முன்பு பார்த்தது 16ஆவது ஸ்லோகம் காமத்தின் வீழ்ச்சி
இதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலாக மேலும் தொடர்கிறார் கவி.
சிவனின் தனித்துவம்
ஏகோ ராகிஷூ ராஜதே ப்ரியதமாதேஹார்தஹாரீ ஹரோ
நீராகேஷூ ஜனோ விமுக்தல்லநாஸங்கோ ந யஸ்மாத்பர:
துர்வாரஸ்மரபாணபன்னக விஷவ்யாவித்தமுக்தோ ஜன:
एको रागिषु राजते प्रियतमादेहार्धहारी हरो
नीरागेषु जनो विमुक्तललनासङ्गो न यस्मात्परः।
दुर्वारस्मरबाणपन्नगविषव्याविद्धमुग्धो जनः
शेषः कामविडम्बितान्न विषयान्भोक्तुं न मोक्तुं क्षमः॥ १७॥
eko raagishhu raajate priyatamaadehaardhahaarii haro
niiraageshhu jano vimuktalalanaasaN^go na yasmaatparaH .
durvaarasmarabaaNapannagavishhavyaaviddhamugdho janaH
sheshhaH kaamaviDambitaanna vishhayaanbhoktu.n na moktu.n xamaH 17
Shiva is unique among the sensuous, for he shares half the body with
His beloved; among the dispassionate no one excels Him in detachment from women. Rest of the people, stunned in infatuation by Cupid's irresistible arrows tipped with serpent poison, can neither enjoy their desires nor give them up at will. 17
தம் பிரியமானவளை பாதியுடலாக கொண்ட சிவன், பிரேமிகளில் சிறந்த ஒருவன். (அதே சமயம்), மோகமற்று பெண்ணுறவின்று விடுபட்ட ஜனங்களில் அவனை விஞ்சியவரில்லை. மற்றவர்களோ, தடையற்ற மன்மதனின் பாணமாகிய பாம்பின் விஷத்தால் மதிகலங்கி மோக மயக்கத்தில் விஷயங்களை முழுதும் அனுபவிக்கவோ, (அல்லது) விடவோ சக்தியற்றவர்கள். 17
சிவன் மனித இலக்கணத்துக்கு வரையறாதவன். எல்லாம் விட்டொழிந்த யோகியாகவும், இல்லறம் போற்றும் குடும்பியாகவும் அவன் மிளிர்கிறான். அவன் ஆணுமல்லன், பெண்ணுமல்லன். உலகார் வேண்டாததை அவன் ஏற்கிறான். துன்பம், மயானம், தும்பை, எருக்கு, பனிமலை இவையெல்லாம் சிவார்ப்பணம். அவன் மிக்கோரமுதுண்ண தான் நஞ்சுண்ட மேலவன்.
அவன் ஒரே சமயத்தில் தக்ஷிணாமூர்த்தியாக ஞானத்தின் எல்லையை காட்டி, ஆனந்தத்தின் எல்லையாக நடராஜனாகிறான்.
அவனை நீக்கி, மற்றவர்கள் எல்லாம், இந்திரனோ, ப்ரும்மனோ, திருமாலோ, மனிதர்களோ, அரக்கர்களோ, பசுக்களோ அனைவரும், காமத்தால் மயங்கி சுழலுபவர்களே.
12 comments:
அய்யா,
காமம் இருப்பதால்தானே இனவிருத்தி நடக்கிறது? எல்லாரும் இப்படி வைராக்கியமாக இருந்துவிட்டால் (ஒரு பேச்சுக்குத்தான்!) மனித இனமே அழிந்துவிடாதா?
இந்த celebacy பிரச்சனையால்தானே எல்லா மத குருக்களும் திருட்டுத்தனமாக் காமம் அடைய முயன்று, விஷயம் வெளியில் வந்து சந்தி சிரிப்பதால் மததுக்கே அவலமாகிறது?
இப்பதிவு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் சிஷ்யர் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் கூறிய ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது.
அஸ்வத்தாமன் யுத்தத்தின் முடிவில் பாண்டவ வம்சத்தையே அழிக்கும் பிரம்மாஸ்திரத்தை விட, அது உத்திரையின் கருவில் இருக்கும் பரீட்சித்தைப் பீடிக்கிறது. குழந்தை வெளியில் உயிர்த்துடிப்பில்லாத பிண்டமாய் வந்து விழ அதைக் காப்பாற்ற கிருஷ்ணர் விரைகிறார்.
குந்தியிடம் ஒரு சுத்த பிரம்மச்சாரி இக்குழந்தையைத் தொட்டு தூக்கினால் குழந்தை பிறக்கும் எனக் கூற, குந்தியும் பல பிரம்மச்சாரிகளை வரவழைக்கிறார். ஆனால் ஒரு பலனும் இல்லை. ஆகவே கடைசியில் கிருஷ்ணர் அக்குழந்தையைத் தூக்க அது உயிர் பெறுகிறது. பிரமாஸ்திரமும் அகலுகிறது.
ஒரு மாடு கம்பில் தன் கழுத்தைத் தேய்த்து அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும். அக்கம்பு போலத்தான் தான் என்பதை கண்ணன் உணர்த்துவதாகக் கதை போகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனானி ஐயா,
////காமம் இருப்பதால்தானே இனவிருத்தி நடக்கிறது? எல்லாரும் இப்படி வைராக்கியமாக இருந்துவிட்டால் (ஒரு பேச்சுக்குத்தான்!) மனித இனமே அழிந்துவிடாதா? ///
காமத்தை வேண்டாம் என்று ஆன்மீகம் சொல்லவில்லை. அதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், ஆன்மீக வளர்ச்சிக்கு அது இடையூறு என்று புரிந்துகொள்ளவேண்டும். காம வாழ்க்கை இருப்பவனுக்கு ஆன்மீகமோ, பக்தியோ இருக்காது என்றும் அர்த்தம் அல்ல. ஆனால், அவை ஒரு வரம்பிற்குள் இருக்கும்.
இந்த காம குடும்ப வாழ்க்கை ஒரு படிக்கல். இதில்லாமல் உலகம் ஸ்தம்பித்து விடும் என்று நீங்கள் சொல்வது உண்மைதான். அதனால் இது தடைசெய்யப்பட்டது அல்ல. ஆனால், இந்த படியிலேயே நின்றுவிடக்கூடாது.
ஆன்மீகம் பல லெவலில் மனிதனை அளவிடுகிறது. முதலில் கர்மங்களை (யாகம், பூசை முதலியன) செய் என்று கட்டளை இடுகிறது. பின்பு, அதில் தேர்ந்தவனுக்கு, இவை எல்லாம் வளர்ச்சிக்கு தடை. உண்மையில் இறைவனுக்கு பூசை இல்லை என்று சொல்கிறது. முறையாக பார்க்காவிட்டால் இது என்னடா இடக்குமடக்காக இருக்கிறதே என்று தோன்றும்.
இந்த விஷயமும் அதேபோல்தான்.
எனக்கு தோன்றியது இது.
தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
டோண்டு சார்,
///ஒரு மாடு கம்பில் தன் கழுத்தைத் தேய்த்து அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும். அக்கம்பு போலத்தான் தான் என்பதை கண்ணன் உணர்த்துவதாகக் கதை போகிறது.///
அற்புதமான ஒரு கதையை சொல்லியிருக்கிறீர்கள். இது நான் இதுவரை அறியாதது. தகவலுக்கு நன்றி. கண்ணனின் மாயையை புரிந்துகொண்டவர்களே அவன் மாயையை வென்றவன் என்பதை புரிந்துகொள்வார்கள். இல்லாவிட்டால் கண்ணனின் காதை கொச்சைப்படுத்தப்படுகிறது. அவன் பதினாயிரம் மனைவிகளோடு வாழ்ந்தான் என்பது அவன் யோக சக்தியையும், அவன் மாயையை வென்ற கருத்தையுமே உள்ளடக்கியது.
கண்ணன் நாமம் வாழ்க.
நன்றி
விளக்கத்திற்கு நன்றி திரு. ஜெயராமன் அவர்களே!
ஆன்மீகம் காமத்தை தடை செய்யவில்லையென்றால், பொதுவாக மத குருக்கள் (இந்து மட்டுமல்ல ) காமத்தை கைவிட வேண்டும் என்ற கொள்கை எங்கிருந்து தோன்றியது? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கொள்கை மிகவும் சரியானது. ஆனால் காமம் ஒருவனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தடை, அதனால் அதை விடு அல்லது தவிர் என்று சொல்வது புரியவில்லை. ஒரு திருமணமான குடும்பஸ்தன் ஆன்மீகத்தையும் சம்சார வாழ்க்கையையும் சமாளிக்க இந்து மதம் என்ன அறிவுறைக்கிறது?
டோண்டு மாமா,
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதுபோல் நீங்கள் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் கதையெல்லாம் படித்துவிட்டு பெண்கள் தேவைக்கேற்றார்போல் கிடைத்த கம்பில் தேய்த்துக்கொள்ளலாம், மாட்டிக்கொள்ள மட்டும் கூடாது என்று எழுதிவிட்டு இங்கே வந்து ஜல்லியடிக்கப்ப்டாது!
அற்புதமாக கேள்வி கேட்கும் அனானி ஐயா,
///ஆன்மீகம் காமத்தை தடை செய்யவில்லையென்றால், பொதுவாக மத குருக்கள் (இந்து மட்டுமல்ல ) காமத்தை கைவிட வேண்டும் என்ற கொள்கை எங்கிருந்து தோன்றியது? ////
ஆன்மீகம் காமத்துக்கு தடை இல்லை. இதே முன்பே சொன்னேன். ஆனால், காமம் கலந்த ஆன்மீகம் ஒரு எல்லைக்குள் நின்றுவிடுகிறது. இதையும் முன்பே சொன்னேன். அதனால், மத குருக்கள் மட்டுமல்ல எல்லோருமே உலகப்பற்றை விட்டொழித்தால் இன்னும் ஆன்மீகத்தில் சிறக்கலாம். மத குருக்கள் ஆன்மீகத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று பாமரர்கள் விரும்புவதால், அவர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதே மரபு. அதைப்பார்த்து மற்றவர்கள் இது சாத்தியம், இது நல்லது என்று உலகப்பற்றை விட்டொழிக்க முயர்ச்சிப்பார்கள் என்பதே இதன் குறிக்கோள்.
(இங்கு காமம் என்பது ஆசை என்று பொது பொருளிலேயே பேசப்படுகிறது. தமிழில் காமம் என்றால் உடலாசை. ஆனால், வடமொழியில் காமம் என்றால் பொதுவில் ஆசை. வீடு கட்ட காமம் என்பது போல். காமாட்சி, காமகோடி என்பதெல்லாம் இப்பொருளிலேயே வருகின்றன. அறியாதவர்களும், இந்து விரோதிகளும் கொச்சைப்படுத்துவதுபோல எண்ணாதீர்கள் என்று வேண்டுகிறேன்.)
மற்ற மதங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால், மத குருமார்கள் என்பவர்கள் இந்து மதத்தில் கிடையாது.
மடாபதிகள் சன்னியாசிகள் அல்ல. இவர்கள் இருவரும் மத-குருமார்கள் (pope, bishop மாதிரி) இல்லை.
சன்னியாசிகள் உலகப்ற்றை விட்டொழித்தவர்கள். மடாதிபதிகள் - சங்கரமடம் போன்ற சில மடங்களை தவிர - குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள்தாம்.
தங்கள் கேள்விகளை பார்க்கும்போது தாங்களும் பொதுப்படையாக விஷயமறியாதவர்கள் சொல்லும் கொச்சையான ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே அறிந்து ஒரு எண்ணம் தோற்றுவித்துக்கொண்டீர்களோ என்று தோன்றுகிறது. என் விடைகள் அதற்கு அரைகுறை சமாதானமாகவாவது இருக்குமானால் மகிழ்வேன்.
////அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கொள்கை மிகவும் சரியானது. ஆனால் காமம் ஒருவனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தடை, அதனால் அதை விடு அல்லது தவிர் என்று சொல்வது புரியவில்லை. /////
ஏன் புரியவில்லை? சிற்றின்பத்தில் உழலும்வரை எது உண்மையான இன்பம் என்று புரியாது. ஒரு நிலையில் இதை விட்டால்தான் மற்ற இன்பங்கள் மனதில் பதியும்.
மொந்தைக்கள் குடித்து ருசிகண்டவனிடம் நீ பால்பாயசம் சாப்பிடு என்றால் அவன் என்ன இது இத்தனை ருசியானதை ஏன் விடவேண்டும் என்று கேட்பது அவன் பழக்கதோழம் மற்றும் அறியாமையே.
இந்த ஆசைகள் புற பொருட்களை சார்ந்துள்ளதால் எப்போதும் இவை துன்பமாக மாறலாம். எல்லா உலகப்பற்றையும் விட்டொழித்தால் பரிபூர்ணமான ஆனந்தத்தில் இவன் ஆனந்தம் வெளிப்பொருட்களை சாராத்தால் அந்த ஆனந்தம் நிரந்தரமாகிறது.
முதல் வகுப்பு குழந்தைக்கு கைவிரல்களில் கூட்டல் பழகினால், பின் கூட்டல் கைவிரல்களிலா இருக்கிறது. கைவிரலை சார்ந்த கூட்டல் ஒரு பத்தோடு முடிகிறது. அதை மீறி கூட்டலை அறிந்தவன் எண்ணற்ற எண்களை கூட்டுகிறான்.
பின் மேலும் தேறி, எண்கள் என்பவையே ஒரு concept மட்டுமே. அவை decimal ஆக இருந்தாலும், binary ஆக இருந்தாலும் ஒரே விஷயம்தான். ஏன், என்னாலும் ஒரு எண் system த்தை நிறுவமுடியும் என்று அறிகிறான். அதுவே எல்லாம் உயர்ந்த அத்வைத நிலை.
///ஒரு திருமணமான குடும்பஸ்தன் ஆன்மீகத்தையும் சம்சார வாழ்க்கையையும் சமாளிக்க இந்து மதம் என்ன அறிவுறைக்கிறது? ///
இவ்வுலகில் மிகுந்த விழுக்காடு காம்ய பக்திதான். அதாவது ஏதாவது வேண்டியே இறையிடம் தொழும் மக்கள். கீதையில் இதை இறைவன் ஒப்புகிறான். அவர்களும் என் சிறந்த பக்தர்களே என்கிறான்.
தனக்கு, தன் குடும்பத்துக்கு, தன் வாழ்க்கைக்கு என்று உழலும் மக்களும் இறைவனிடம் நெருங்கியவர்களே. சுகங்கள் வேண்டும் என்று வேண்டுபவர்கள் அந்த சுகங்களும் ஒரு விலங்கே என்று அறியாமலோ, அது பரிபக்குவம் அடையாமலோ இருப்பவர்கள்.
அவர்களுக்கு கர்ம மார்க்கத்தை இறைவன் காட்டுகிறான். ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என்று இரண்டு வழிகள் உள்ளன. கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் என்று பெயர்கள். செயல் புரிந்து மீட்சி, செயலை ஒழித்து மீட்சி என்று இவை விளக்கப்ப்டும்.
இல்லற வாழ்க்கையில் இருக்கும் ஜீவன்களுக்கு தன் கடமைகளை வழுவாமல் செய்து, தான் செய்யவில்லை எல்லாம் இறைவனே செய்விக்கிறான் என்று உணர்ந்து தன் வாழ்க்கையை நடத்திக்கொள்வதே இந்துமதம் காட்டும் வழி
நன்றி
விளக்கத்திற்கு மிக்க நன்றி திரு. ஜெயராமன் அவர்களே! ஆசையை ஒழி என்ற அர்தத்தில் பார்க்கும்போது தெளிவாக் புரிகிறது.
மடாதிபதிகள் குறித்து எனக்கு எந்தவிதமான தப்பான் அபிப்ராயமும் இல்லை. எனக்கு தோணுவது என்னவென்றால், அவர்களும் குடும்ப வாழ்க்கை அனுபவிப்பதில் தவறில்லை. அடுத்தவன் உயிரை எடுக்க பத்துவா போடுவதைவிட இது ஒன்றும் பெரிய பாவமில்லை.
மீண்டும் நன்றி.
நல்லதொரு உயரிய தத்துவத்தைச் சொல்லும் பாடலும், தகுந்த பின்னூட்டங்களும், அதற்கான விளக்கங்களும், திரு. ஜெயராமன்!
மிக நன்றாக இருக்கிறது.
அனானியின் கேள்விக்கு இன்னுமொரு எளிய விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.
காமம் வேறு, இனவிருத்தி வேறு.
காமம் என்பது அளவுக்கு மீறிய ஆசை.
இதிலும் இனவிருத்தி நிகழலாம்; நிகழும்; நிகழாமலும் போகலாம்.
ஒரே ஒரு ஆண் விந்துவும், ஒரு கரு முட்டையும் சேர்வதுதான் நிகழணும் இனவிருத்திக்கு.
ஆனால்,இனவிருத்தி என்பது குடும்ஸ்தர்களுக்கு மட்டுமே விதித்த ஒன்று, இந்து மத கோட்பாடின்படி.
சந்யாசிகள் இனவிருத்தியில் ஈடுபடக் கூடாதென்பது விதி.
காமத்தை அடக்கி ஆள்பவனே உண்மையான சந்யாசி.
தாங்கள் சந்யாசம் மேற்கொள்ளும்போதே இப்படி ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டே இவர்கள் இதில் நுழைகிறார்கள்.
எனவே இதுவும்[காமமும்] இவர்களுக்கு விலக்க வேண்டிய ஒன்றாகிப் போகிறது.
இதன் அடிப்படையில் இந்த விஷயத்தை அணுகினால், கொஞ்சம் புரியலாம்!
ஆனால், இங்கோ, காமம் என்பதே உடலுறவு, இனவிருத்தி என்னும் பொருளில் தான் பார்க்கப் படுகிறது.
அதனால் தான், குழப்பம்!
சிவபெருமானின் பெருமைகளை அருமையாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துகள்.
வைராக்கிய சதகத்திற்கான தங்கள் விளக்கவுரை நன்று. அதனிலும் அதை தேவநாகிரி வடிவத்திலும் தந்து ஆங்கிலத்திலும் இட்டமை மிகநன்று...
மதனையே எரித்த மகேசனின் மகத்துவத்தை சொன்ன விதம் அருமை.. தொடரட்டும் தங்கள் திருப்பணி....
பரஞ்சோதி, சாத்வீகன் அவர்களுக்கு உங்கள் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி
சாத்வீகன் ஐயா, சிவனைப்பற்றிய மேலும் சிறிய அறிவுற்பட்ட சில விஷயங்களை சிவராத்திரிக்காக எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். நன்றி
Post a Comment