Thursday, August 24, 2006

ஆசை என்னும் நதி - வைராக்ய சதகம் - VI

வைராக்ய சதகம் (வைராக்கியம் நூறு) என்ற இந்த அற்புதமான பாடல் மேலும் தொடர்கிறது.

முந்தைய பாகத்தை இங்கே பார்த்தோம்.

===================


AshA nAma nadI manoratha-jalA tR^iShNA-tara~NgAkulA
rAga-grAhavatI vitarka-vihagA dhairya-druma-dhvaMsinI
mohAvarta-sudustarAtigahanA prottu~Nga-cintA-taTI
tasyAH para-gatA vishuddhamanaso nandanti yogIshvarAH 10



ஆஷா நாம நதீ மனோரத-ஜலா த்ருஷ்ணா-தரங்காகுலா
ராக-க்ராஹவதீ விதர்க-விஹகா-தைர்ய த்ரும த்வம்ஸினி
மோஹாவர்த-ஸூதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்க-சிந்தா-தடீ
தஸ்யா: பர-கதா விசுத்தமனஸோ நந்தந்தீ யோகீச்வரா: 10



आशा नाम नदी मनोरथ-जला तृष्णा-तरङ्गाकुला
राग-ग्राहवती वितर्क-विहगा धैर्य-द्रुम-ध्वंसिनी।
मोहावर्त-सुदुस्तरातिगहना प्रोत्तुङ्ग-चिन्ता-तटी
तस्याः पर-गता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः॥१०॥

நம்பிக்கை என்னும் இந்த நதி விருப்பங்கள் என்னும் வெள்ளம் நிறைந்து, பொருட்களில் ஆசை என்னும் அலைகள் பெருத்து அடித்தபடி விரோதமான பேராசையெனும் காகங்கள் வசிக்க, புலனிச்சைகள் ஆர்ப்பரித்து இழுக்க, கரைகளிலுள்ள தைரியம் என்னும் மரங்களை வீழ்த்தியபடி ஓடுகிறது. மேலும், மோகங்களாலான ஆழமான சுழல்களையும், கவலை என்னும் உயரமான கரையையும் கொண்ட இந்த நதியை பெரும் யோகிகளே சுத்தமான மனதுடன் தாண்டி சுகமடைகிறார்கள் 10



The river of hope flows, with fantasies as water, with agitating waves of desires, with birds of scheming greedy thoughts, attachments (to objects) grasping in, felling the trees of courage on its banks. With whirlpools of ignorance and steep banks of anxiety, Yogis pass this river with pure minds and enjoy supreme happiness.

==================================================


na saMsArotpannaM caritam anupashyAmi kushalaM
vipAkaH puNyAnAM janayati bhayaM me vimR^ishataH
mahadbhiH puNyaughaishcira-parigR^ihItAshca viShayA
mahAnto jAyante vyasanamiva dAtuM viShayiNAm 11


न संसारोत्पन्नं चरितम् अनुपश्यामि कुशलं
विपाकः पुण्यानां जनयति भयं मे विमृशतः।
महद्भिः पुण्यौघैश्चिर-परिगृहीताश्च विषया
महान्तो जायन्ते व्यसनमिव दातुं विषयिणाम् ॥११॥


ந ஸம்ஸாரோத்பன்னம் சரிதம் அனுபச்யாமி குசலம்
விபாக: புண்யானாம் ஜனயதி பயம் மே விம்ருஶத:
மஹத்பி: புண்யௌகைச்சிர பரிக்ருஹீதாச்ச விஷயா
மஹாந்தோ ஜாயந்தே தாதும் விஷயிணாம் 11



I don’t see (true) wellness arising from good-deeds performed in life after life. On deep thought, I am scared about huge accumulation of merits, resulting in constant fulfillment of sensual pleasures, ending up in further attachment to (sensual) objects, which produce misery. 11

சம்சாரங்களில் இடையறாது செய்த புண்ணியங்களால் (முடிவான) நலம் (நான்) காணவில்லை. ஆழ்ந்து சிந்திக்கும்போது, (இந்த) புண்ணியங்களின் சேர்க்கை எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த புண்ணியங்களின் பெரும் சேர்க்கை, புலனின்பங்களை நுகர்ப்பித்து, விஷயங்களில் இன்னும் ஆட்பித்து பெரும் துயரத்தையே கொடுக்கின்றன. 11

6 comments:

Krishna (#24094743) said...

ஜெயராமன் ஸார்: தங்களின் இந்த வலைப்பூ ஒரு ஆன்மீக சங்கமம். மிக்க பொருட்செறிவும், தெளிவும் கூடிய விளக்கங்கள் தங்களின் விசாலமான அறிவின் அறிகுறிகள். தொடரட்டும் இந்த பணி.

Can you send me the s/w for writing in sanskrit?

ஜயராமன் said...

க்ருஷ்ணா அவர்களே,

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

You can type Sanskrit using any of the many tools available.

Generally, any software that types marathi or hindi will do.

For tamil and sanskrit together, Baraha can make you type both.

For Sanskrit, personally, I use Itranslator2003 program. This is very simple. This has vedic accents also. Hence, I like this.

The link is
http://www.omkarananda-ashram.org/Sanskrit/Itranslt.html

Thanks

Jayaraman

Anonymous said...

Jayaraman,

Excellent post!!!
may god bless you!!
expecting more articles from you
Rgds
Raghs

குமரன் (Kumaran) said...

ஜயராமன் ஐயா. வைராக்ய சதகத்திற்குப் பொருள் சொல்லும் நல்ல செயலைச் செய்கிறீர்கள். மிக்க நன்றி.

//ஆஷா நாம நதீ மனோரத-ஜலா த்ருஷ்ணா-தரங்காகுலா
ராக-க்ராஹவதீ விதர்க-விஹகா-தைர்ய த்ரும த்வம்ஸினி
மோஹாவர்த-ஸூதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்க-சிந்தா-தடீ
தஸ்யா: பர-கதா விசுத்தமனஸோ நந்தந்தீ யோகீச்வரா: 10
//

இந்தச் சுலோகத்தைப் படிக்கும் போது 'கைவர்த்தக கேஸவ:' என்று முடியும் கீதா த்யான சுலோகம் நினைவிற்கு வருகிறது.

//ந ஸம்ஸாரோத்பன்னம் சரிதம் அனுபச்யாமி குசலம்
விபாக: புண்யானாம் ஜனயதி பயம் மே விம்ருஶத:
மஹத்பி: புண்யௌகைச்சிர பரிக்ருஹீதாச்ச விஷயா
மஹாந்தோ ஜாயந்தே தாதும் விஷயிணாம் 11

சம்சாரங்களில் இடையறாது செய்த புண்ணியங்களால் (முடிவான) நலம் (நான்) காணவில்லை. ஆழ்ந்து சிந்திக்கும்போது, (இந்த) புண்ணியங்களின் சேர்க்கை எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த புண்ணியங்களின் பெரும் சேர்க்கை, புலனின்பங்களை நுகர்ப்பித்து, விஷயங்களில் இன்னும் ஆட்பித்து பெரும் துயரத்தையே கொடுக்கின்றன
//

புண்ய பாபங்கள் இரண்டுமே கை விலங்குகள் தான். ஒன்று பொன்விலங்கு. இன்னொன்று இரும்பினால் ஆனது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே. உண்மை தான் இந்த சுலோகம் சொல்வது. எத்தனை நுணுக்கமான கருத்து இது. சாதாரணமாக மனதில் தோன்றாதது இது. பாவங்களைச் செய்யக்கூடாது. சரி. புண்ணியங்களைச் செய்ய வேண்டும். சரி. புண்ணியங்கள் செய்வதால் என்ன பயன்? நல் வாழ்க்கை கிடைக்கும். சரி. நல்வாழ்க்கை என்றால்? கஷ்டம் இல்லாமல் வேண்டியது கிடைக்கும் வாழ்க்கை. சரி. ஆனால் அப்படி எல்லா சுகங்களும் கிடைத்தால் என்ன ஆகிறது? அந்த சுகங்களில் மேலும் மேலும் நம் மனம் ஆழ்கிறது. வாசனைகள் கெட்டிப் படுகின்றன. அதனால் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு. மீண்டும் துன்பம். அதனால் புண்ணியமும் செய்யாமல் விட்டுவிடலாமா?

இந்தக் கேள்விக்குத் தான் பகவான் கீதையில் ஒரு நல்ல வழி சொல்லியிருக்கிறார். பாவம் செய்ய வேண்டாம். புண்ணியம் செய்ய வேண்டும். ஆனால் அதனைச் சாத்வீகத் தியாகத்துடன் செய்ய வேண்டும். கர்ம பல த்யாகம் செய்வதால் இந்த சுழற்சி அறுந்து போகிறது. விடுதலை கிடைக்கிறது.

புரிகிறது. ஆனால் செயலில் உள்ளதா? இல்லையே. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... என்றாற்போல அவன் கருணையை எதிர்பார்த்து நிற்கிறேன்.

ஜயராமன் said...

குமரன்,

அற்புதமாக விளக்கியிருக்கிறீர்கள்.

கர்மா இல்லாமல் ஒரு க்ஷணம்கூட இருக்க முடியாததால், நல்ல கர்மத்திலேயே லயித்திரு, முனை என்பதே க்ருஷ்ணனின் ஆக்ஞை என்பது பிரஸித்தம். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

VSK said...

இந்த வைராக்ய சதகத்தை நான் ஒருமுறை படித்திருக்கிறேன்.

ஆனால், பொருளுடன் படிக்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கிறது.

மற்றபடி "பின்னூட்ட விளக்க நாயகன்" குமரன் வேறு மிக அழகுற விளக்கியபின் வேறென்ன சொல்வகு?

இதைத் தொடர்ந்து, தயா சதகம் எழுதுங்கள்!

பொருத்தமாக இருக்கும்.

நன்றி.