நான் ஒரு சமயம் இரயிலில் போய்க் கொண்டிருந்தேன். யமுனை பாலத்தின் மீது வண்டி சென்றது. அருகிலிருந்த ஒருவர் மிக்க மகிழ்ச்சியோடு அதில் ஒரு காசை எடுத்து எறிந்தார்.
பக்கத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் 'நாடு ஏற்கனவே ஓட்டாண்டியாய் இருக்கிறது; போதாதற்கு இவர்கள் வேறு காசை வீணே எறிகிறார்கள்!' என்றார்.
நான் "நீங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. எந்த பாவனையோடு அவர் ஒரு காசை எறிந்தாரோ அதற்கு நான்கைந்து காலணா மதிப்பாவது உண்டா இல்லையா?
பிற நல்ல காரியங்களுக்காக இக்காசைக் கொடுத்திருந்தால் இத்தானம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். இதைப்பற்றி நாம் பின்னர் யோசிப்போம். ஆனால், அந்த பக்தர் இக்காசைத் துறந்தது, இது வெறும் ஆறல்ல, ஆண்டவனது கருணையே இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கிறது என்ற பாவனையினாலேயே ஆகும். இப்பாவனைக்கு உங்கள் பொருளாதார சாத்திரத்தில் ஏதேனும் இடம் உண்டா?
நாட்டின் ஆறு ஒன்றைக் கண்டதும் அவரது உள்ளம் உருகிப் போய் விட்டது. இப்பாவனைக்கு, உணர்ச்சிக்கு நீங்கள் மதிப்பளிக்க முடியுமானால், அதிலிருந்து நான் உங்கள் தேசபக்தி எவ்வளவு என்று அறிந்து கொள்வேன்" என்றேன்.
தேசபக்தி என்பதற்கு வெறும் சோறு என்பதுதான் பொருளா? நாட்டின் பெறிய ஆறு ஒன்றைப் பார்த்ததும் நம் செல்வம் அனைத்தையும் அதில் ஆழ்த்தி விடுவோம். அதன் பாதங்களில் சமர்ப்பித்து விடுவோம் என்ற பாவனை எழுமானால் அது எவ்வளவு பெரிய தேசபக்தியாய் இருக்க வேண்டும்?
அந்த எல்லாச் செல்வங்களும், அந்த மஞ்சள்-வெள்ளை கட்டிகளும், புழுக்களின் மலத்தினால் ஆன முத்துக்களும், நிலக்கரியினால் ஆன வைரமும் - இவை அனைத்தின் மதிப்பும் நீரில் ஆழ்த்தி விடத் தக்கவையே.
ஆண்டவனது பாதங்களின் எதிரில் இவற்றை எல்லாம் மண், இழிந்தவை என்றே மதி.
ஆற்றுக்கும் ஆண்டவனுடைய பாதங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இந்த சிருஷ்டி இருக்கிறதே, அதற்கும் ஆண்டவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா இல்லையா?
"ஆறு என்பது பிராணவாயுவும், நீரகமும் சேர்ந்தது; சூரியனோ 'காஸ்' வெளிச்சத்திற்கு ஒரு பெரிய மாதிரி. அதை வணங்குவதாவது!"
உனது சோற்றுப்பானை இருக்கிறதே, அதைத்தான் விழுந்து கும்பிட வேண்டுமா? அச்சோற்றில்தான் அப்படி என்ன வைத்திருக்கிறது? அதுவும் பார்க்கப்போனால் ஒரு வெள்ளை மண்ணே. அதற்காக உனக்கு ஏன் நாக்கில் இவ்வளவு நீர் ஊறுகிறது?
இவ்வளவு பெரிய சூரியன் உதித்திருக்கிறது; இவ்வளவு அழகிய ஆறு ஓடுகிறது; இவைகளில் ஆண்டவனை உணர முடியாவிட்டால் வேறெங்குதான் உணர முடியும்?
ஆங்கிலக்கவி வோர்ட்ஸ் வொர்த் மிகுந்த துயரத்துடன், 'முன்பெல்லாம் வானவில்லைக் கண்டால் துள்ளிக் குதிப்பேன்; என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி எழும். ஆனால், இப்பொழுது நான் ஏன் மகிழ்ச்சியால் குதிப்பதில்லை? முன் இருந்த வாழ்க்கை இன்பத்தை இப்பொழுது இழந்து கல்லாகிவிட்டேனா?' என்று கேட்கிறார்.
அதாவது, பயனைக் கருதிச் செய்யும் பக்திக்கு, விவரம் அறியாத நாட்டுப்புற மக்களின் பக்தி-பாவனைக்கு, பெருமதிப்புண்டு.
இறுதியில் அதிலிருந்தே பேராற்றல் உதிக்கும். மனிதன் எத்தகையவனாக இருந்தாலும், ஆண்டவன் சன்னதிக்கு ஒருமுறை வந்துவிட்டால் அவன் மதிப்பிற்கு உரியவனாகி விடுகிறான்.
தீயில் எந்த மரத்தை இட்டாலும் அது பற்றி எரியும். ஆண்டவனிடம் பக்தி என்பது ஓர் அபூர்வமான சாதனை.
பயனை விரும்பிப் புரியப்படும் பக்திக்கும் ஆண்டவன் மதிப்பளிப்பான். பிற்காலத்தில் அந்த பக்தியே பயன் கருதாததாகி பூரணத்துவத்தை நோக்கிச் செல்லும்.
=====================
வினோபா பாவே - கீதைப் பேருரைகள். ஏழாம் அத்தியாயம். 'பிரபத்தி' யில் பக்கம் 114.
பிகு: இப்பதிவு சில அரைகுறை பகுத்தறிவு பதிவுகளின் 'கோயிலில் அபிஷேகம் ஏன்' போன்ற கேள்விகளுக்கு விடையாக உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல.
25 comments:
//பிகு: இப்பதிவு சில அரைகுறை பகுத்தறிவு பதிவுகளின் 'கோயிலில் அபிஷேகம் ஏன்' போன்ற கேள்விகளுக்கு விடையாக உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல//
சரியான குறிப்பு
அமெரிக்காவில் கூட குளத்தில் காசை எறியும் பழக்கம் உண்டு ஜயராமன்.make a wish and throw a dime என்பார்கள்.
ஓ பாரத தேசமே இந்த காசின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதை உனக்கு அர்பணிக்கிறேன் மதிப்பை உயர்த்தி மீண்டும் என்னிடம் தருவாய் என்றாகக்கூட இருக்கலாமே தி ரா ச
ஜயராமன்,
மிக அழகான கதை.
செயல் அல்ல, நோக்கமும், ஆட்டிட்யூடும்தான் முக்கியம் என்பதை விளக்கியது. நன்றிகள்.
சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்.
//பயனைக் கருதிச் செய்யும் பக்திக்கு, விவரம் அறியாத நாட்டுப்புற மக்களின் பக்தி-பாவனைக்கு, பெருமதிப்புண்டு.//
I feel it is a good interpretation
இப்பாவனைக்கு உங்கள் பொருளாதார சாத்திரத்தில் ஏதேனும் இடம் உண்டா? அற்புதம்.
நான் சென்ற சித்திரை 2004; கும்பகோணம் சென்ற போது,வற்றியிருந்த மகா மகத்தீர்த்தக் கேணியில் சில பெரியவர்களும்,சிறியவர்களும் (ஏழைகள்)சேற்றைக் கிண்டிக் கிளறி அலசிக் கொண்டிருந்தார்கள்; ஒரு சிறுவனிடம் ஏன்? இதைச் செய்கிறீர்கள்;என்று கேட்டபோது, சில 5;10 பைசா நாணயங்களைக் காட்டினான். புரிந்து கொண்டேன்.
இதில் என்னனா?எந்தப் புண்ணியவானோ! புண்ணியவாட்டியோ! தங்களிடமுள்ள தங்கத்தையும்,வைரத்தையும் கொட்டுராங்கயில்லை. மயிரைக் கொடுத்து (நானும் தான்) ஆண்டவனைச் சமாதானப் படுத்துபவங்கதானே!நாம்; அதனால் புத்தி கெட்டதனமா?? ஆண்டவனிடம் கூட எங்க அர்ப்பணிப்பு இராது.
அமெரிக்கர் குளத்தில் காசு போடுவது மாத்திரமல்ல! ஈராக்கிலும் குண்டு போடுரார்கள்;தேவையானால் இந்தியாவுக்கும் போடுவார்கள்;ஆகவே அமெரிக்கா செய்யும் எதுவும் எமக்கு வேண்டாம்.
சிலர் புனிதர் பட்டத்திற்காகத் "தொழுநோயாளருக்கு தொண்டு செய்து போட்டோவுக்கு போஸ்" என எழுதி ,யாரையோ இழுத்துள்ளார். நான் ஓர் சைவன் எனினும் மதத்துக்கப்பால்;அவரை மதிக்கிறேன்.
போட்டோவுக்கென்ன??? உலகத்தையே கொடுத்தாலும்;நானோ,ஜெயராமன் அண்ணாவோ;இதைக் குறிப்பிட்டவரோ! ஏன் எங்கள் சங்கராச்சாரியார் கூடச் செய்யமாட்டோம். என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கோவிலில் அபிஷேகம் ஏன்"-என்பதற்குப் பதில் என்ற தொடர்மூலம்,நீங்கள் குட்ட நினைச்சது யாரோ!!
ஆனால் குட்டியது. பலவருடங்களுக்கு முதல்"துக்ளக்"கில் "தயானந்த சரஸ்வதி சுவாமிகள் என்று ஆத்மீகம் சம்பந்தமான வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்தவருக்கு. இது சம்பந்தமான கேள்விக்கு;தவறு நடக்கிறது. இயன்றவரை மாற்ற முயல்கிறோம்.பக்தர்கள் உணரும் போது படிப்படியாக மாற்றம் வந்து;முற்றாக மாறுமென நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவர் பதில் எனக்கு மிகத் திருப்தியைத் தந்தது.
சமயப்பற்று சிலருக்குள்ளளது. சிலருக்கு வெறியாக உள்ளது.
ஆண்டவன் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
யோகன் பாரிஸ்
///சிலர் புனிதர் பட்டத்திற்காக கேமராக்களின் முன்பு தொழுநோயாளிகளுக்குச் செய்யும் சேவைகளின் மதிப்பும் உண்மையில் குறைவுதான் என்கிற வகையிலும் நான் இந்தக் கதையைப் புரிந்து கொண்டேன்.///
மியூஸ் அவர்களே...நீங்கள் அன்னை தெரசாவைத்தான் சொல்லுகிறீர் என்று உறுதிபடுத்துங்கள் முதலில்...பிறகு என் வாதத்தை எடுத்து வைக்கிறேன்...
செல்வா சார்,
///தெரெஸா என்பவர் எந்தவகையிலும் புனிதர் கிடையாது. ///
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் ஒரு உயர்ந்த மனிதர் என்றே கருதுகிறேன். அவர் எந்த மத்த்தில் இருந்தாலும், அவர் ஒரு துறவி தியாக வாழ்க்கையின் எடுத்துக்காட்டு என்றே என் (அறியாத) மனம் சொல்லுகிறது.
தாங்கள் பெயருடன் இதை பின்னூட்டம் இட்டிருப்பதால் இதை பிரசுரித்தேன். தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
நன்றி
செல்வா பெயரில் போலி பின்னூட்டம் இங்கே
ஐயா ஒரு சந்தேகம்,
மேலே சொன்ன நிகழ்ச்சியில், கையில் ஒரு சாப்பாட்டுப் பொதி இருக்கிறது. அருகிலேயே பசியோடு ஒரு ஏழைச் சிறுவனும் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, நதிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அந்தச் சாப்பாட்டுப் பொதியை ஆற்றில் போடுவது தேசபக்தியா அல்லது அருகில் இருக்கும் சக மனிதப் பிறவி, சக இந்தியனுக்கு பசியாற்றுவது தேசபக்தியா?
இதையே கொஞ்சம் விரிவுபடுத்திப் பாருங்கள், கோயில்களில் அபிஷேகம் செய்வதும், ஆற்றில் காசு எறிவதும் தவிர்க்க வேண்டியவை என்று புரியலாம். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய" வள்ளலார் ஆன்மிகபெருமகனா, அல்லது பட்டினியும் ஏழ்மையும் வாட்டும் திருநாட்டில் பொருட்களை வீணடிப்பவர்கள் ஆன்மிகர்களா? வினோபாவின் கருத்தும் விளங்கவில்லை, அதை எடுத்துப் போட்டுள்ள உங்களது நோக்கமும் விளங்கவில்லை.
அன்புடன்,
மா சிவகுமார்
ஜயராமன் ஸார்,
மன்னிக்கவும். செந்தழல் ரவியின் யூகம் ஒரு விதத்தில் சரியே.
நான் கூறியது ஸ்ரீமதி தெரஸா பற்றியதே.
உடனடியாக பதிலளிக்கமுடியாததற்கு வேலைப்பளுவே காரணம்.
வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வலைப்பதிந்து வருகிறேன். என்னதான் வேலை செய்யுமிடத்தில் பெஸ்ட் பெர்ஃபார்மர் விருது கிடைத்துவந்தாலும், அலுவலகக் கணிணியில் வேலைகள் முடிந்த பின்னால் பதிவு செய்வது லேசான உறுத்தலாகவே இருக்கிறது. இதனால் வீட்டிற்கு இன்டெர்னெட் கனெக்ஷனுக்கு விண்ணப்பித்துள்ளேன். அது கிடைக்கும்வரை பதிவுலகத்தின்பக்கம் விலகியிருந்தேன். வேலைப் பளு வேறு.
இங்கே என்னைக் காணாமல் திரு. செந்தழல் ரவி வருந்திக்கொண்டிருக்கிறார் என்பதே எனக்கு மதிப்பிற்குரிய டோண்டு அவர்கள் தொலைபேசித்தான் தெரிய வந்தது. அவரின் மேலும், தங்களின் மேலுமுள்ள மரியாதையின் காரணமாக உடனடியாகப் பதிலளிக்கிறேன்.
இதைப் பற்றி பேசுவதற்கு முன்னால், என்னையும் தங்களைப் போலவே அதிர்ச்சியடையச் செய்த விஷயங்கள் என்ன என்பதையும், அது பற்றிய ஆதரவான, எதிர்ப்பான, மற்றும் நடுநிலமையான விஷயங்கள் பற்றியும் தெரிந்துகொள்வது ஒரு சரியான ஆரம்பமாகவிருக்கும் என்று தோன்றுகிறது. கீழே மூன்று விதமான விஷயங்களும் உள்ளன:
தெரெஸாவிற்கு எதிரான கருத்துக்கள்:
1. http://bliss192.blogspot.com/2005/08/osho-jokes-on-mother-teresa.html
2. http://bliss192.blogspot.com/2005/08/osho-on-mother-teresa.html
3. http://bliss192.blogspot.com/2005/08/christopher-hitchens-on-mother.html
4. http://www.slate.com/id/2090083/
5. http://www.amazon.com/gp/product/185984054X/104-6065537-5723135?v=glance&n=283155
6. http://www.lipmagazine.org/articles/featpostel_56.htm
7. http://www.secularhumanism.org/index.php?section=library&page=hitchens_24_2
8. http://www.saintmychal.com/hitchens.htm
9. http://www.population-security.org/swom-96-09.htm
நடுநிலமையான கருத்துக்கள்:
1. http://www.h-net.org/~women/threads/rev-hitchens.html
2. http://en.wikipedia.org/wiki/Mother_Teresa
தெரெஸாவிற்கு ஆதரவான கருத்துக்கள்:
1. http://www.intellectualconservative.com/article3484.html
2. http://www.catholicleague.org/research/hating_mother_teresa.htm
சிவகுமார் அவர்களே,
தங்கள் பின்னூட்டம் இட்டதும் கேள்வி கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
///மேலே சொன்ன நிகழ்ச்சியில், கையில் ஒரு சாப்பாட்டுப் பொதி இருக்கிறது. அருகிலேயே பசியோடு ஒரு ஏழைச் சிறுவனும் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, நதிக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அந்தச் சாப்பாட்டுப் பொதியை ஆற்றில் போடுவது தேசபக்தியா அல்லது அருகில் இருக்கும் சக மனிதப் பிறவி, சக இந்தியனுக்கு பசியாற்றுவது தேசபக்தியா?////
இதற்குத்தான் வினோபாஜீ ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறாரே. இதில் என்ன சந்தேகம்?
அந்த பெரியவரின் வார்த்தைகளை பாருங்கள்....
////பிற நல்ல காரியங்களுக்காக இக்காசைக் கொடுத்திருந்தால் இத்தானம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். ////
இதே கருத்துதான் எனக்கும்.
ஆனால், தங்களின் அபிஷேகம் முதலான செயல்களுக்கு ஒரே மாதிரியாக தவறு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.
இந்தியாவில் ஏழைகளும் தேவைகளும் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்காக, மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி விட வேண்டும் என்பது கம்யூனிச சித்தாந்தம். இது எங்குமே ஜெயித்ததில்லை. இம்மாதிரி கேட்டுக்கொண்டே போனால் பிறகு எல்லாமே தப்பாகத்தான் தெரியும்.
ஏன், சொல்லப்போனால், நீங்கள், நான் எல்லோருமே இந்தியாவின் சராசரிவிட கொஞ்சம் உயர்வாகத்தான், ஆண்டவன் புண்ணியத்தில், இருக்கிறோம். நமக்கு பிடித்ததை தாராளமாக செய்து கொள்கிறோம். அதற்காக நீங்கள் தவறு என்று சொல்வீர்களா?
நான் என் மகனுக்கு ஒரு 300 ரூபாய்க்கு அழகான ஒரு டாய் வாங்கினேன். அட்டா, என்ன ஒரு இரக்கமில்லாத மனிதன். அதை ஒரு அனாதைக்கு கொடுத்திருக்கலாமே என்று கேட்பீர்களா. இறைவனும் என் மன அன்பிற்கு உரியவன் தானே. இறைவனுக்கு கொடுத்த அபிஷேகம் பல மடங்காக பெருகி உலகை வாழ்விக்கும் என்று சாத்திரம் சொல்கிறது. அக்னியில் இடப்பட்ட நெய் தேவர்களுக்கு சந்தோஷம் அளித்து அவர்கள் மழை பொழிவிக்கிறார்கள் என்று என் சாத்திரம் சொல்கிறது. அதை மனதார நம்புபவன் நான்.
ஏன், அந்த அபிஷேகம் செய்த பாலை யாரும் குடிக்க கூடாது என்று சாத்திரம் சொல்லவில்லையே. என் வீட்டில் அபிஷேகம் நடந்தால் அதைத்தானே செய்கிறோம். கோயிலில் இதை செயல்படுத்த சோம்பேறிகள் விழைவதில்லை. அதற்காக, அபிஷேகம் எப்படி தவறாகும். கோயில்களில், தேங்காய் உடைக்கும் போது, இளநீர் நிறைய வீணாவதை கண்டு என் மனம் வாடுகிறது. அதை சேமித்து எல்லோருக்கும் பிரசாதமாக கொடுக்கலாமே? இளநீர் ஒரு அற்புதமான உணவு.
இப்படி சாத்திர விரோதம் இல்லாமல் பல நல்ல காரியங்களை நாம் செயல் படுத்த வேண்டும். அதை விடுத்து இந்த நம்பிக்கைகள் தவறு என்று சொல்வது சரியில்லை என்பதே என் தீர்மானமான எண்ணம்.
பக்கத்தில் குழந்தை கையேந்தும்போது அபிஷேகம் செய்பவன் யாரும் இருக்க முடியாது. இந்த எக்ஸ்ட்ரீம் உதாரணம் தாங்கள் அபிஷேகத்தை தவறு என்று நிலை நாட்ட போட்டது என்று எணக்கு தோன்றுகிறது.
அமெரிக்காவில் ஜனங்கள் நாயுக்காக செலவழிக்கும் பணத்தில் ஒரு குட்டி நாட்டையே நடத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? அதனால், நாய் வளர்ப்பு தவறா. அப்படி, நாய் வளர்ப்பை தடை செய்தால், அவர்கள் எல்லோரும் மனம் வருந்தி ஆப்பிரிக்காவுக்கு பணம் கொடுத்து விடுவார்களா?
நன்றி
ரவி அவர்களே,
செல்வாவின் பதிவு போலி என்று தாங்கள் அறிவுறுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.
அதை எடுத்தாகி விட்டது.
அதில் அன்னை தெரசாவை பற்றி விமர்சித்திருந்ததால் மட்டும் நீங்கள் இதை எனக்கு சொல்லவில்லை, மற்றபடி தங்கள் எண்ணங்களை ஒத்த ஒரு போலி பதிவையும் தாங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்
நன்றி
மியூஸ் அவர்களே...யாரை பற்றியும் கண நேரத்தில் புழுதி வாரி தூற்ற ஆன்லைனில் ஆயிரம் லிங்குகள் உள்ளது...
ஏன் உங்களை பற்றிகூட போலிதளம் உள்ளது...என்னை அதை நம்ப சொல்லுகிறீரா என்ன ?
காந்தி மகா பாவி என்று 100 தளம்..
புத்தர் அயோக்கியன் என்று 200 தளம்..
ஏசு திருமணமாகி குழந்தை குட்டியோடு வாழ்ந்தார் என்று ஆயிரம் தளம்..
முகமது பற்றி தூற்ற பல தளம்..
இது எல்லாம் மனம்பிழன்றவர்கள் செய்யும் வேலை..
அதற்க்காக பெரும்பான்மையோர் மனம் புன்படும்படியாக எழுதலாமோ ?
காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி அவதூறி வருவர் சிலர்.ஏன் ஆன்லைனில் ஆயிரம் லிங்க் இருக்கும்..அதற்க்காக நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்று எங்களை தூற்ற வந்துவிட்டீரா ?
இதில் நடுநிலை லின்க் வேறு கொடுத்திருக்கிறீர்..
சிந்திப்பீர்..செயல்படுவீர்..
Dear Selva,
////Jeyaram,
Why did you remove my post? I am very much a real person.
H.Selva ////
I am very sorry. I didn't know your genuine ness. I was taken simply by Ravi's advice. I don't know on what basis (and why) he adviced like that.
I apologize for this lapse.
I request you to re-send your comment. I will publish this.
Thanks
Jay
//
ஏன், சொல்லப்போனால், நீங்கள், நான் எல்லோருமே இந்தியாவின் சராசரிவிட கொஞ்சம் உயர்வாகத்தான், ஆண்டவன் புண்ணியத்தில், இருக்கிறோம். நமக்கு பிடித்ததை தாராளமாக செய்து கொள்கிறோம். அதற்காக நீங்கள் தவறு என்று சொல்வீர்களா?
//
இது தான் அவர்களது பிரச்சனை. இதை உணர்ந்த கம்யூனிஸ்டுகள் இதைப் பற்றி பேசுவதில்ல. இந்த புது convert கள் (நேற்றுவரை கோவில் குழம் என்று அலைந்து திரிந்துவிட்டு, திடீர் "பகுத்தறிவு" மாற்றம் பெற்றவர்கள்) இதையெல்லாம் யோசிக்காமல் அபிஷேகம் யாகம் பற்றி "அவர்கள்" எழுதிய கருத்துக்களைப் படித்து இப்படி சுய ஏளனத்தில் சந்தோஷம் காண்பார்கள்.
H. Selva சொன்னது இதுதான்....
தெரெஸா என்பவர் எந்தவகையிலும் புனிதர் கிடையாது. கொடுங்கோலன் துவாலியரை ஆதரித்த அம்மையார் அவர். மேலும் பல பித்தலாட்டங்களை இங்கே படிக்கலாம்.
http://en.wikipedia.org/wiki/The_Missionary_Position
http://www.indiastar.com/DhiruShah.htm
--
செல்வா புரொபைல் வேலைசெய்யவில்லை..ஏன்? ஏன் ஒரு போலி செல்வா பெயரில் மீண்டும் என் கமென்டை வெளியிடு என்று சொல்லக்கூடாது ? சிந்திக்கவும்..
//தங்கள் எண்ணங்களை ஒத்த ஒரு போலி பதிவையும் தாங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்///
எந்த பதிவு ?
ஜெயராமன்,
உங்கள் தனி மடல் முகவரி கிடைக்காதலால் இங்கே பின்னூட்டமாக இடுகிறேன்.
தயவு செய்து இந்த பதிவைப் பார்க்கவும்
விளக்கமான பதிலுக்கு நன்றி ஜெயராமன் அவர்களே!
குழந்தைக்கு முன்னூறு ரூபாயில் பொம்மை வாங்குவது தவறா? நட்சத்திர ஓட்டலில் போய் உணவு உண்பது தவறா? கணினி பயன்படுத்துவது தவறா என்று நிறைய கேள்விகள் எழும். எது ஆடம்பரம் என்று நான் எழுதிப் பார்த்தேன்.
http://masivakumar.blogspot.com/2006/06/blog-post_115115693343230201.html
எது ஆடம்பரம் என்பது ஒருவருக்கொருவர் மாறும். ஆனால் சில இடங்களில் ஐயமறத் தீர்மானிக்க முடிகிறது அல்லவா? கருணைக் கடலான இறைவன், எங்கும் நிறைந்த இறைவன், நம் எல்லோரையும் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது ஆடம்பரம்தான் என்று நான் நினைக்கிறேன். உள்ளம் உள் நெக்குருகி கண்ணீர் மல்க ஒரு கணம் இறைவனை நினைத்து நின்று விட்டால் ஆயிரம் அபிஷேகங்களுக்கு ஈடாகி விடுமல்லவா?
எல்லாவற்றையும் கம்யூனிஸ்டுகள் என்று ஒரு கட்டம் போட்டு ஒதுக்கி விடாதீர்கள். இறை பக்தி இல்லாத அறிவு வீண் என்று திருவள்ளுவரிலிருந்து ஐன்ஸ்டீன் வரை கூறி விட்டார்கள். மனிதம் சாராத இறைபக்தி கொடுமை என்றும் பலர் சொல்லியிருக்கிறார்கள்.
ஏதோ எனக்குப் புரிந்ததைச் சொல்கிறேன். நல்ல கோணத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
இது என்ன வகையான விவாதம் என்றே புரியவில்லை.கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு.ஏழைக்கு செலவு செய்யணும் என்ற கடமையும் உண்டு.இரண்டையும் செய்துகொண்டு தான் இருக்கிறேன்.
ஏழைக்கு செலவு செய் என யாரும் சொல்லாமலேயே செய்வேன்.பாலாபிஷெகம் செய்யாதே என என்னிடம் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.அமெரிக்கா வருமுன் ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாத்தி பால்,தேன்,தயிர்,சந்தனம் என அபிஷேகம் செய்து கும்பிட்டு விட்டுத்தான் வந்தேன்.அதே சமயம் ஒரு அனாதை விடுதி குழந்தைகள் அனைவருக்கும் பெட்ஷிட் வாங்கித்தந்து விட்டுத்தான் வந்தேன்.இரண்டும் என்னை பொறுத்தவரை மனதுக்கு நிறைவளித்த நிகழ்ச்சிகள்.
ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷெகம் செய்தாலும் தப்பில்லை.அவனவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு.அதை அவனுக்கு மனதுக்கு சந்தோஷம் தரும் எந்த காரியத்திலும் செலவு செய்யலாம்.இதில் வீண்,வீணில்லாதது என்று எதுவும் கிடையாது.
செல்வன் அவர்களே,
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
தாங்கள் சொல்லும் கருத்துக்களையே நான் சிவகுமார் அவர்களின் பதிவில் பின்னூட்டமாய் இட்டேன். நம்மிருவரின் கருத்துக்களும் ஒத்துப்போவது சந்தோஷம். அதாவது, அவனவன் உழைத்து சம்பாதித்த காசை அவனவன் தோணின வழியில் (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்) செலவழிக்கும் வரை எதுவுமே ஆடம்பரம் இல்லை.
நன்றி
ஜெயராமன்,
இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இன்றைய சமூக அமைப்பைச் சாடுவதாகப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
http://masivakumar.blogspot.com/2006/07/blog-post_12.html
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார் ஐயா,
////ந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இன்றைய சமூக அமைப்பைச் சாடுவதாகப் புரிந்து கொள்ள முயலுங்கள்.///
படித்தேன். சந்தோஷப்பட்டேன். என் சாதாரணமான ஒரு கருத்தை பின்னூட்டமாக போட்டுள்ளேன்.
தங்கள் சுட்டியதற்கு மிக்க நன்றி
மேலும் எழுதுங்கள்.
Post a Comment