Sunday, April 30, 2006

இந்து மதத்தில் பல தைவம் உண்டா?

வேத்த்தை பற்றியும், அது சொல்லுகிற கர்மாக்களை பற்றியும், அந்த கர்மங்களால் ஆராதிக்கப்படுகிற தேவதைகளைப் பற்றியும் மேல் தேசத்தாரும், பிற மதக்கார்ர்களும் பல மறுப்புகளை சொல்லுகிறார்கள்.

அவைகளுக்கு சரியான பதிலை சொல்ல வேண்டியது.

அவைகளில், முதலாவது மறுப்பு. “நாம் பல தைவங்களைப் பூஜை செய்கிறோம். தங்களைப் போல ஒரே தெய்வத்தை நம்புகிறதில்லை – என்பது.

நாம் பல தேவதைகளுக்கு பூஜை செய்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, அவர்களிடமிருந்து நமக்கு வேண்டிய பலன்களைப் பெறுகிறோம். இது உண்மையே.

ஆனால், இவர்கள் தைவமன்று; தைவம் ஒன்றுதான். (ஏகம் சத் – ரிக்வேதம்) தேவதைகள் மனிதர்களான நம்மைப்போலதான். கர்மத்தினால் கட்டுப்பட்டவர்கள். முன்பிறப்புகளில் செய்த புண்ணியங்களாலே சில அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் தைவம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் – வேதத்தையே பார்ப்போம். தேவதைகளுக்கு யஜமானன் இந்திரன். அவன் விருத்திரன் என்ற அஸூரனைக் கொன்ற காலத்தில், அவனுடைய இந்திரியங்களின் சக்தி போய்விட்டது. பிரும்மாவிடம் முறையிட்டுக்கொண்டான். அவர் பால் யாகத்தையும், தயிர் யாகத்தையும் செய்யும்படி உத்திரவு பண்ணினார். அவைகளால் அவனுக்கு சக்தி திரும்பிவந்து, திருப்தி உண்டாயிற்று (யஜூர். அஷ்ட-2, ப்ர-5, அநு-3)

இன்னொரு உதாரணம். ஒரு காலத்தில் யாகம் பண்ணும்போது ருத்திரன் என்ற தேவதையை மறந்துபோய் ஹவிஸ்ஸை கொடுக்கவில்லை. அவன் கோபித்துக்கொண்டு ஆதித்தியர்கள் என்கிற தேவதைகளை தொந்தரவு செய்தான்.

மேலும்....

மித்திரன் என்ற தேவதை யாகங்களில் சரியாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். வருணன் என்கிற தேவதை கெடுதலாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். இவர்கள் இருவரையும் யாகம் செய்கிறவன் சந்தோஷப்படுத்தாவிட்டால், நன்றாய் செய்த அங்கத்தை நன்றாக செய்யப்படாத அங்கத்துடன் சேர்ப்பார்கள். அல்லது அங்கங்களை நன்றாய் செய்யாதபடி செய்வர்கள். ( யஜூர். கா-6, பிர-6, அநு-7)

இப்படி மனிதர்களைப் போல சக்தி இழக்கிறவர்களையும், கெடுதல் செய்கிறவர்களையும் தைவம் என்று புத்தியுள்ளவன் எவன் சொல்லுவான்? ஆகையினால், நம்மைப்பற்றி மேல் தேசத்தார் சொல்லும் குற்றத்துக்கு இடமேயில்லை.

இதன்மேல் ஒரு கேள்வி... தேவதைகள் தைவமன்று என்று சொன்னீரே? அவர்களை ஏன் பூஜிக்கவேண்டும்?

நம்முடைய ராஜா டெல்லியில், அவருடைய பிரதிநிதி ஏதோ மெட்ராஸில் ராஜபவனத்தில் இருக்கிறார்களே, நமக்கு வேண்டியவைகளைப்பற்றி அவர்களை கேட்காமல் கீழ் உத்தியோகஸ்தர்களை ஏன் கேட்கிறோம்? கிராமத்தில் தரிசு நிலத்தை சாகுபடி செய்ய ஆசைப்படுகிறவன் தாசில்தாருக்கு ஏன் மனு செய்து கொள்ளுகிறான்?

ஏன் என்றால், ராஜாவின் பிரதிநிதிக்கு கீழே உத்தியோகஸ்தர்களை படிப்படியாக வைத்து, அவர்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுத்து, அவைகளுக்கு தகுந்தபடி அந்தந்த உத்யோகஸ்தர்களுக்கு மனு செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆகையால், சில விஷயங்களில் தாசில்தாரையும், சிலவற்றில் கலெக்டரையும், சில விஷயங்களில் கவர்னரையும் ஜனங்கள் கேட்கிறார்கள்.

இதுபோல, தைவமானது, நாலுமுக பிரும்மா முதல் அனைகம் அதிகாரிகளை வைத்து அவர்களுக்கு மனிதர்களை காட்டிலும் அதிகமான அறிவையும் சக்தியையும் கொடுத்திருக்கிறது.

ஜனங்கள் அவர்களை பூஜை செய்து தங்களுக்கு வேண்டிய பிரயோஜனங்களை அடையட்டும் என்றும் ஏற்பாடு செய்திருக்கிறது.

இது வேறும் யூகமில்லை. பகவத்கீதையில் கிருஷ்ணனே இப்படி சொல்லியிருக்கிறார். “பகவான் உலகங்களை மறுபடியும் உண்டுபண்ணி, அவர்களுக்கு உடம்புகளையும், இந்திரியங்களையும் கொடுத்து ........ யாகங்களையும் ஏற்படுத்தி, அவர்களை பார்த்து, இந்த (யாக) செயல்களால் நீங்கள் நலம் பெறுங்கள். ........ எனக்கு உடம்புகளான தேவதைகளை இந்த வேள்விகளினால் சந்தோஷப்படுத்துங்கள்... யாகத்தினால் சந்தோஷப்பட்ட தேவதைகள் தாங்கள் மீண்டும் சந்தோஷப்பட வேண்டிய எல்லாவற்றையும் தங்களுக்கு கொடுப்பார்கள்.. “ (அத்தி-3, சு-10,11) என்று.

ஆனால், மனிதனுக்கும் தைவத்துக்கும் வித்தியாசமில்லையா? ராஜாவுக்கு எல்லோருடைய குறைகளை கேட்க முடியாது. ஆனால், தைவம் அப்படியில்லையே? அதற்கு எல்லாம் தெரியும். எதையும் செய்ய சக்தி உண்டு. அதை தடுப்பார் யாருமில்லை. ஆகையாலே எல்லோரும் அதையே கேட்கலாமே? என்று கேட்டால்...

இதற்கு பதில்.....


தைவம் எது நமக்கு நல்லதோ அதையே செய்யும். ஒரு நல்ல தகப்பன் – பிள்ளை கொய்யாப்பழம் வேணும் என்று கேட்டால், அதை வாங்கிக் கொடுப்பதில்லை. படிக்க புஸ்தகம் வேண்டும் என்றால், உடனே அதை வாங்கிக் கொடுக்கிறான். அதுபோல, ஒருவன் மோக்ஷம் வேண்டும் என்று முறைப்படி கேட்டால், கேட்ட காலத்தில் தைவம் அதைக் கொடுக்கிறது. (மோக்ஷத்தை கொடுக்க அந்த தைவத்தால் மட்டுமே முடியும். தேவதைகளால் அன்று...) இந்த உலகத்திலாவது, சுவர்க்கத்திலாவது அனுபவிக்க கூடிய சுகங்களை கேட்டால் உடனே கொடுப்பதில்லை.

தைவத்தினுடைய இந்த அபிப்ராயத்தை தெரியாமல், ஜனங்கள் எப்படியாவது தங்களுக்கு வேண்டிய பலன்களை அடைய முயற்சி செய்வார்கள். தகாத வழியில் போய் கெட்டுப் போவார்கள். இதை நினைத்து, தேவதைகளுக்கு அதிகாரம் கொடுத்து அவர்களை கொண்டு மக்களுக்கு திருப்தி பண்ணி வைக்கிறது.

(மேலும் வரும்...)

- ஸ்ரீ உ.வே. V.K. ராமநுஜாச்சார்யர் ஸ்வாமி உரையிலிருந்து ஒரு பகுதி...

7 comments:

VSK said...

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்!

தேர்தலுக்குப் பின் நானும் வருவேன் இங்கு!

By the way, i had sent you a mail. Did you get it?

ஜயராமன் said...

SK உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

தங்களின் முயற்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வளையத்தில் நல் விழயங்களை கற்றும் கற்பித்தும், நம் இந்துமத்த்தின் தன்னிகரில்லாத தனித்தன்மையை தெளிவுபடுத்தவும் தங்களைப் போன்ற பல இதயங்கள் இப்போது அவசியம் தேவை.

தங்கள் மெயிலை பார்த்ததாக நினைவில்லை. மன்னிக்கவும். கிட்டவில்லை என்று நினைக்கிறேன். தாங்கள் ஈமெயில் அட்ரஸ் பின்னோட்டமாய் பதியுங்கள்.

தங்களுடன் ஆவலுடன் தொடர்பு கொள்ளுவேன்

நன்றி

ஞானவெட்டியான் said...

அன்பு ஜயராமன்,
முன்னோர்கள் எழுதிவைத்ததை இவ்விடுகையின் மூலம் வெளியிட்டுள்ளீர்கள். நம்புபவர் நம்பட்டும்.

வஜ்ரா said...

நல்ல முயற்ச்சி, தொடருங்கள் திரு. ஜெயராமன் அவர்களே...

தெய்வம்!! அல்லது தைவம்! எது சரியான எழுத்துச்சேர்க்கை?

एकम् सत् विप्रा: बहुधा वदन्ति என்பது, உபணிடத conception என்று நினைத்திருந்தேன். நீங்கள் அது ரிக் வேதத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஷங்கர்.

Srikanth said...

1. The article is very good. However, can you also write a bit about the upanyasaka Sri. V.K. Ramanujacharyar swamy. I haven't had a chance to listen to his lectures. Would like to know about him.

2. Paramacharya also has explained about this pluralistic worship in his own impeccable style. I am sure you must be aware of that. :)

3. In the end it is, "Sarvam kalpitham brahma", isn't it?

வாசகன் said...

Did U Read
http://suvanappiriyan.blogspot.com/2006/04/blog-post_114736724168527676.html

http://suvanappiriyan.blogspot.com/2006/05/2.html

சிறில் அலெக்ஸ் said...

ஒரே இறைவனை வழிபடுவதுதான் சிறந்த வழிபாடென யார் சொல்வது?
ஏன் இந்துக்கள் நாங்களளும் ஒரே கடவுளைத்தான் வழிபடுகிறோம் எனச் சொல்லவேண்டும்?
'நான் எத்தனைக் கடவுளை வேண்டினா உனக்கென்ன?' என்பதே சரியான பதிலென நினைக்கிறேன்.

பி. கு. நீங்கள் எழுதியிருப்பது சில இடங்களில் புரியவில்லை.