்தது அகலிகைக்கு அருள் வழங்க என்கிறார்.

“கல்லிலே பொற்றாள் படவேயது
நல்ல ரூபத்தே வரக்கானிடை
கௌவை தீரப்போகும் இராகவன்”
(கொள்ளையாசை – திருப்புகழ்)

ஆயிரம் வருடங்களாக ஐயன் ராமன் கால் தூசிக்கு ஏங்கியிருக்கும் இந்த பக்தையை மீட்க காட்டிற்கு வந்தான் ஐயன் என்கிறார் அருணகிரி.

முதலில் இவள் புராண கதை.



உலகில் படைத்த பெண்களின் அழகை எல்லாம் சேர்த்து இவளை படைத்தான் படைப்புத்தேவன் பிரம்மா. அத்துணை அழகு.

படைத்தவன் அவளை கௌதமரிடம் மணமுடித்தான். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான் போலும்.

காமம் யாரை விட்டது? அது நம் படைப்பின் காரணம் இல்லையா! நம் உடற்கூறின் உந்துதலில் நியதிகள் சிலசமயம் கண்ணுக்கு தெரிவதில்லை போலும். மாற்றான் மனைவிக்கு ஏங்கினான் தேவன் இந்திரன்.

இடையே ஒரு விளக்கம். தேவர்கள் நம்மைப்போல கர்மங்களுக்கும், வாசனைகளுக்கும் (ஆசை, வெறுப்பு) உட்பட்டவர்கள். இவர்கள் தெய்வம் இல்லை. (பார்க்க என் முந்தைய ஒரு பதிவு : ‘இந்து மத்த்தில் பல தைவம் உண்டா’.) சனாதன தர்மத்தில் ‘முப்பத்து முக்கோடி தெய்வங்கள்’ என்றெல்லாம் பேசுவதும், எழுதுவதும் அறியாமை மூடத்தனம். தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் வித்தியாசம் தெரியாததால்.

காமத்தால் அறிவு மங்குகிறது. ‘மையலால் அறிவு நீங்கி’ என்பது கம்பன் வரிகள். இந்திரன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழிபோல கூவுகிறான். முனிவர் எழுந்து நதிக்கரைக்கு குளிக்க செல்லுகிறார்.

இந்து சாத்திரம் ஒரு அதீதமான விஞ்ஞானம். இங்கு கோட்பாடுகள் நம்பிக்கையால் மட்டும் நிகழ்வதில்லை. மண்ணால் ஆன உடலை மந்திர உடலாக்க நித்தமும் முயற்சி தேவை. மந்திரங்கள் மொழிகள் அல்ல. அவை தகுந்த குருவினால் ஏற்றப்படும் மின்சார கோள்கள். அவற்றை தக்க வைத்துக்கொள்ள வாழ்வாங்கு வாழவேண்டும். வெறும் மந்திர புத்தகத்தை படித்தால் இறையாண்மை வந்துவிடாது.

அருணோதய காலத்தில் (காலை சுமார் 4 ½ மணி அளவில்) குளிக்க வேண்டும் என்கிறது சாத்திரம். ஆதவன் எழும் முன்னே எழாதவன் பாபங்களை சுமக்கிறான். ராமாயணத்தில் பரதன் ஐயனை காட்டுக்கு அனுப்ப தான் காரணமாகியதற்கு வருந்துகிறான். அப்போது, ராமனை காட்டிற்கு அனுப்பியவர்கள் எத்துனை பாவங்களை சுமப்பார்கள் என்று சபிக்கிறான். அதில் ஒன்று, அதிகாலை தூங்குபவர்கள் பெறும் பாவம்.

இந்திரனோ முனிவர் உருவில் வந்தான். அவள் இந்திரன் என்று அகலிகை அறியாமல் இருந்தாள் என்று சிலர் பேசுவதும் தவறு. பெண்ணுக்கு மாற்றானை புரியாதா என்ன? ஒட்டு மீசை வைத்து உலகையே ஏமாற்றுவது இந்நாளைய சினிமாவில்தானே சாத்தியம்.

கணவன் கால் செருப்பை கழற்றும் சத்தம் கூட மனைவிக்கு தெரியும் என்பார்கள்.

தேவேந்திரனை கண்ட அகலிகை அவன் மீது மையல் கொண்டாள்.

அகலிகை அறியாமல் குற்றம் செய்தாள் என்று கவிகள் மழுப்பவில்லை. தன் அழகை அனுபவிக்க தேவேந்திரனே வந்தான் என்று ஆணவத்தில் சந்தோஷப்பட்டாள் என்கிறார் வால்மீகி. ('தேவராஜ குதூஹலாத்'). இவ்வாறு தெரிந்து தவறிழைத்ததால் அவள் தாழ்ந்து போனாள் என்கிறான் கம்பநாடான்.

தக்கது அன்று என்ன ஓராள்...
தாழ்ந்தனள் இருப்பத் தாழா
முக்கணான் அனைய ஆற்றல் ...
முனிவனும் முடுகி வந்தான்....

சென்ற முனிவர், காலம் தவறாக தென்பட்டதை உணர்ந்து திரும்புகிறார். அத்துணை தவ வலிமை பெற்ற முதலிடை முனிவர்களில் ஒருவருக்கு நடக்கும் பிழை தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால், முன்னமேயே தெரிந்து அவர் அதை தடுக்க மாட்டாததே ஒரு ஆச்சரியம். இறைவன் சித்தத்தில் முனிவரின் கவனம் முன்னமேயே இதில் விழவில்லை போலும்!

முனிவர் திரும்பியதும் இந்திரன் பூனை வடிவம் எடுத்து தப்பியோட பார்க்கிறான். முனிவரிடம் தப்ப முடியவில்லை.

உலகிற்கு நிரந்தரமான நெடிய பழி தேடி வைத்தவள் அகலிகை (இது கம்பன் வரிகள்). திரும்பிய முனிவரை பார்த்து பயந்து நிற்கிறாள். 'ஒரு விலைமகளைப் போல நடந்து கொண்ட நீயும் கருங்கல்லாய் கிட..' என்று அகலிகையை சபித்தார் முனிவர்.

"மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்
கல்லியல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள்."

கருங்கல்லாய் ஆனாள் என்பது புராண செய்தி. அதை ஒட்டியே கம்பன் இங்கு பாடுகிறான். "கல்லியல் ஆதி" என்கிறான்.

ஆனால், ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை. 'அன்ன ஆகாரம் இல்லாமல், யார் கண்ணிலும் படாது இங்கேயே நெடுநாள் கிட' என்பதாகவே சபிக்கப்படுகிறாள். "வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்மசாயினீ" என்பதே வால்மீகி வாக்கியம்.

இது சாபமா என்று கேட்டால், முழுதாக சாபம் இல்லை என்பேன். தவம் செய்து கிட என்கிறார் முனிவர். தவம் செய்வது தண்டனையா? இல்லையே? தண்டனைகள் மிருகங்களை இன்னும் கொடிய மிருகமாக்க இல்லை! அவை மிருகத்தனம் களைந்து தேவ ஒளியை தோற்றுவிப்பதற்கே!

இதுவே முனிவர் அளித்த சாபம் என்கிற வரம்.....

இந்த சாபத்தில் இன்னொரு பாடமும் இருக்கிறது.

கம்பன் சொன்ன 'கல் போல் கிட' என்பது ஏன்? அந்நிய ஆடவன் தீண்டும்போது (மனதை, உடலை) கல் போல் கிடக்க வேண்டியவள் பெண். அப்படி இல்லாது இருந்ததால் 'கல்லியல் ஆதி' (கல் போல் கிட) என்று உணர்த்துகிறார் முனிவர். சாப வடிவில்.

அகலிகை சாபம் பெற்றாள். ஆனால், தேவேந்திரனுக்கு என்ன சாபம் கிடைத்தது? பெண்ணியவாதிகள் அகலிகையே கஷ்டப்பட்டாள், வழக்கம்போல ஆண்கள் தப்பிவிட்டார்கள் என்கிறார்களே, அது மிகவும் தவறு.

பாவத்திற்கு மூலமான இந்திரனுக்கு தண்டனை இல்லையா. நிச்சயம் இருந்தது. அது அகலிகையை விட கடுமையாக இருந்தது.

அகலிகைக்கு கிடைத்ததோ நிராகரிப்பு. இது மனதை வாட்டும். ஆனால், தேவேந்திரனுக்கு கிடைத்ததோ அவமானம். ஆயிரம் பங்கு கொடியது. இது உயிருடன் எரிக்கும்.

முனிவர் இந்திரனை மேலே சாபமிட்டார் இவ்வாறு...

‘தேவேந்திரா! இந்த பாவச்செயலுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா? உன் வாழ்நாள் முழுக்க நீ அலியாவாய். அது மட்டும் உனக்கு போதாது. எந்த யோனியில் நீ லயித்து இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்.’

இதுதான் அந்த தவசி சொன்ன சாபம்.

அப்பப்பா என்ன கொடுமை!! கல்லாகி காட்டில் கிடப்பதை விட ஆயிரம் பங்கு கொடியது. அவமானத்தில் ஒளிந்து ஒளிந்து வாழ்வது.

இந்த கொடிய சாபம் பெற்ற இந்திரன் இந்த சாபத்துக்கு தக்கவனே!!

(பிறகு மற்ற தேவர்கள் இந்திரனை அழைத்து அவனுக்கு பல தவத்தை செய்வித்து அவன் உடலில் தோன்றிய உறுப்புகளை ஆயிரம் கண்களாக மாற்றி அவன் ஒருவாறு அவமானத்துடன் வாழ வழி செய்கிறார்கள்... அது ஒரு கிளைக்கதை..

இந்த கிளைக்கதையின் தாத்பர்யம் என்ன?

அதாவது, அவமானம் இந்திரனுக்கு ஒரு குறியாக (symbol) ஆக மட்டுமே இருக்கட்டும். அவனை அவமானப்படுத்தும் நோக்கில், பெண்ணினத்தை அவமானப்படுத்த வேண்டாம் என்பது இங்கு குறிக்கிறது.... )

தனக்கேற்பட்ட சாப நிலை குறித்து அகலிகை விக்கித்து நிற்கிறாள்.

அந்த தவக்கனல் வருந்தி வாடும் அகலிகைக்கு மோட்சமும் வழங்குகிறார்.

சாப விமோசனம் எப்போ என்று கதறி அழும் அகலிகைக்கு முனிவர் வாயிலிருந்து "தசரதன் மகனாக பிறக்கும் இராமன் என்பவன் வரும் போது அவன் பாத தூளி உன்மேல் படும்போது இந்த கல் வடிவை விடு" என விமோசனத்திற்கு வழி கிடைக்கிறது.

("தண்டார்த் தசரத ராமன் என்பான் கழற்றுகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான்")

இது வாடலில் முனிவர் கொடுத்த ஒரு சிறு சுகம். மீளுகைக்கு வழி தெரிந்து காத்திருத்தலில் வலி குறைகிறது.

ராமன் கால் பட்டு எழுந்தாள் என்று பலரும் சொல்வதில் முழு உண்மையில்லை.

ராம்பிரான் கால் தூள் பட்டு (கால் பட்டு இல்லை!) அகலிகை மீண்டாள் என்றே வால்மீகியும், கம்பனும் விளக்கமாக சொல்கிறார்கள் ("கழல் துகள்" என்றே கம்பன் பாடலில் வருகிறது).

என்ன இருந்தாலும் அகலிகை மாற்றான் மனைவி. ஏக பத்தினி விரதனான ஐயன் ராமன் கால் அவள் மேல் பட்டது என்பது கூட சரியில்லை என்பதே கவிகளின் தெளிவு.

ஆச்ரமத்துக்கு ஏவிய ஐயன் கால் துகள் பட்டு அகலிகை கல்லிலிருந்து உரு பெற்று நிற்கிறாள். அகலிகை எழுந்ததும் 'அன்னையே' என்று அவளை அழைக்கிறான் ராமன்.

அவள் யார், ஏன் கல்லில் மறைந்திருந்தாள், இப்போது எப்படி தோன்றினாள் என்று விச்வாமித்திரர் விளக்குகிறார்.

அவள் வரலாற்றை (வழி தவறிய விவரத்தை) அறிந்ததும் ராமன் மீண்டும் அவளை 'அன்னையே' என்று அழைக்கிறான்.

அவன் அகலிகை மேல் இருந்த முதல் எண்ணத்தை சிறிதும் மாற்றவில்லை.

பொதுவாக பெண்களை அம்மா, தாயே என்று மரபாக அழைப்பதும், அவள் தாழ்ந்துவிட்டாள் என்று அறிந்ததும் மாறுவதும் வழக்கம்தானே?

ஆனால், இராமனோ "போது நீ அன்னை என்று பொன்னடி வணங்கிப்போனான்.." என்கிறார் கம்பன்.

அதாவது, மறுபடியும் அவளை அன்னையே என்று அழைத்து அவள் காலடியில் விழுந்து வணங்கி விடை பெறுகிறான் ராமன்.

என்ன ஆச்சரியம்! ஒரு முன்னாள் குற்றவாளியை இன்னாள் அருள்தலைவன் வணங்க வேண்டுமா? அதுவும் அன்னையே என்று அழைக்க வேண்டுமா?

அகலிகை ராமனுக்கு அன்னைதான்! மிகவும் மூலமான அன்னை!

இந்த விளக்கம் பேராசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் சொல்லி கேட்டிருக்கிறேன்...

இராமன் அன்னையே என்றழைக்க உரிமை உள்ளவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவர். தன்னை பெற்றவள், தகப்பனின் மாற்று இல்லத்தரசிகள் என்ற முறையில்...

ஆனால், அகலிகை..

சாபம் பெற்ற நாள் முதல் ராமனை எதிர்பார்க்கிறாள் அகலிகை.

தசரதன் மகனாக அந்த இறைவனே இராமனாக வரவேண்டும் என்று அகலிகை முதலில் அறிவாள்.

இராமன் தசரதன் மைந்தனாகும் முன்னே முனிவரின் வாயால் பிறந்துவிட்டான். உண்மைதானே!

ஊன் உடம்பாக கோசலை திருவயிறில் தாங்கும் முன்னே, அகலிகையின் மனக்கருவில் உருவாகிவிட்டான் எம்பிரான். ராமனுக்காக, தசரதனுக்கு முன்னே, பல வருடம் மனதில் தவம் இருந்தாள் அகலிகை...

அப்படியானால், அகலிகை இராமனுக்கு அன்னைதானே??

அதனால், இராமன் கௌதம முனிவரை அணுகி "நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ நேர்க" என்கிறான். "நெஞ்சில் குற்றமற்ற இவளை நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்கிறாள்.

உடலால் ஏற்பட்ட குற்றங்களுக்கு பெண் என்றும் பொறுப்பல்ல. உடற்கூறுதான் காரணம். மனதால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான்.

தீய எண்ணத்தால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான். தீய எண்ணத்தில் தோன்றிய தவறை நல்ல எண்ணத்தால் மட்டுமே அழித்து எழுத முடியும். ராம, ராம என்ற தாரக மந்திரத்தால் ஆண்டுகள் பல ஐயனுக்காக ஏங்கி காத்திருந்த அந்த மனதில் எல்லா குற்றங்களும் பொசுங்கிவிட்டன. ராமனை வணங்கிய நெஞ்சு குற்றமற்றது.

அதனால், அவள் "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்று ஆகிறாள்.



ராமாயணம் காட்டும் நீதி இதுவே! கற்பு என்பது போட்டால் உடைந்துவிடும் மண்சட்டி அல்ல.

இந்த கதையில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். அகலிகை வந்தவன் மாற்றான் இந்திரன் என்று அறிந்தும் அவன் பேற் கொண்ட ப்ரேமையால் மயங்கி தவறிழைத்தாள். அதை நினைத்து மனமாற வருந்தி மன்னிப்பு கேட்கிறாள். அவள் மனமார திருந்தியதால், முனிவர் கௌதமரும் நல்வழி காட்டுகிறார்.

ஒவ்வொரு வினையும் எதிர்வினை கொண்டதாகிறது. ஒரு காரணமும் ஒரு காரியத்தில் விளைகிறது. ஒவ்வொரு தவறும் தண்டனைக்கு உரியதாகிறது.

ஒவ்வொரு வருந்துதலும் மீட்புக்கு கதவு திறக்கிறது. ஒவ்வொரு தவத்திற்கும் பலன் கிடைக்கிறது.

இதுதான் இங்கு காணும் கோட்பாடு.

தன் கதையால், அகலிகை நமக்கு வேதாந்தத்தையும் போதிக்கிறாள். முனிவர் கௌதமர் ஒரு ஜிதேந்திரியர் (புலன்களை வென்றவர்). அவர் அகலிகை என்கிற பக்தியுடன் வாழ்கிறார்.

அந்த பக்தி இந்திரன் என்கிற மனதால் களங்கப்படும் போது, மனதுக்கு அடிமையாகி அந்த ஜிதேந்திரயருடமிருந்து நழுவுகிறது.

பின், அந்த பக்தி புலன்களில் வெறுப்புற்று வருந்தி, கல் போல தவத்தில் கிடக்கிறது. (அதாவது, புற உலகிடமிருந்து ஒடுங்கி... அதாவது புலன்களிடமிருந்து விடுபட்டு....)

அந்த தவத்தின் விளைவாக, அகண்டமான இந்த பிரம்மத்தின் கருணையால், களங்கம் கலைந்து தன் சுய பிரதாபம் ஏற்று தன் ஜிதேந்திரிய தலைவனும் இணைகிறது.

இக்கதை பாவர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கிறது.

தவத்தால் பாவங்களை கழுவி தன் பழைய பிரகாசத்தை எந்த ஜீவனும் அடைய முடியும் என்பது இந்த கதையின் திரிபு.

ஜீவன் ஆசாபாசங்களால் எப்போதும் கட்டுண்டவன். அதனால் தன் சீலத்தை இழந்தவன். அதை தவத்தாலும் தியாகத்தாலும் அவன் பெற வேண்டும்; பெற முடியும்.

இதைப்பெற ஆக்கமான ஒரு வளர் பாதையே மந்திரங்கள். தன் வழியில் சத்தியத்திலிருந்து விலகாமல் இருக்க அவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

அவ்வாறு மடத்தனத்தால் விலகினாலும், உண்மை வருத்தத்தில் விளைந்த கண்ணீர், மேலும் தவறிழைக்காமல் இருக்க உறுதி, உழைப்பில் விளைந்த தவம் என்பவற்றால் எந்த பாவமும் இல்லாது எறிந்து போகும்.

ராமாயணத்தில் மந்திர சாத்திரத்தை ஏற்றி இயற்றப்பட்ட அற்புதமான வடமொழி காவியம் 'அத்யாத்ம ராமாயணம்'. அதில் அகலிகை இராமன் குறித்து வணங்கிய ஸ்தோத்திரம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அகலிகை தன்னை மீட்ட அந்த சிறுவன் கோலத்தில் உள்ள ஐயனை துதிக்கிறாள்.

அந்த துதி பரம பாவனாமனது. பரம வீரியமானது. அந்த துதியில் மனமுருகி பாடுவோருக்கு ராமன் உருவம் கண்ணிலேயே காண்பது போன்று அமைந்திருக்கிறது. மிகவும் தரத்தில் வீழ்ந்து நாம் செய்யும் எல்லா பாவங்களையும் பொசுக்கும் அந்த மகா துதியை நாமும் துதித்து ஈடேறுவோமாக.

Friday, June 09, 2006

வினோபாஜீயும் பகுத்தறிவும்

நான் ஒரு சமயம் இரயிலில் போய்க் கொண்டிருந்தேன். யமுனை பாலத்தின் மீது வண்டி சென்றது. அருகிலிருந்த ஒருவர் மிக்க மகிழ்ச்சியோடு அதில் ஒரு காசை எடுத்து எறிந்தார்.

பக்கத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் 'நாடு ஏற்கனவே ஓட்டாண்டியாய் இருக்கிறது; போதாதற்கு இவர்கள் வேறு காசை வீணே எறிகிறார்கள்!' என்றார்.

நான் "நீங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. எந்த பாவனையோடு அவர் ஒரு காசை எறிந்தாரோ அதற்கு நான்கைந்து காலணா மதிப்பாவது உண்டா இல்லையா?

பிற நல்ல காரியங்களுக்காக இக்காசைக் கொடுத்திருந்தால் இத்தானம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். இதைப்பற்றி நாம் பின்னர் யோசிப்போம். ஆனால், அந்த பக்தர் இக்காசைத் துறந்தது, இது வெறும் ஆறல்ல, ஆண்டவனது கருணையே இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கிறது என்ற பாவனையினாலேயே ஆகும். இப்பாவனைக்கு உங்கள் பொருளாதார சாத்திரத்தில் ஏதேனும் இடம் உண்டா?

நாட்டின் ஆறு ஒன்றைக் கண்டதும் அவரது உள்ளம் உருகிப் போய் விட்டது. இப்பாவனைக்கு, உணர்ச்சிக்கு நீங்கள் மதிப்பளிக்க முடியுமானால், அதிலிருந்து நான் உங்கள் தேசபக்தி எவ்வளவு என்று அறிந்து கொள்வேன்" என்றேன்.

தேசபக்தி என்பதற்கு வெறும் சோறு என்பதுதான் பொருளா? நாட்டின் பெறிய ஆறு ஒன்றைப் பார்த்ததும் நம் செல்வம் அனைத்தையும் அதில் ஆழ்த்தி விடுவோம். அதன் பாதங்களில் சமர்ப்பித்து விடுவோம் என்ற பாவனை எழுமானால் அது எவ்வளவு பெரிய தேசபக்தியாய் இருக்க வேண்டும்?

அந்த எல்லாச் செல்வங்களும், அந்த மஞ்சள்-வெள்ளை கட்டிகளும், புழுக்களின் மலத்தினால் ஆன முத்துக்களும், நிலக்கரியினால் ஆன வைரமும் - இவை அனைத்தின் மதிப்பும் நீரில் ஆழ்த்தி விடத் தக்கவையே.

ஆண்டவனது பாதங்களின் எதிரில் இவற்றை எல்லாம் மண், இழிந்தவை என்றே மதி.

ஆற்றுக்கும் ஆண்டவனுடைய பாதங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இந்த சிருஷ்டி இருக்கிறதே, அதற்கும் ஆண்டவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா இல்லையா?

"ஆறு என்பது பிராணவாயுவும், நீரகமும் சேர்ந்தது; சூரியனோ 'காஸ்' வெளிச்சத்திற்கு ஒரு பெரிய மாதிரி. அதை வணங்குவதாவது!"

உனது சோற்றுப்பானை இருக்கிறதே, அதைத்தான் விழுந்து கும்பிட வேண்டுமா? அச்சோற்றில்தான் அப்படி என்ன வைத்திருக்கிறது? அதுவும் பார்க்கப்போனால் ஒரு வெள்ளை மண்ணே. அதற்காக உனக்கு ஏன் நாக்கில் இவ்வளவு நீர் ஊறுகிறது?

இவ்வளவு பெரிய சூரியன் உதித்திருக்கிறது; இவ்வளவு அழகிய ஆறு ஓடுகிறது; இவைகளில் ஆண்டவனை உணர முடியாவிட்டால் வேறெங்குதான் உணர முடியும்?

ஆங்கிலக்கவி வோர்ட்ஸ் வொர்த் மிகுந்த துயரத்துடன், 'முன்பெல்லாம் வானவில்லைக் கண்டால் துள்ளிக் குதிப்பேன்; என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி எழும். ஆனால், இப்பொழுது நான் ஏன் மகிழ்ச்சியால் குதிப்பதில்லை? முன் இருந்த வாழ்க்கை இன்பத்தை இப்பொழுது இழந்து கல்லாகிவிட்டேனா?' என்று கேட்கிறார்.

அதாவது, பயனைக் கருதிச் செய்யும் பக்திக்கு, விவரம் அறியாத நாட்டுப்புற மக்களின் பக்தி-பாவனைக்கு, பெருமதிப்புண்டு.

இறுதியில் அதிலிருந்தே பேராற்றல் உதிக்கும். மனிதன் எத்தகையவனாக இருந்தாலும், ஆண்டவன் சன்னதிக்கு ஒருமுறை வந்துவிட்டால் அவன் மதிப்பிற்கு உரியவனாகி விடுகிறான்.

தீயில் எந்த மரத்தை இட்டாலும் அது பற்றி எரியும். ஆண்டவனிடம் பக்தி என்பது ஓர் அபூர்வமான சாதனை.

பயனை விரும்பிப் புரியப்படும் பக்திக்கும் ஆண்டவன் மதிப்பளிப்பான். பிற்காலத்தில் அந்த பக்தியே பயன் கருதாததாகி பூரணத்துவத்தை நோக்கிச் செல்லும்.

=====================

வினோபா பாவே - கீதைப் பேருரைகள். ஏழாம் அத்தியாயம். 'பிரபத்தி' யில் பக்கம் 114.




பிகு: இப்பதிவு சில அரைகுறை பகுத்தறிவு பதிவுகளின் 'கோயிலில் அபிஷேகம் ஏன்' போன்ற கேள்விகளுக்கு விடையாக உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல.

Monday, May 29, 2006

ராமாயண உட்பொருள்

ராமாயண சாரம்

தபஸிலும் ஸ்வாத்யாயத்திலும் (வேத படிப்பு) மிகச்சிறந்த வால்மீகி ராமாயண காவியம் எழுதினார் என்றால், அதில் மிகச் சிறந்த வேத வேதாந்தங்களை அடக்கி இருக்கிறார்.

ஹிந்து புராணங்களில் symbolism அதிகம் இருக்கின்றன. அவை சொல்ல வரும் விழயங்கள் நுட்பமானவை. உள்கருத்துக்களை நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

Ideal woman ஆன பிராட்டி சீதா பெண்களுக்கு இலக்கணமாக பேசப்படுகிறாள். பிராட்டியை ஜீவனாக உருவகப்படுத்தி, அந்த ஜீவன் எப்படி ஆன்மீக படியேறி பரமாத்மாவை அடைவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் வழி.

ராம என்கிற பதத்துக்கு எல்லா விஷயங்களிலும் ரமிக்கின்றவன் என்று அர்த்தம். (who revels in all beings and things…) எல்லாவற்றிலும் நீக்கமற கலந்திருக்கும் ஆத்மா தான் ராமன். அந்த ஆத்மா இணைந்திருப்பது சீதை என்கிற மனதுடன். சுயகட்டுப்பாடு (self control) இருக்கும் இடத்தில் ஆத்மா என்கிற ராமன் வெளிப்படுவான். எங்கு ஒன்றுக்கொன்று விரோதம் இல்லாமல் புலன் கட்டுப்பாடு (no conflict = a+yodhya) இருக்கிறதோ, அங்கு ராமன் என்கிற ஆத்மா வெளிப்படும்.

ராமன் என்கிற ஆத்மா, சீதை என்கிற மனதுடன் இணையும்போது சம்சாரம் (life) மற்றும் விஷயங்கள் ஏற்படுகின்றன.

சீதை என்கிற மனது எங்கிருந்து வந்தது என்று யாராலும் சொல்ல முடியாது. (அத்வைத்த்தில் இது தீராத தர்க்கம். சங்கரர் இதை அனாதி என்று சொல்லி விட்டுவிட்டார்...)

சீதையும் இந்த பூமியிலிருந்து தோன்றி பூமியிலேயே மறைகிறாள். மனசு எங்கிருந்து தோன்றுகிறது; சமாதி நிலையில் எங்கு மறைகிறது என்று அறிவார் இல்லை.

சீதை என்கிற மனம், ராமன் என்கிற ஆத்மாவுடன் இரண்டற கலந்து வெளி விவகாரங்களில் லயிக்காத வரை பூர்ணமான ஆனந்த நிலையில் இருக்கிறது. (perfect harmony) அது அயோத்தியாக இருந்தாலும், காடாக இருந்தாலும் சரி.

சீதை தங்கமானுக்கு ஆசைப்படும்போது, மனம் கீழான லௌகீக விஷயங்களில் ஆசைப்படும்போது, புறத்தே விரிந்து புலன் கருவிகளை நாட ஆரம்பிக்கிறது. இதுவே ஜீவனுக்கு இறங்கு முகம்.

ராமனின் (ஆத்மாவின்) பூர்ணத்துவத்தை மறந்த / அறியாத சீதை (மனம்), லட்சுமணனை (தபஸ் – முயற்சி) ராமனுக்காக ஏவுகிறாள். இதனால், சீதை (மனம்) பத்துதலை ராவணனுக்கு (பத்து புலன் கருவிகள்) எளிதாக வசப்படுகிறாள். தருமமும், தபஸூம் நிறைந்த உலகிலிருந்து, சீதை லங்கைக்கு (விஷயங்களால் நிறைந்த சம்சாரத்திற்கு material world) கடத்திச் செல்லப்படுகிறாள்.

பின் மனம் பல கஷ்டங்களை அனுபவித்து வருந்தி, ஒரு முகப்பட்டு ராமனுக்கு ஏங்கி சரணாகதி அடைகிறது.

ராமன் (self ஆத்மா) வாலி என்கிற காமத்தை வீழ்த்தி, வானரங்களை (நினைவுகள்) சேர்த்துக்கொண்டு சமுத்திரத்தை (விஷய சுகங்களாக தோன்றும் மாயை) தாண்டி லங்கையை அடைகிறான்.

அதாவது சீதை என்கிற மனம் உள்ளே திரும்பி ஆத்மாவிடம் இடையறாது லயித்தால் மனம் தன் அஸ்தித்வத்தை (இருப்பை) இழக்கிறது. பூர்ணமான புருஷனான ஆத்மா தன்னில் மனதை லயப்படுத்திக்கொண்டாலும், மனதால் பாதிக்கப்படுவது இல்லை.

ஜீவன் தன்னுடைய சுய சொரூபம் சுத்தப்பட்டு பரம்பதப்பட்ட (rehabilated) நிலையில் மனது ஆத்மாவில் ஒடுங்கி மறைகிறது. மோக்ஷ நிலையை எட்டிய ஆத்மாவுக்கு மனதால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. தன் ஆத்ம இன்பத்தில் (kingdom of life) லயித்த அதற்கு மனதின் தேவை இல்லாமல் போகிறது. அதனால், மனது காட்டுக்கு விரட்டப்படுகிறது.

ஆனால், மனஸ் ஆத்மாவின் தொடர்பின் காரணமாக ஞானம் பிறக்கிறது (லவ குசர்கள்). அவர்களின் சாரமாக ராமாயணம் உலகெங்கிலும் பரப்பப் படுகிறது.

இதுவே ராமாயணத்தின் சாரம். இதை உணர்ந்தவனுக்கு பிறப்பில்லை.

Sunday, April 30, 2006

இந்து மதத்தில் பல தைவம் உண்டா?

வேத்த்தை பற்றியும், அது சொல்லுகிற கர்மாக்களை பற்றியும், அந்த கர்மங்களால் ஆராதிக்கப்படுகிற தேவதைகளைப் பற்றியும் மேல் தேசத்தாரும், பிற மதக்கார்ர்களும் பல மறுப்புகளை சொல்லுகிறார்கள்.

அவைகளுக்கு சரியான பதிலை சொல்ல வேண்டியது.

அவைகளில், முதலாவது மறுப்பு. “நாம் பல தைவங்களைப் பூஜை செய்கிறோம். தங்களைப் போல ஒரே தெய்வத்தை நம்புகிறதில்லை – என்பது.

நாம் பல தேவதைகளுக்கு பூஜை செய்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, அவர்களிடமிருந்து நமக்கு வேண்டிய பலன்களைப் பெறுகிறோம். இது உண்மையே.

ஆனால், இவர்கள் தைவமன்று; தைவம் ஒன்றுதான். (ஏகம் சத் – ரிக்வேதம்) தேவதைகள் மனிதர்களான நம்மைப்போலதான். கர்மத்தினால் கட்டுப்பட்டவர்கள். முன்பிறப்புகளில் செய்த புண்ணியங்களாலே சில அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் தைவம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் – வேதத்தையே பார்ப்போம். தேவதைகளுக்கு யஜமானன் இந்திரன். அவன் விருத்திரன் என்ற அஸூரனைக் கொன்ற காலத்தில், அவனுடைய இந்திரியங்களின் சக்தி போய்விட்டது. பிரும்மாவிடம் முறையிட்டுக்கொண்டான். அவர் பால் யாகத்தையும், தயிர் யாகத்தையும் செய்யும்படி உத்திரவு பண்ணினார். அவைகளால் அவனுக்கு சக்தி திரும்பிவந்து, திருப்தி உண்டாயிற்று (யஜூர். அஷ்ட-2, ப்ர-5, அநு-3)

இன்னொரு உதாரணம். ஒரு காலத்தில் யாகம் பண்ணும்போது ருத்திரன் என்ற தேவதையை மறந்துபோய் ஹவிஸ்ஸை கொடுக்கவில்லை. அவன் கோபித்துக்கொண்டு ஆதித்தியர்கள் என்கிற தேவதைகளை தொந்தரவு செய்தான்.

மேலும்....

மித்திரன் என்ற தேவதை யாகங்களில் சரியாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். வருணன் என்கிற தேவதை கெடுதலாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். இவர்கள் இருவரையும் யாகம் செய்கிறவன் சந்தோஷப்படுத்தாவிட்டால், நன்றாய் செய்த அங்கத்தை நன்றாக செய்யப்படாத அங்கத்துடன் சேர்ப்பார்கள். அல்லது அங்கங்களை நன்றாய் செய்யாதபடி செய்வர்கள். ( யஜூர். கா-6, பிர-6, அநு-7)

இப்படி மனிதர்களைப் போல சக்தி இழக்கிறவர்களையும், கெடுதல் செய்கிறவர்களையும் தைவம் என்று புத்தியுள்ளவன் எவன் சொல்லுவான்? ஆகையினால், நம்மைப்பற்றி மேல் தேசத்தார் சொல்லும் குற்றத்துக்கு இடமேயில்லை.

இதன்மேல் ஒரு கேள்வி... தேவதைகள் தைவமன்று என்று சொன்னீரே? அவர்களை ஏன் பூஜிக்கவேண்டும்?

நம்முடைய ராஜா டெல்லியில், அவருடைய பிரதிநிதி ஏதோ மெட்ராஸில் ராஜபவனத்தில் இருக்கிறார்களே, நமக்கு வேண்டியவைகளைப்பற்றி அவர்களை கேட்காமல் கீழ் உத்தியோகஸ்தர்களை ஏன் கேட்கிறோம்? கிராமத்தில் தரிசு நிலத்தை சாகுபடி செய்ய ஆசைப்படுகிறவன் தாசில்தாருக்கு ஏன் மனு செய்து கொள்ளுகிறான்?

ஏன் என்றால், ராஜாவின் பிரதிநிதிக்கு கீழே உத்தியோகஸ்தர்களை படிப்படியாக வைத்து, அவர்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுத்து, அவைகளுக்கு தகுந்தபடி அந்தந்த உத்யோகஸ்தர்களுக்கு மனு செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆகையால், சில விஷயங்களில் தாசில்தாரையும், சிலவற்றில் கலெக்டரையும், சில விஷயங்களில் கவர்னரையும் ஜனங்கள் கேட்கிறார்கள்.

இதுபோல, தைவமானது, நாலுமுக பிரும்மா முதல் அனைகம் அதிகாரிகளை வைத்து அவர்களுக்கு மனிதர்களை காட்டிலும் அதிகமான அறிவையும் சக்தியையும் கொடுத்திருக்கிறது.

ஜனங்கள் அவர்களை பூஜை செய்து தங்களுக்கு வேண்டிய பிரயோஜனங்களை அடையட்டும் என்றும் ஏற்பாடு செய்திருக்கிறது.

இது வேறும் யூகமில்லை. பகவத்கீதையில் கிருஷ்ணனே இப்படி சொல்லியிருக்கிறார். “பகவான் உலகங்களை மறுபடியும் உண்டுபண்ணி, அவர்களுக்கு உடம்புகளையும், இந்திரியங்களையும் கொடுத்து ........ யாகங்களையும் ஏற்படுத்தி, அவர்களை பார்த்து, இந்த (யாக) செயல்களால் நீங்கள் நலம் பெறுங்கள். ........ எனக்கு உடம்புகளான தேவதைகளை இந்த வேள்விகளினால் சந்தோஷப்படுத்துங்கள்... யாகத்தினால் சந்தோஷப்பட்ட தேவதைகள் தாங்கள் மீண்டும் சந்தோஷப்பட வேண்டிய எல்லாவற்றையும் தங்களுக்கு கொடுப்பார்கள்.. “ (அத்தி-3, சு-10,11) என்று.

ஆனால், மனிதனுக்கும் தைவத்துக்கும் வித்தியாசமில்லையா? ராஜாவுக்கு எல்லோருடைய குறைகளை கேட்க முடியாது. ஆனால், தைவம் அப்படியில்லையே? அதற்கு எல்லாம் தெரியும். எதையும் செய்ய சக்தி உண்டு. அதை தடுப்பார் யாருமில்லை. ஆகையாலே எல்லோரும் அதையே கேட்கலாமே? என்று கேட்டால்...

இதற்கு பதில்.....


தைவம் எது நமக்கு நல்லதோ அதையே செய்யும். ஒரு நல்ல தகப்பன் – பிள்ளை கொய்யாப்பழம் வேணும் என்று கேட்டால், அதை வாங்கிக் கொடுப்பதில்லை. படிக்க புஸ்தகம் வேண்டும் என்றால், உடனே அதை வாங்கிக் கொடுக்கிறான். அதுபோல, ஒருவன் மோக்ஷம் வேண்டும் என்று முறைப்படி கேட்டால், கேட்ட காலத்தில் தைவம் அதைக் கொடுக்கிறது. (மோக்ஷத்தை கொடுக்க அந்த தைவத்தால் மட்டுமே முடியும். தேவதைகளால் அன்று...) இந்த உலகத்திலாவது, சுவர்க்கத்திலாவது அனுபவிக்க கூடிய சுகங்களை கேட்டால் உடனே கொடுப்பதில்லை.

தைவத்தினுடைய இந்த அபிப்ராயத்தை தெரியாமல், ஜனங்கள் எப்படியாவது தங்களுக்கு வேண்டிய பலன்களை அடைய முயற்சி செய்வார்கள். தகாத வழியில் போய் கெட்டுப் போவார்கள். இதை நினைத்து, தேவதைகளுக்கு அதிகாரம் கொடுத்து அவர்களை கொண்டு மக்களுக்கு திருப்தி பண்ணி வைக்கிறது.

(மேலும் வரும்...)

- ஸ்ரீ உ.வே. V.K. ராமநுஜாச்சார்யர் ஸ்வாமி உரையிலிருந்து ஒரு பகுதி...

Monday, April 24, 2006

ராவணனும் தசரதனும் - 2

ம்யூஸ் அவர்களுடன் விவாதம் மேலும் தொடர்கிறது.

முதல் பாகத்தை இங்கே பார்த்தோம்:

http://vaithikasri.blogspot.com/2006/04/blog-post.html

மேலும்...

ம்யூஸ்:

தசரதன் மற்றும் ராவணனுக்கு இடையேயான வித்தியாசம் தெரிய வந்தது. காதலுக்கும் காமத்துக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளீர்கள்.

என்னை புரட்சிக்காரனாக வர்ணித்துள்ளீர்கள். எனக்கு தேவைகளின் மேல் இருக்குமளவுக்கு புரட்சிகளின் மேல் நம்பிக்கையில்லை.

தமிழ் நாட்டில் ஏற்கனவே ஒரு புரட்சித் தலைவரும், தலைவியும் உண்டு. அப்படியானால் நான் யார் - புரட்சி புடலைங்காயோ? எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. தங்களை புரட்சிக்காரர்களாக நம்பும் மனிதர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.

ராமன் போன்ற தெளிவான யுக புருஷர்கள் பூமியில் மிகவும் அரிது. அவன் எனக்கும் தெய்வந்தான்.

கிருபானந்த வாரியாரிடம் ஒருவர் ஏறத்தாழ இதே கேள்வியினைக் கேட்டதாகப் பல வருடங்கள் முன்பு படித்தேன். "தசரதன் மட்டும் அத்தனை மனைவியர் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரே பெண்ணுடன் வாழ வேண்டும் என்கிறீர்களே" என்று அந்த மனிதர் கேட்டாராம். அதற்கு வாரியார் "தசரதனால் அனைத்து மனைவியரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிந்தது. உன்னாலும் அது முடியும் என்றால் நீயும் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றாராம்.

நானும் தசரதன் எல்லா மனைவியரையும் ஸந்தோஷமாக வைத்துக் கொண்டான் என்பதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக் கொள்கிறேன்.இருந்தாலும் என்னுடையது கேவலம் மனித மனந்தானே. சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன.

என்னால் ராமன் போல் எல்லா விஷயங்களிலும் தெளிவுடனும், தர்ம சீலனாகவும் இருக்க முடியவில்லை. முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களிடமோ, நான் அறிந்த மனிதர்களிலோ ராமன் போன்றவர்கள் இல்லை. இருக்கவும் முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் அது ஒரு எக்ஸெப்ஷனல் கேஸ், முழுக்க முழுக்க தெய்வீகமானது. அனைவருக்கும் பொருத்த முடியாது.

ஆனால் தசரதன் போன்ற மேன்மையான குணங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். என் அனுபவம் இதை உறுதி செய்கிறது.ஒரு கேள்வியினை என் மனம் என்னிடம் கேட்கிறது.

தசரதன் எனும் ஒரு கணவனால் ஆயிரக் கணக்கான மனைவியரை சந்தோஷமாகவும், காதலுடனும் வைத்துக் கொள்ள முடியும்போது ஒரு மனைவியால் பல கணவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாதா? அப்படிச் செய்தால் கற்பு நிலை தவறுகிறாள் என அனைத்து மத நூல்களும், சமூக ஒழுக்கங்களும் கூறுகின்றனவே.

தங்களுடைய பதிலைப் படித்து இந்தக் குழப்பத்திலிருந்தும் விடுபட ஆசைப் படுகிறேன். தயவு செய்யுங்கள்.

=====================

என் பதில்:

தங்கள் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவைதான். எனக்கு.

என் பதிலுரை:

1. இராமாயணத்தை கேள்வி ஞானம் தான் என்கிறீர்கள். கம்ப ராமாயணத்தை ஒரு தடவையாவது வாழ்க்கையில் படிக்குமாறு கெஞ்சுகிறேன். பக்தி இலக்கியமாக இல்லாவிட்டாலும், கம்பனின் அரசாளும் தமிழுக்காகவும், அந்த பாத்திரங்களை அவன் கையாண்டுள்ள அனுபவத்திற்காகவுமாவது.

2. தசரதன் தன் மனைவி மார்களை காதலித்து சந்தோஷப்படுத்தினான் என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள். நம் கலாசாரத்தில் கணவன் மனைவி இல்லறத்தில் கடமை மேலோங்கியிருக்கும், காதல் இருந்தாலும் தெரியாது.

தசரதன் மனைவி மார்கள் தசரதனின் ஆளுமையில் மயங்கி தன்னை சரண் கொடுத்த சாதாரண இந்திய பெண்கள். அவர்கள் சந்தோஷம் தசரதனின் சந்தோஷத்தில்தான். இதில் மாடர்ன் காதல் வரவில்லை.அச்சமுதாயம் முழுக்க முழுக்க சொசைட்டியை ஒத்து வாழ்வதே இலட்சியமாக கொண்ட சமுதாயம். அதுவே பெருமை அதுவே புகழ் என்று இருந்த நிலை. அதை மனதில் கொள்ளுங்கள்.

3. ராமன் மாதிரி வாழ்வது இயலாது என்று நீங்கள் சொல்வது ராமனை வருத்தம் அடைய செய்யும். மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று காண்பிக்கவே ராமன் அவதரித்தான் என்கின்றன புராணங்கள்.ராமன் மாதிரி வாழ்வதில் குழப்பமே இல்லை.

தனக்கு என்று இஹ வாழ்க்கையில் வேண்டுவது எல்லாம் தன் தன்மானமும் கசடற்ற புகழும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் எல்லா நடவடிக்கைகளிலும் தெரிகிறது. எதைச்செய்தால் சமுதாயத்தில் மாண்போ அதை செய்வதுதான் அவன் வாடிக்கை. அதை புரிந்து கொள்வது எளிதுதான். குழப்பமில்லை.

அவனைப்போல வாழ்வது வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அவன் வழி எல்லோருக்கும் புரிந்த குழப்பமில்லாத வழி.

4. பெண்களும் பல கணவருடன் 'சந்தோஷமாக' இருக்க முடியுமா என்கிறீர்கள். சந்தோஷம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள். கலவி சுகமா. மாடர்ன் லைப் காதலா. இவை இரண்டும் என்றால் நிச்சயம் முடியும். சந்தேகம் இல்லை.

ஆனால், பல கணவன் படைத்த பெண் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை. தாய் மகன் உறவு ரத்த சம்பந்தத்தால் ஏற்படுவதால் அதில் பல மகன்களை தாய் தனதாக்கி கொள்ள முடிகிறது. எல்லாம் தன் உயிராகவே பார்க்கிறாள்.

ஆனால், ஆண் பெண்ணே ஏற்கும் போது தன் எதிர்பார்ப்புக்கு உட்பட்டு ஏற்கிறான். அதனால், ஆணால் பல பெண்களிடம் கலவி இன்பம் விகல்பம் இல்லாமல் பெற முடிகிறது.

அதே அவன் மனதார ஒரு பெண்ணை - அந்த பெண்ணின் உள்ளே உள்ள ஆத்மாவை - காதலிப்பான் ஆனால், அவனாலும் வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்க்க தோணாது. எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.


===================

மீண்டும் ம்யூஸ்:

நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்குப் புரிகிறது, ஏற்றுக் கொள்கிறேன் - கடைசி பாராவை தவிர்த்து.

"அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை."

நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் அந்தக் காலத்திலிருந்ததாகக் கருதப்படும் அபூர்வமான பத்தினிகள் என்ற ஸ்பீஸிஸ் பற்றிக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

தற்காலத்தைச் (கலிகாலத்தை) சேர்ந்த என்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் பேரம் பேசுகிறார்கள் (யு. எஸ். க்ரீன் கார்ட்; கை, பாக்கெட், பீரோ, வீடு, கக்கூஸ் நிறைய பணம்). "மாப்பிள்ளை மாருதி மாதிரியிருந்தாலென்ன. மாருதி எஸ்டீம் எத்தனை இருக்கு?" என்பதுதான் குறைந்த பக்ஷ பேரமே. இதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.

இயற்கையில் எல்லாமே விரிந்து கொண்டு போகின்றன. ஒருவரிடம் தன்னலமற்ற காதலும், காமமும் கொண்ட ஒருவர் அவற்றை விரித்து பல பேரிடமும் கொண்டு செல்ல விரும்ப வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதே.

இவ்விரிவு ஒருவர் மேலேயே விரிந்து கொண்டு போகும் வாய்ப்பும் இருப்பதை உணர்கிறேன். ஆனால், கூட்டணியாய் ஜெயிப்பவரைவிட தனியாக நின்று ஜெயிப்பவருக்குத்தானே மரியாதை என்று சொல்லி ஜோக்கடித்து விடாதீர்கள். கேள்வியே அந்த மரியாதை ஏன் என்பதுதான்.

தசரதனை விடுங்கள். அந்தக் காலத்தில் தசரதனுக்கு இருந்தது போல சாபமில்லாத அரசர்களும், குடிமகன்களும் பல தார மணம் புரிந்துகொண்டார்களே. முதல் மனைவிக்கும் பல ஆண் குழந்தைகளிருந்தாலும் பல திருமணங்கள் செய்து கொண்டார்களே.

எனக்குத் தெரிந்தவரை பல தார மணம் ஒரு சமுதாய கடமை இல்லை. இந்தக் காலத்திலும் இது தொடர்கிறதே. எதற்காக? ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்த உரிமை? மீண்டும் கூறுகிறேன். என்னால் புரட்சி எல்லாம் செய்ய முடியாது.

ஒருதார வாழ்க்கை முறை மீதும், கற்பு எனும் கொள்கை மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எனக்கு உங்கள் மீது மரியாதையைத் தருகிறதே. ஏன்?

ஏனென்றால் நடைமுறையில் நானும் அப்படித்தான் என்பதாலிருக்கலாம். அல்லது குறைந்தபக்ஷம் இவை உயரியவை என்று எனக்கு செய்யப்பட்ட போதனைகள் அடிமனத்தில் குடிகொண்டிருப்பதால்.இன்னமும் தன் மனைவியை மட்டும் காதலிக்கும் டோண்டு மாமாவைப் பார்க்கும்போது பரவசமாகத்தான் இருக்கிறது.

இது போன்ற தம்பதிகளை நமஸ்காரம் செய்வதே நல்ல புத்தியைத் தரும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் என்னை, என் வாழ்க்கையை புரிந்து கொள்ள இவை எல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்று கேள்வி கேட்கிறேன். சில விஷயங்கள் பற்றிய புரிதல்கள் நான் ஸந்தோஷமாக இருக்கவும், உண்மையையும், நிதர்ஸனத்தையும் அறியவும் உதவுகின்றன.

வாழ்க்கை பற்றி கற்றுக் கொண்டே இருக்க ஆசை.காலமும், காலத்தால் ஏற்படும் அனுபவமும், அதை சரியாகப் புரிந்து கொள்ளும் புத்தியும் எனக்கு மேலும் கற்றுக்கொடுக்கட்டும்.

ஓம்

Wednesday, April 19, 2006

ராவணனும் தசரதனும்

திரு ம்யூஸ் அவர்கள் தன் ஒரு பதிப்பில் கற்பு என்றொரு விவாத்த்தில் எனக்கு தெரிந்த அபிப்ராயத்தை முன் வைத்தேன். அவர் திடீரென்று கம்ப்ளீட்டாக புதிதாக ஒரு குண்டை போட்டார். அதாவது (அ) ராமணனும் தசரதனும் ஒரே தவறைதான் செய்தார்கள் (ஆ) ராமன் தசரதன் நடத்தைக்கு வெட்கப்பட்டான் என்று.

அவர் பதிப்பும் என் பதிலும் வருமாறு:

ம்யூஸ்:

ராமாயணத்தில் எனக்கு எழும் ஒரு சந்தேகம். ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே, நீங்கள் இதற்குப் பதில் சொல்லலாமே.ராவணனுக்கு அவனை விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாகிவிடுமென்ற ஒரு சாபம் இருந்தது. அதனாலேயே அவன் சீதையை அசோக வனத்தில் வைத்து நைச்சியம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான். தொட முடியவில்லை.எம்பெருமான் அவனை அழித்ததற்குக் காரணம் அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதே. ஆனால், பெருமானின் தந்தைக்கோ ராவணன் பெற்ற சாபத்திற்கு நேரெதிரான சாபமிருந்ததாகக் கேள்வி. (சரியா என்று தெரியவில்லை.) அதாவது தசரதன் அடிக்கடி திருமணம் செய்ய வேண்டும் என்பதே அச்சாபம் (சாபமா, அல்லது வரமா? :-) ). ராமனின் தந்தையும் பல பெண்களை மணம் செய்து கொண்டவர்தான். இருவரும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தினாலும், தசரதனை வணங்கும் ராமன் ராவணனை அழிக்கிறான். இதுதான் எனக்குப் புரியவில்லை. விளக்கம் தேவை.தன் தந்தையின் நடத்தையே தனயனை ஒரே ஒரு பெண்ணின் மேல் மட்டும் காதல் பக்தி கொள்ளத் தூண்டியதோ என்றும் தோன்றுகிறது.
April 19, 2006 5:47 AM

என் பதில்:

ம்யூஸ் அவர்களுக்கு,தங்கள் கேள்வி விசித்திரமாய் இருக்கிறது. என்ன அடிப்படையில் கேட்கீறீர்கள் என்பது விளங்கவில்லை.

கேலிக்காகவா, இல்லை நிஜமாகவே இது உங்கள் சந்தேகமா.

தசரதன் வருடத்துக்கு ஒரு தடவை மணம் புரிந்தது அவனுடைய சாய்ஸ். அது ஒரு சாபத்திலிருந்து தன்னை காக்க அவன் எடுத்த உத்தி. அவன் யாருடைய மனைவியையும் கடத்தவில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக கெடுக்கவில்லை. மிரட்டி அடிபணியவைக்கவில்லை. அடிமைப்படுத்தி சேவகம் புரிய வைக்கவில்லை.

இந்த நான்கையும் ராவணன் செய்தான்.

பல மனைவிகளை ஏற்பது நம் கலாசாரத்துக்கு உட்பட்ட ஒரு செயல். இதில் வெட்கப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. (தங்களைப் போன்ற புரட்சியாளர்கள் தவிர்த்து).

எத்தனையோ குடும்பங்களில் அக்காவே வற்புறுத்தி தன் தங்கையை மாமாவுக்கு மணம் செய்து வைத்ததை நான் அறிவேன். குழந்தைக்காக.


ஏன், தமிழர் காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் மூத்த தலைவர்களும் இரண்டு மனைவி வைத்துக்கொண்டு பெருமையாக சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்களே!

(இரண்டாவது கல்யாணம் சட்ட விரோதம். இவர்கள் சட்டத்தை மீறியவர்கள்தான். ஆனால், முதல் மனைவியின் புகார் இல்லாமல் கைது செய்ய முடியாது என்ற அற்ப விஷயத்திற்காக இவர்கள் தோளில் துண்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)

தசரதன் பெண்மையை மதித்தவன். தன் மனைவி மார்களை கலந்து ஆலோசிக்காமல் அவன் எந்த முடிவும் எடுக்க மாட்டான். மனைவி கைகேயியுடன் போருக்கு செல்லும் அளவுக்கு அவன் மனைவி மார்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தான்.

அவன் எங்கே! ராவணன் எங்கே.

ராவணன் பார்க்கும் பெண்களை உடனே பெண்டாள நினைப்பவன். தன் அண்ணன் குபேரன் மனைவியையே கற்பழிக்க முயற்சி செய்து சாபம் வாங்கியவன். தேவ லோகத்து பெண்களை தகாது நடந்து சாபம் வாங்கினவன்.

தன் சுய லாபத்திற்காக நாட்டையே பணயம் வைத்தான். மனைவி, தம்பிகள் சொல்லியும் கேட்காமல் தேவிக்காக இலங்கையே அழித்தான். ஆனால், தசரதன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அநியாய கைகேயின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டவன்.

இவர்களை ஒரே தராசில் நீங்கள் காட்டுவது என்ன வருத்தமான விஷயம்!

தசரதன் நடவடிக்கைகளில் வருந்தி ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றான் என்பது மிகவும் அடாதது.

ராமாயணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் ராமன் தசரதன் புகழ் பேசுகிறான். ராமனை நீ யார் என்று யாராவது கேட்டால் போதும், தசரதாட்மஜம் என்று தசரதனின் பையன் என்றுதான் சொல்லிக்கொள்வான்.

காட்டில் பரதனை பார்த்த வுடன் ராமன் கேட்கும் முதல் கேள்வியே நன் பெருமைக்குரிய அப்பா எப்படி என்றுதான். தேவியை காட்டுக்கு வராதே என்று ராமன் கெஞ்சும்போதும் என் அப்பாவுக்கு நீ சேவை செய் என்றுதான் கேட்கிறான்.

ஜடாயுவை கட்டிக்கொண்டு அழும் காரணமே அவர் தசரதனின் நண்பன் என்றுதான். என் அப்பாவையே தங்களிடம் பார்க்கிறேன் என்கிறான்.

இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.தங்கள் பதிப்புகளில் வீச்சு இருக்கும் அளவிற்கு ஆழமும், உண்மையும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.


.கு: தசரதனின் சாபம்: ச்ரவணின் மரணத்தால் அவன் சாக வேண்டும் என்பது. ஆனால், exception ஆக, சாஸ்திரப்படி கல்யாணம் ஆகி ஒரு வருடம் விரதம் முடியாத்தால் விலக்கு. அதனால், வருடா வருடம் புது மணம் செய்து புது மாப்பிள்ளை exemption வாங்கிக் கொண்டார் இவர்.
April 19, 2006 10:58 AM