Tuesday, September 19, 2006

எந்த நிலையிலும் ஆசை - வைராக்ய சதகம் - VIII

முன் பகுதியில் 14 ச்லோகம் வரை பார்த்தோம்.

மேலும், தொடருகிறேன்....

================

பாடல் - 15


bhikShA-shanaM tadapi nIrasam eka-vAraM
shayyA ca bhUH parijano nija-deha-mAtram |
vastraM vishIrNa-shata-khaNDa-mayI ca kanthA
hA hA tathApi viShayA na parityajanti ||15||

भिक्षा-शनं तदपि नीरसम् एक-वारं
शय्या च भूः परिजनो निज-देह-मात्रम्।
वस्त्रं विशीर्ण-शत-खण्ड-मयी च कन्था
हा हा तथापि विषया न परित्यजन्ति॥१५॥

பிக்ஷா-சனம்-ததபி-நீரஸமேகவாரம்
சய்யா ச பூ: பரிஜனோ நிஜ தேஹ மாத்ரம் |
வஸ்த்ரம் விசீர்ண சத கண்ட மயீ ச கந்தா
ஹா ஹா ததாபி விஷயா ந பரித்யஜந்தி || 15 ||

===================

பொருள் - 15


தினசரி ஒருவேளை கிடைக்கும் பிச்சையிட்ட, அதுவும் சுவையற்ற, உணவு; பூமியே படுக்கை; உண்மையில் (இவ்) உடல் மட்டுமே சேவகன்; தேய்ந்துபோய் நூறு துண்டுகளாகி தைத்த துணியே உடுப்பு; ஹா!! ஹா!! இருந்தாலும், விஷய சுகங்களை (ஒருவன்) விடுவதில்லை || 15 ||

====================

மேலுரை - 15


வாழ்க்கை நிராசையானவருக்கும் விஷயங்களில் ஆசை நிற்பதில்லை என்கிறார் கவி. எல்லா சாதனங்களை துறந்தோருக்கும் அவர்கள் அனுபவிக்காத சுகங்களில் ஆசை குறைவதில்லை. இதுவே ஆச்சரியம் என்பதை ஹா!! ஹா!! என்று வியக்கிறார். புவி (பூ:) என்பது கட்டாந்தரை என்பது சூட்சுமம். துறவிக்கு அவன் உடலே சேவகன் என்பது அவனுக்கு வேறு ஆதரவுகள் இல்லை என்பதை சுட்டும். இங்கு கவி தீராத ஆசையின் பிடியில் உழலும் தன்னைக் குறித்தே முக்கியமாக சொன்னாலும், பரித்யஜந்தி என்று பொதுவாகவே சுட்டி இதுவே உலக நியதி என்று காட்டுகிறார். || 15 ||

======================

1 comment:

ஜடாயு said...

ஜயராமன்,

இந்த சுலோகத்தில் அந்த "ஹா ஹா" என்ற ஆஹ்லாதனம் பிரமாதம். கந்தை என்ற தமிழ்ச் சொல்லின் மூலம் कन्था என்ற பதம் என்றும் தெரிந்து கொண்டேன்.

இதே பொருளில் மோஹமுத்கரம் நூலில் ஆதி சங்கரரின் பாடல் ஒன்றும் வருகிறது -
अंगम् गलितं फलितं मुंडम्
दशनविहीनम् जातम् तुण्डम् ।
करतलभि़क्ष: तरुतलवासः
तदपि न मुन्चति आशापाशः ॥

"உடல் நைந்து தேய்ந்தது, தலை மொட்டையாய் விட்டது,
பல் எல்லாம் போய்விட்டது
கையில் பிக்ஷை பாத்திரம்
மரத்தடியில் வாசம்
ஆனாலும் போகவில்லையே ஆசாபாசம்!"

இந்த சுலோகத்தை விட பர்த்ருஹரியின் பாடலில் கவித்துவம் மிக நன்றாக இருக்கிறது.

நாளும் கவிச்சுவை நல்கும் தங்களுக்கு நன்றிகள்!