स्तनौ मांसग्रन्थी कनककलशावित्युपमितौ
मुखं श्लेष्मागारं तदपि च शशाङ्केन तुलितम्।
स्रवन्मूत्रक्लीन्नं करिवरशिरस्पर्धि जघनं
मुहुर्निन्द्यं रूपं कविजनविशेषैर्गुरु कृतम्॥ १६॥
ஸ்தனௌ மாம்ஸக்ரந்தீ கனககலசாவித்யுபமிதௌ
முகம் ஸ்லேஷ்மகாரம் ததபி ச சசாங்கேன துளிதம்
ஸ்ரவன்மூத்ரக்ளீன்னம் கரிவரசிரஸ்பர்தி ஜகனம்
முஹூர்நிந்த்யம் ரூபம் கவிஜனவிசேஷைர்குரு க்ருதம் 16
stanau maa.nsagranthii kanakakalashaavityupamitau
mukha.n shleshhmaagaara.n tadapi cha shashaaN^kena tulitam.h .
sravanmuutrakliinna.n karivarashiraspardhi jaghana.n
muhurnindya.n ruupa.n kavijanavisheshhairguru kR^itam.h .. 16..
breasts which are but two lumps of flesh are compared as golden vessels; the mouth, seat of phlegm and mucus, are compared to the moon; the loins, outlet for wet urine, are the forehead of an elephant; thus poets have glorified the contemptible human form.
மாமிசக்கோளங்களான மார்பகங்கள் தங்க கலசங்களென ஒப்பப்படுகின்றன; எச்சிலின் இருக்கையாக இருந்தாலும் வாயோ வெண்ணிலவுக்கு சமமாகிறது; பெருகும் மூத்திரக்கேடுடைய அரை இடுப்போ, யானையின் மத்தகமாகிறது. வெறுக்கக்கூடிய இவ்வுடலமைப்பை கவிகள் (எத்தனை) உயர்த்திவிட்டார்கள். 16
சௌந்தர்யம் மனதின் கற்பனை. காமம் மனதில் விளைவது. அழகான ரதிகளிடமட்டுமில்லாமல், ஜனங்கள் குரூபிகளிடமும் அதே வேகத்துடன் கூடுகிறார்கள்.
ஏனென்றால், காமம் மனதில் பிரியமான பிரமையை ஏற்படுத்தி அதிலேயே மக்களை மோகிக்க பண்ணுகிறது. அந்த பிரமை அடிக்கடி உருவகப்படுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தின் நினைவால் எழுவது. யோகிகளும், குழந்தைகளும் இந்த நினைவுப்படுத்தல் இல்லாததாலேயே காமத்தில் வீழ்வதில்லை. சொல்லப்போனால், இந்த மல, அஸ்தி, உதிர கூட்டான இந்த உடல், நாடியால் கட்டப்பட்டு, மயிர் அடர்ந்த தோலினால் மூடிய ஒரு மாமிச கூடு. இது உண்மையில் வெறுக்கத்தக்கது. இதில் ரமிக்கும் மக்கள், கழிவில் பெருகும் கிருமிகளை ஒத்தவர்கள்.
அங்கங்களிலும், தோல் பரிமாணத்திலும் மயங்கும் கவிகள் வார்த்தைகளில் பிம்பம் வரைந்து இந்த காம மாயையை மேலும் மனதில் பூட்டுகிறார்கள்.
இந்த பிரமை மறைவதே வாழ்வின் முதல் வெற்றி.
இவ்வுடலாசைக்கு இளமையில் வாழ்க்கையும், முதுமையில் மானமும் பலியாகின்றன.
காமத்தால் கவிகளின் பொய்களை நம்பி, காலத்தின் சுழலில் சிக்கி, வாழ்க்கையின் இலக்கை இழந்து வீழ்ந்தோரை எச்சரிக்கிறார் பர்த்ருஹரி.
9 comments:
காமம் என்பது மனித இயல்பு என கருதினால் அதை அடக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகும். இறைவன் நமக்கு அளித்த உணர்ச்சி அது. அதனால் அதை அடக்க வேண்டியதில்லை.
இதுவே விரதங்களின் நோக்கம்.
இது பற்றி மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்!
தொடரவும்!
செல்வன்,
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
///காமம் என்பது மனித இயல்பு என கருதினால் அதை அடக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகும்.///
காமம் மனித இயல்பா? அது மிருகங்களின் இயல்பு இல்லையா? எது மனித இயல்பு என்று எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்? ஆயிரக்கணக்கான வருடங்களாக போரில் சமுதாயம் அடித்துக்கொண்டு இறந்துகொண்டிருந்திருக்கிறார்கள். அதுதானே மனித இயல்பு. மனித நேயம், மனித உரிமை என்பதெல்லாம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதுதானே? அது தேவையில்லையே? மக்களாட்சி ஒரு நூறு வருடங்களாக, ஆனால் மன்னராட்சி ஆயிரக்கணக்கான வருடங்களாக? எது மனித இயல்பு?
எல்லா உயிரினங்களும் அண்ணன், தங்கை என்றா பழகி காமம் விலக்குகின்றன? அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?
நான் சொல்லவருவது இதுதான். மனிதன் தன்னை வரையறுத்துக்கொண்டே இருக்கிறான். இருக்கவேண்டும். இருப்பான். அப்பொழுதுதான் விஞ்ஞான, ஆன்மீக உயர்வு ஏற்படும். இதுதான் உண்மையான மனித இயல்பு. காமம் என் இயற்கை என்று நாலு மனைவி கட்டுவதல்ல.
என் கருத்துக்களை எழுதுகிறேன். தவறாக கருதவேண்டாம்.
நன்றி
ஜெயராமன்,
மனிதனே ஒரு மிருகம்தான். மிருக உணர்வுகளை அடக்குகிறோம் என போனால் மேலும், மேலும் மிருகமாக வேண்டியதுதான்.
காமம் என்பது இயல்பான உணர்வு. அதை புனிதமாகவோ, பாவமாகவோ பார்த்தால் பயனில்லை. அதற்கு உரிய மரியாதையை கொடுத்தால் போதுமானது.
ஆன்மிகத்துக்கு காமம் எந்த விதத்திலும் தடை இல்லை என்பது என் கருத்து. இதை நீங்கள் ஏற்க வேண்டுமென்பதில்லை. என் கருத்து இது. அவ்வளவே..
வைராக்ய சதகத்தில் காமத்தைப் பற்றியும் பெண்களின் உடலைப் பற்றியும் இப்படி இருக்கலாம். ஆனால் அது எல்லா நேரங்களிலும் எல்லாருக்குமே காமம் என்பது கூடாது என்று ஆகிவிடாது. காமாக்ஷியும் காமேஸ்வரனும் அப்படி சொல்லித் தந்ததாகத் தெரியவில்லையே?
காமம் தீரும்வரை வெண்ணிலவாகவும், தாமரை இதழ்களாகவும் தோன்றுகின்ற அவயங்கள், காமம் தீர்ந்தவுடன் நாற்றம் தருகின்ற மலஜல த்வாரங்களாகத் தெரிகின்றன என்று பெரியோர் கூறுவர்.
தேவை தீர்ந்தவுடன் மனம் மாறும் விந்தையிது. மனத்தால் அணுகும்வரை காமம் அருவறுப்பாகவோ, அல்லது அவஸியமானதாகவோ தோன்றலாம். உண்மை இந்த இரண்டிற்குமிடையேயோ, அல்லது தாண்டியோ இருக்கிறது.
அறிய அனுபவம் இல்லை.
குமரன் ஐயா,
/// வைராக்ய சதகத்தில் காமத்தைப் பற்றியும் பெண்களின் உடலைப் பற்றியும் இப்படி இருக்கலாம். ஆனால் அது எல்லா நேரங்களிலும் எல்லாருக்குமே காமம் என்பது கூடாது என்று ஆகிவிடாது. காமாக்ஷியும் காமேஸ்வரனும் அப்படி சொல்லித் தந்ததாகத் தெரியவில்லையே? ////
தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
காமம் ஆன்மீக வளர்ச்சிக்கு பெருத்த தடை என்பதே எல்லா ஆன்மீகவாதிகளின் ஏகோபித்த கருத்து என்று நினைக்கிறேன். வைராக்யம் பெறுவது என்பது உலக ஆசைகளை துறப்பது. அந்த ஆசைகளில் பிரதானமானது பெண்ணாசை. இதை பாராட்டி ஆன்மீக வளர்ச்சி பெற இயலாது என்பதே சாத்திரங்களின் தீர்வு.
நீங்கள் எழுப்பிய சந்தேகம் மிகவும் பொருத்தமான கேள்வி. என் அதிர்ஷ்டம் இந்த கேள்விக்கு அதே கவி அடுத்த ஸ்லோகத்தில் பதில் தந்திருக்கிறார். இன்று அதை பதித்திருக்கிறேன். படித்து தங்கள் மேலான கருத்தை சொல்லவும்.
நன்றி
ம்யூஸ் அவர்களே,
///தேவை தீர்ந்தவுடன் மனம் மாறும் விந்தையிது. மனத்தால் அணுகும்வரை காமம் அருவறுப்பாகவோ, அல்லது அவஸியமானதாகவோ தோன்றலாம். உண்மை இந்த இரண்டிற்குமிடையேயோ, அல்லது தாண்டியோ இருக்கிறது.////
சத்தியமான வரிகள். இதையேதான் கவி "காமம் மனதில்தான். உடம்பில் அல்ல" என்கிறார். இதையே பல ஆன்மீகவாதிகள் வலியுறுத்துகிறார்கள். Beauty is in the eye of beholder என்பதும் இதையே. மனதில் உயிர்த்து மனதில் நிலைப்பதாலேயே இது ஒரு மாயை என்கிறார்கள்.
தங்கள் நிலைக்கு இந்த என் பேச்சும் உபதேசமும் பொருத்தமற்றதுதான். வாழ்க்கையில் பல வசந்தங்களை நீங்கள் அனுபவித்து பின்னால் நாமிருவரும் வைராக்ய சதகம் பற்றி விவாதிக்கலாம். இல்லாவிட்டால் கோவித்துக்கொள்வீர்கள் :-)))
நன்றி
Kamamthai puthiya parvaiyil kanda ungalathu puthumaikku vanakkam,
Ethuvum amutham than athu alavukku athikamaki nanjakum varai.
Alavana kamame inbam .
Warm regards,
Siva.G
Post a Comment